September 9, 2026
  • September 9, 2026
Breaking News
June 6, 2019

பணமதிப்பிழப்பு மோசடிகளை தோலுரிக்கும் படம்

By 0 886 Views

கடந்த 2016 ம் ஆண்டு நவம்பர் 8 ம் தேதி இரவு 8 மணியளவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானது.

அதைத் தொடர்ந்து பெரும் புள்ளிகள் அவர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை எப்படி இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாக மாற்றினார்கள், அதனால் மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டார்கள், இந்த அறிவிப்பை பயன்படுத்தி எப்படி குறுக்கு வழியில் மோசடி செய்தார்கள், இந்த அறிவிப்பு சரியா? தவறா? என்பதை கிரைம் மற்றும் திரில்லருடன் கமர்ஷியல் கலந்து உருவாகியுள்ள படம்தான் ஜேசிஎஸ் மூவீஸ் தயாரித்திருக்கும் ‘மோசடி.’

இந்த படத்தில் விஜூ நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக பல்லவி டோரா நடித்துள்ளார். ஒளிப்பதிவை ஆர்.மணிகண்டன் ஏற்க, ஷாஜகான் இசையமைத்திருக்கிறார். கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கும் கே.ஜெகதீசன், “இது முழுக்க முழுக்க உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படம்..!” எங்கிறார்.

தேர்தலுக்கு முன் வந்திருக்கலாம்..!