சசிகுமாரின் ‘சுப்ரமணியபுரத்’தை மிஞ்சிய ஒரு கதை அதற்குப்பின் இதுவரை தமிழில் வந்ததில்லை என்று சொல்லலாம். ஏன்..? அவரே கூட அதை மிஞ்சிய ஒரு கதையை இதுவரை எழுதவில்லை. ஆனால், எதனால் அவர் ரசிக்கப்பட்டாரோ அதை மறந்து தன்னை ஒரு ஆக்ஷன் ஹீரோவாகக் காட்டிக்கொள்ள தேய்ந்து தேய்ந்து வழக்கமான கமர்ஷியல் ஃபார்முலாவுக்குள் வந்துவிட்ட அவர் இப்போது ஒரு திருட்டுக்கதையில் நடித்து வருவதாக வந்த செய்தி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. அவரை அப்படி சிக்க வைத்திருப்பவர் இயக்குநர் பொன்ராம். அவர் […]
Read Moreகளஞ்சியம் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சாம்பியன்’. நடுத்தர மக்களின் வாழ்வியலோடு இணைந்த, வட சென்னை மக்களின் கால்பந்து விளையாட்டை அதன் அத்தனை இயல்புகளோடும் மக்களின் வாழ்வியலை கலந்து இப்படத்தை உருவாக்கியுள்ளார் சுசீந்திரன். விஷ்வா இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். மிருணாளினி, சௌமிகா ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். மனோஜ், நரேன், ஸ்டண்ட் சிவா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டில் பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தியதிலிருந்து… டி.ராஜேந்தர் பேசியதாவது… […]
Read Moreமுன்பெல்லாம் நடிகைகள் ஒரு போட்டோ ஷூட் நடத்தி அந்தப் படங்களை ஆல்பமாக்கி தங்கள் மேனேஜரிடம் கொடுத்து வைப்பார்கள். தங்கள் படத்துக்குப் பொருத்தமான நடிகைகளைத் தேடும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களிடம் அந்த ஆல்பங்களைக் காட்டி மேனேஜர்கள் சம்பந்தப்பட்ட நடிகைகளுக்கு வாய்ப்பைப் பெற்றுத் தருவார்கள். இது பின்னாளில் சிடியாக மாறியது. பிறகு லேப் டாப்பில், மெயிலில் என்று தொழில்நுட்ப மாறுதலுக்கு உள்ளான இந்த தேடல் முயற்சி இப்போது மேனேஜர்கள் தயவில்லாமல் நடிகைகள் தாங்கலே தங்கள் சமூக வலைதளங்களில் வீடியோ ஷூட் […]
Read Moreலெஜன்ட் என்ற பட்டத்துடன் தன் பிரமாண்டமான சரவணா ஸ்டோர்ஸின் விளம்பரங்களில் முன்னணி ஹீரோக்களை நடிக்க வைக்காமல் தானே நடித்து புகழ் தேடிக்கொண்டவர் சரவணன். அவர் நடிக்க ஆரம்பித்ததும் சிரித்தவர்களே அதிகம். ஆனால், அதுவே அவருக்கு ஹீரோக்களை விடவும் பெரும்புகழ் பெற்றுத் தந்தது. ஆரம்பத்தில் அடக்க ஒடுக்கமாக விளம்பரங்களில் வந்தவர், பின்னர் முன்னணி ஹீரோயின்களுடன் நடனமாடி நடிக்கும் அளவுக்கு முன்னேறினார். விளம்பரங்களில் வெற்றி பெற்ற தைரியத்துடன் இப்போது சினிமாவுக்குள் பிரவேசிக்கிறார் லெஜன்ட் சரவணன். யாரை வேண்டுமானாலும் பணத்தை வாரியிறைத்துப் […]
Read More‘சேது’ படம் மூலமாகத்தான் சீயான் என்ற பெயரே ஒட்டுமொத்த ரசிகர்களுக்கு அறிமுகமானது. ‘சீயான்’ என்றால் என்ன என்று இயக்குநர் பாலாவிடம் கேட்டபோது அவர் பதில் சொல்லவில்லை. அதன் அர்த்தம் ‘பெரிசு’ என்பதாகும். இப்போது ஒரு சீயான் அல்ல… 7 சீயான்களை வைத்து ஜி.கரிகாலன் தயாரித்துள்ள படம் ‘சீயான்கள்’. இப்படத்தை இயக்குநர் வைகறை பாலன் இயக்கியுள்ளார். “வயது முதிர்ந்த, கிராமத்து முதியவர்கள் 7 பேரின் வாழ்வில் நடக்கும் கதையை, நம் மண் மணம் மாறமல் கூறும் படமாக உருவாகியுள்ளது. […]
Read More