July 5, 2025
  • July 5, 2025
Breaking News
December 1, 2019

லெஜன்ட் சரவணன் பிரமாண்டமாய் படம் தொடங்கினார்

By 0 1254 Views

லெஜன்ட் என்ற பட்டத்துடன் தன் பிரமாண்டமான சரவணா ஸ்டோர்ஸின் விளம்பரங்களில் முன்னணி ஹீரோக்களை நடிக்க வைக்காமல் தானே நடித்து புகழ் தேடிக்கொண்டவர் சரவணன்.

அவர் நடிக்க ஆரம்பித்ததும் சிரித்தவர்களே அதிகம். ஆனால், அதுவே அவருக்கு ஹீரோக்களை விடவும் பெரும்புகழ் பெற்றுத் தந்தது.

ஆரம்பத்தில் அடக்க ஒடுக்கமாக விளம்பரங்களில் வந்தவர், பின்னர் முன்னணி ஹீரோயின்களுடன் நடனமாடி நடிக்கும் அளவுக்கு முன்னேறினார்.

விளம்பரங்களில் வெற்றி பெற்ற தைரியத்துடன் இப்போது சினிமாவுக்குள் பிரவேசிக்கிறார் லெஜன்ட் சரவணன்.

யாரை வேண்டுமானாலும் பணத்தை வாரியிறைத்துப் பெற்றுவிடலாம் என்று கணக்குப் போட்டாலும் அவருடன் நடிக்க முன்னணி நடிகைகள் தயங்கியதால் அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டு ஒரு புதுமுகத்துடன் அரங்கேறுகிறார் லெஜன்ட்.

அந்த  நடிகை கீத்திகா திவாரி. நாயகிதான் புதிதானவரே தவிர படத்தில் பிரபு, விவேக் விஜயகுமார், நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட் என்று அனுபவம் வாந்த நடிகர்கள் பட்டாளம் அவருடன் கை கோக்கிறார்கள்.

இரட்டை இயக்குநர்கள் ஜேடி ஜெர்ரி படத்தை இயக்க, டெக்னிக்கலாக சவுண்டான டீமுடன் களம் இறங்குகிறார் லெஜன்ட். இசையை ஹாரிஸ் ஜெயராஜ் அமைக்க, ஒளிப்பதிவைக் கையாள்பவர் வேல்ராஜ். 

சவுன்டான டெக்னிகல் டீம் கிடைத்துவிட்டால் அதுவே பாதி வெற்றி என்ற சூத்திரத்தைப் புரிந்துகொண்டு நடிக்க இறங்கும் லெஜன்ட் சரவணனை வாழ்த்துவோம்.

ஆனால், மற்ற தொழில்களைப் போல் எளிதாக வென்றுவிடும் களம் அல்ல சினிமா என்று அவர் சீக்கிரமே புரிந்துகொள்வார் அல்லது சினிமாவிலும் நான் ஜெயிப்பேன் என்று வென்று காட்டினால் அவரை நாம் புரிந்துகொள்வோம்..!

Saravana Stores Saravanan Movie Inauguration

Saravana Stores Saravanan Movie Inauguration