July 31, 2026
  • July 31, 2026
Breaking News
  • Home
  • Uncategorized
  • கொரோனா விலிருந்து மீண்ட விஜய் பட இயக்குனர் – மீள உதவி செய்த தயாரிப்பாளர்கள்
June 16, 2020

கொரோனா விலிருந்து மீண்ட விஜய் பட இயக்குனர் – மீள உதவி செய்த தயாரிப்பாளர்கள்

By 0 863 Views

உலகெங்கும் வியாபித்து உள்ள கொரோனா வைரஸ் சினிமா காரர்களையும் விட்டுவைக்கவில்லை. இதில் பாதிக்கப்பட்டு பல பிரச்சனைகளுக்கு பின் மீண்டுள்ளார் விஜய் நடித்த தமிழன் படத்தை இயக்கிய மஜீத்.

KJR Studios Rajesh

KJR Studios Rajesh

கடந்த சில தினங்களுக்கு முன் covid-19 வைரசால் பாதிக்கப்பட்ட மஜீத் வடபழனியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகும் என்று கேட்டு அறிந்து கொண்டே சிகிச்சைக்கு ஒத்துக்கொண்டார்.

ஆனால் சிகிச்சை முடிவடைந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகம் செட்டில் செய்ய சொன்ன பில்லை பார்த்து அதிர்ச்சிக்கு ஆளானார் மஜீத்.

Amma Creations T.Siva

Amma Creations T.Siva

அவர் கையிலிருந்த தொகைக்கு இரட்டிப்பாக மருத்துவக் கட்டணம் வந்த நிலையில் எப்படி பணத்தை செட்டில் செய்து டிஸ்சார்ஜ் ஆவது என்று புரியாமல் குழம்பி இருக்கிறார். விஷயம் கேள்விப்பட்ட அம்மா கிரியேஷன்ஸ் சிவா ஒரு தொகையை கொடுத்து அவரை மீட்க வழி செய்திருக்கிறார்.

ஆனால் துரதிஷ்டவசமாக அந்த தொகையும் போதாமலிருக்க இன்னொரு தயாரிப்பாளரான கேஜேஆர் ஸ்டுடியோஸ் ராஜேஷ் உடனடியாக முழு பணத்தையும் செட்டில் செய்து மஜித்தை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்.

கொரோனா விலிருந்து மீண்டும் பணத்தை செட்டில் செய்ய முடியாமல் அவதிப்பட்ட மஜீத் இப்போது நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டு வீட்டில் ஓய்வெடுக்கிறார். இதற்கு காரணமான தயாரிப்பாளர்களுக்கு அவர் நன்றியும் சொல்லி இருக்கிறார்.

உதவிய அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி..!