சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி வரும் ‘தங்கலான்’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக பட குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘தங்கலான்’. இதில் சீயான் விக்ரம், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி, முத்துக்குமார், ஹரி கிருஷ்ணன், ப்ரீத்தி, அர்ஜுன் பிரபாகரன் மற்றும் ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிஷோர் குமார் […]
Read More‘விடியும் முன்’ என்ற ஒரு மர்டர் மிஸ்டரி படத்தை ஆங்கிலப் படத்துக்கு இணையாக உருவாக்கியிருந்த இயக்குனர் பாலாஜி கே.குமார் இப்போது ‘கொலை’ என்ற படத்தில் விஜய் ஆண்டனியுடன் கைகோர்த்து இந்த மாதம் 21ஆம் தேதி தியேட்டருக்கு வருகிறார். இந்நிலையில் தயாரிப்பாளர்கள் தனஞ்ஜெயன், கமல் போரா, தயாரிப்பாளரும் நடிகருமான சித்தார்த் சங்கருடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் பாலாஜி குமார். “சிறிய வயதில் இருந்தே மர்டர் மிஸ்டரி படங்கள் மேல் எனக்கு அதீதக் காதல் உண்டு. அப்படித்தான் இந்தக் கதையையும் எழுத […]
Read Moreமாடலிங் துறையில் எட்டு வருட அனுபவம் கொண்ட டாலி ஐஸ்வர்யா விரைவில் வெளியாக இருக்கும் சாதனைப் படமான ‘கலைஞர் நகர்’ படம் மூலம் மற்றொரு நாயகியாக அறிமுகமாகிறார். அது மட்டுமல்ல ஒரே சமயத்தில் இன்னும் மூன்று படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் ‘கலைஞர் நகர்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. SR பிலிம் பேக்டரி சார்பில் சிவராஜ் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குநர் சுகன் குமார் என்பவர் இயக்கியுள்ளார். நரேஷ் இசையமைத்துள்ள இந்தப்படத்திற்கு இளையராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். […]
Read Moreதமிழில் இருக்கும் பெண் இயக்குனர்களில் முக்கியமானவர் லஷ்மி ராமகிருஷ்ணன். ‘ஆரோகனத்’தில் தொடங்கிய அவரது இயக்கப் பயணம் இப்போது வெளிவரவருக்கும் ‘ஆர் யூ ஓகே பேபி?’ வரை தொடர்கிறது. மங்கி கிரியேட்டிவ் லேப் பிரைவேட் லிமிடெட் சார்பில் ராம கிருஷ்ணன் தயாரிக்க, இயக்குனர் ஏ.எல்.விஜய் இணை தயாரிப்பாளராக இணையும் படம் இது. படத்தைத் தயாரிக்கும் ராமகிருஷ்ணன் வேறு யாருமில்லை, லஷ்மியின் கணவர்தான். லஷ்மியும் அவரது கணவரும் ஏ.எல். விஜய்யுடன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள். “அதென்ன ஆங்கிலத்தில் டைட்டில் வைத்து விட்டீர்கள்..?” […]
Read More“ராயர் பரம்பரை” திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு !! CHINNASAMY CINE CREATIONS சார்பில் சின்னசாமி மௌனகுரு தயாரிப்பில், ராம்நாத் T இயக்கத்தில் கிருஷ்ணா, சரண்யா, கிருத்திகா, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா நடிப்பில் காமெடி கலந்த கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “ராயர் பரம்பரை”. மேலும் இப்படத்தில் கஸ்தூரி, KR விஜயா, RNR மனோகர், பாவா லக்ஷ்மணன், ஷேஷு, பவர் ஸ்டார் ஶ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் ஜூலை 7ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. […]
Read Moreஅப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட், எப்ரியஸ் ஸ்டுடியோ எல்எல்பி, E4 எக்ஸ்ப்ரிமண்ட்ஸ் எல் எல் பி ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் நடிப்பில் வெளியான பரபரப்பான சைக்கோ திரில்லர் படம் “போர் தொழில்”. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் திரையரங்குகளை திருவிழாக்கோலமாக மாற்றியிருக்கிறது. இன்று வரையிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகத் திரையரங்குகளை ஆக்கிரமித்திருக்கும் இப்படத்தின் வெற்றி விழா, இன்று சென்னையில் உள்ள முன்னணி நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. […]
Read More“சமூக நீதியும், உரிமையும் விட்டுக் கொடுத்து வருவதல்ல…” என்ற கருத்தைக் கடத்த புனையப்பட்டிருக்கும் அரசியல் படம் இது. மிகவும் முக்கியமான இந்தக் கருத்தைச் சரியாகக் கட்டமைத்திருக்கிறாரா இயக்குனர் மாரி செல்வராஜ் என்பதைப் பார்க்கலாம். சேலம் மாவட்டம் காசிபுரம் என்ற ரிசர்வ் தொகுதியில் ஆளும்கட்சி எம்.எல்.ஏ வாக இருக்கிறார் பட்டியல் இனத்தைச் சேர்ந்த (மாமன்னன்) வடிவேலு. அவரது மகன் அதிவீரனாக வரும் பட்டதாரியான உதயநிதி ஸ்டாலின், அடிவகை தற்காப்புக் கலை ஆசானாகவும், பன்றிகள் வளர்ப்பதில் ஆர்வமுள்ளவராகவும் வருகிறார். இன்னொரு […]
Read More