கடந்த சில தினங்களுக்கு முன் திமுக பிரமுகரின் இல்ல திருமண நிகழ்வுக்கு ஸ்ரீ ரங்கம் சென்ற திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அங்கு அரங்கநாத சுவாமி கோவில் வாசலில் அளிக்கப்பட்ட பூரணகும்ப மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதுபற்றி பிற கட்சிப் பிரமுகர்களும், வலை தளங்களிலும் பலவாறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
ஸ்டாலின் கோவிலுக்குச் செல்லவில்லை எனவும், அவர்களாக முன்வந்து அளித்த மரியாதையை ஏற்றுக்கொண்டார் எனவும் திமுக தரப்பில் சொல்லப்படும் நிலையில் இன்று பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார் மு.க.ஸ்டாலின் ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்றது குறித்து கேட்டபோது கூறிய பதில்…
“ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்ற குமாரசாமி கர்நாடக முதல்வர் ஆனதால், ஸ்டாலினும் தமிழக முதலமைச்சர் ஆகிவிடலாம் என நினைக்கிறார். ஸ்ரீரங்கம் போனால் மட்டும் சிஎம் ஆக முடியாது. மக்கள் நினைத்தால்தான் சிஎம் ஆக முடியும். கடவுள் பக்தி விவகாரத்தில் தி.மு.க.வின் கொள்கை என்ன என தெரியவில்லை..!”
Still Used from File…