மலைவாசஸ்தலம் ஒன்றில் ஊசியிலை மரக் காடுகளுக்குள் நாயகி விதிஷாவை ஒரு மர்ம நபர் கொலை வெறியுடன் துரத்த அவர் கொலையுண்டாரா இல்லையா என்பதிலிருந்து பிளாஷ் பேக் தொடங்குகிறது.
அதே மலையும் மலை சார்ந்த நகரில் அண்ணன், அவன் மனைவி, தம்பி, தங்கை விதிஷா இவர்களின் பாட்டி என்று ஒரு பாசமுள்ள குடும்பம் வாழ்ந்து வருகிறது. நாயகன் ஷாவுக்கும் நாயகி விதிஷாவுக்கும் காதல் பிறக்க, ஷாவும் அவர்கள் குடும்ப உறவினர் என்று தெரிகிறது.
அந்தக் காதலுக்கு குடும்பம் பச்சைக்கொடி காட்ட அவர்களின் நிச்சயதார்த்தம் வரை மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருக்கிறது வாழ்க்கை. ஒட்டுமொத்த குடும்பத்தின் தேவைகளையும் அன்பான அண்ணியே தாங்குகிறார்.
ஒரே ஒரு குறை என்றால் அண்ணனுக்கும், அண்ணிக்குமான இல்லற உறவு திருப்தி இல்லாமல் அவர்களுக்கு வாரிசு இல்லாமல் இருக்கிறது. ஆனால் அதுவும் ஒரு கட்டத்தில் சீராகி அண்ணனும், அண்ணியுடன் அன்னியோன்யமாகி விடுகிறார்.
கோடீஸ்வரர்களாக வாழ்ந்து வரும் அண்ணனுக்கும், தம்பிக்கும் இடையில் பணப் பகிர்தலில் அடிக்கடி பிரச்சினை எழுந்து வருகிறது. அண்ணனே தொழில்களை கவனிக்க, தம்பி ஊதாரித்தனமாக மது, மாது என்று பணத்தைக் கணக்கில்லாமல் செலவு செய்ய, இது தொடர்பாக இருவரும் ஒருவரை ஒருவர் பகைமை பாராட்டுகின்றனர்.
இந்நிலையில் அவர்கள் வாழ்ந்து வரும் வீட்டுக்குள் ஏதோ ஒரு அமானுஷ்யம் நடப்பதாக அண்ணி உணர்கிறார். அதைத்தொடர்ந்து பாட்டி மர்மமான முறையில் படுக்கையில் இறந்து போகிறார். தொடர்ந்து தம்பியும், அதைத் தொடர்ந்து அண்ணனும் இறக்க, துப்பு துலக்க வரும் போலீசும் கையைப் பிசைய, பரிதவிக்கும் இளம் ஜோடியின் முடிவு என்ன என்பதைப் பரிதவிப்புடன் சொல்லி முடிக்கிறார் இயக்குனர் ஜவகர்லால்.
இளம் நாயகனாக அறிமுகம் ஆகியிருக்கும் ஷாவுக்கு அந்த அறிமுகப் பதட்டம் இருக்கிறது.