பெண்களைப் பெற்றவர்களுக்கு பாடம் சொல்லும் படம். பெண்ணைப் பெற்றோமா கல்யாண வயது வரை வளர்த்தோமா யாருக்காவது திருமணம் முடித்துவிட்டு நம் கடமையை முடித்தோமா என்றெல்லாம் இல்லாமல் பெண் குழந்தைகளை கவனமாக வளர்த்து அவர்கள் வாழ்க்கையை திட்டமிடுங்கள் என்று அறிவுரை சொல்கிறது படம். பல படங்கள் இயக்கிய அனுபவம் பெற்ற எஸ். பி.பகவதிபாலா இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். ஆனால் இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் பட்ஜெட்டும் குறுகிப் போக, அனைவரும் புது முகங்கள் என்பதும் நெருக்கடி கொடுக்க… ஆனால்… தான் […]
Read Moreதலைப்பைப் பார்த்தாலே இது ஒரு சீக்வல் படம் என்பது புரிந்துவிடும். ஆக இதற்கு முன் இதே வரிசையில் இரு படங்கள் வந்திருக்கின்றன என்று சொல்லத் தேவையில்லை அல்லது தேவைப்பட்டால் சொல்லலாம். ஆனால் முன்னவற்றைப் பார்க்காமல் தனியாகப் பார்த்தாலும் இது ஒரு மர்டர் மிஸ்டரி படமாக ரசிக்கும் விதமாக இதனைப் படமாக்கி இருக்கிறார் இயக்குநர் தேவி பிரசாத் ஷெட்டி. இன்ஸ்பெக்டர் சீதாராம் இதில் வினோதமான தொடர் கொலைகளைச் சந்திக்கிறார். சற்றே வயது முதிர்ந்தவர்கள் கொடூரமாகக் காயப்படுத்தப்பட்டு பின் கொல்லப்படுகிறார்கள். […]
Read Moreஇந்திய திரையுலகம் மறக்க முடியாத வரலாற்று தருணத்தை காணத் தயாராகிறது. இந்திய சினிமாவின் இரு பெரும் நாயகர்கள் — ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் — 47 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரே படத்தில் இணைகின்றனர். தற்காலிகமாக “KHxRK” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மாபெரும் திரைப்படம், ரசிகர்களுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் சிறப்பான திரை அனுபவமாக அமையும். 1970களின் இறுதியில் கடைசியாக இணைந்து நடித்த இந்த இரு திரை ஜாம்பவான்கள், தற்போது மீண்டும் இணைவது இந்திய திரைப்பட வரலாற்றில் […]
Read Moreமாங்காடு அம்மன் மூவிஸ் சார்பில் ராஜகணபதி தயாரிப்பில் உருவாகியுள்ள ஏ படம் பிப்ரவரி 27 அன்று திரைக்கு வருகிறது..! படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் தொல் திருமாவளவன்..! மாங்காடு அம்மன் மூவிஸ் சார்பில் ராஜகணபதி தயாரிப்பில் கேஷ்லெஸ் ஷிவாகோ இயக்கத்தில் ஜோஸ் பிராங்கிளின் இசையில் சதீஷ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள திரைப்படம் ஏ படம்.. இப்படம் விவசாய புரட்சியையும், கார்ப்பரேட்டின் விவசாய மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறது என்ற மையக்கருத்தையும் மிக அழுத்தமாக பதிவு செய்துள்ள திரைப்படம்தான் இந்த ஏ […]
Read Moreகிரைம் திரில்லர் வகைப் படங்களின் சீசன் இன்னும் முடிவடையவில்லை என்பதற்கு சாட்சியாக வந்திருக்கும் படம். ஊர் ஊராக மாற்றலாகி கொண்டிருக்கும் நேர்மையான போலீஸ் அதிகாரி ஆனந்த் நாக் இப்போது நெய்வேலி பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்கின்றார். வரும் வழியிலேயே பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்படும் ஒரு பெண்ணை மீட்கிறார். அவர் பொறுப்பேற்ற இரண்டொரு நாட்களிலேயே ஒரு கொலை நடக்கிறது. அது விபத்தா கொலையா என்று விசாரணை நடைபெறும் போது இன்னொரு கொலை நடக்க, அது தொடர்பாக ஒரு பாலியல் […]
Read Moreபுதுமுகங்களை வைத்துப் படம் எடுப்பது இப்போதைய சினிமா இருக்கும் சூழலில் ஆக்ஸா பிளேடு மேல் நடக்கிற சமாச்சாரம். அப்படி புது முகங்கள் ஆதவ் கிருஷ்ணா, சிம்ரனை நாயகன், நாயகியாக வைத்து ஒரு த்ரில்லிங்கான காதல் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஆர் மகாலஷ்மி முருகன். நாயகன் ஆதவ் கிருஷ்ணா சீனியராக இருக்கும் கல்லூரியில் ஜூனியர் ஆக வந்து சேரும் சிம்ரன் ரவுடிகளிடம் இருந்து தன்னை காப்பாற்றிய நன்றிக்காக நட்புக் கொண்டு ஆதவ்வைக் காதலிக்க ஆரம்பித்து விடுகிறார். ஆரம்பத்தில் ஒதுங்கிப் […]
Read Moreஇலங்கையின் வாழ்வியல் பின்னணியில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கயல் வின்சென்ட், டிஜே பானு, நிழல்கள் ரவி, அருள்தாஸ், சுதர்சன், ஷாமி நடித்துள்ளனர். சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஷ்வர் இயக்கி உள்ளனர்.ஒளிப்பதிவு ரிஷி செல்வம்,எடிட்டிங் சுரேஷ் ஏ பிரசாத் , கலை இயக்கம் கலா மோகன். தயாரிப்பு : கலைவளரி சகா. ரமணதாஸ், சுகந்தினி. இணைத் தயாரிப்பாளர்கள் : விஜய் பாலசிங்கம், ஸ்ரீஸ்கந்தராஜா, விக்கி. மார்ச் மாதம் வெளியாக இருக்கும் இத்திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு […]
Read More