November 23, 2024
  • November 23, 2024
Breaking News
  • Home
  • முக்கிய செய்திகள்
  • முதுகு மற்றும் கழுத்து வலிக்கு மோசமான வாழ்க்கை முறையே காரணம் – காவேரி மருத்துவமனை
September 20, 2024

முதுகு மற்றும் கழுத்து வலிக்கு மோசமான வாழ்க்கை முறையே காரணம் – காவேரி மருத்துவமனை

By 0 143 Views

முதுகு மற்றும் கழுத்துவலி மேலாண்மை மீது விழிப்புணர்வை ஏற்படுத்த காவேரி மருத்துவமனை நடத்தும் ‘ஸ்பைன் ரீசார்ஜ்’ செயல்திட்டம்…

சென்னை: 19 செப்டம்பர் 2024: ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் இயங்கி வரும் காவேரி ஸ்பைன் இன்ஸ்டிடியூட், “ஸ்பைன் ரீசார்ஜ்” என்ற பெயரில் ஒரு புதிய திட்டத்தை தொடங்கியிருக்கிறது.

முதுகுத்தண்டு மற்றும் மூளை நரம்பியல் துறையின் முதுநிலை அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர். ஜி. பாலமுரளி அவர்களின் தலைமையின் கீழ் இயங்கி வரும் இம்மையம் நடத்தும் இந்நிகழ்வானது, முதுகு மற்றும் கழுத்துவலியைத் தவிர்த்து, ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்துவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை உருவாக்குவதை நோக்கமாக கொண்டிருக்கிறது.

சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூலக கலையரங்கத்தில் 2024 செப்டம்பர் 21 மாலை 5 மணி முதல், இரவு 8 மணி வரை இந்நிகழ்வு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க நுழைவுக் கட்டணம் இல்லை.

உலகளவில் மருத்துவமனை வருகைக்கான இரண்டாவது மிகப்பொதுவான காரணமாக இருப்பது முதுகு மற்றும் கழுத்துப் பிரச்சனைகளே. 40 வயதிற்குப் பிறகு, 10 நபர்களில் 8 பேர் முதுகு மற்றும் கழுத்துப் பிரச்சனைகளினால் அவதிப்படுவதாக மதிப்பிடப்படுகிறது.

இப்பிரச்சனைகளுள் ஏறக்குறைய 95%, தீவிரமான பாதிப்புகளாக இருப்பதில்லை; பணி, செயல்நடவடிக்கை, உடல் தோரணை, காயம் அல்லது உடற்பருமன், புகைப்பிடித்தல் மற்றும் சோம்பேறித்தனமான வாழ்க்கைமுறை ஆகியவற்றோடு தொடர்புடைய வாழ்க்கைமுறை பிரச்சனைகளினால் தான் முதுகு மற்றும் கழுத்து வலி பெரும்பாலும் ஏற்படுகிறது. இப்பிரச்சனைகளுக்கு மருத்துவர்கள், இயன்முறை சிகிச்சை நிபுணர்கள், யோகா, ஆயுர்வேதம், வர்மம், அக்குபஞ்சர் சிகிச்சையாளர்கள் மற்றும் மாற்று மருத்துவமுறை சிறப்பு நிபுணர்கள் சிகிச்சை வழங்கி வருவதால், இதற்கு உரிய வழிமுறை குறித்து மக்கள் மத்தியில் பல தவறான கண்ணோட்டங்களும், புரிதல்களும் இருக்கின்றன.

வலியை எப்படி சமாளிப்பது, செயல்பாடுகளை எப்படி குறைப்பது, எப்படி உடலை வளைப்பது, தரையில் அமர்வது, உடற்பயிற்சிகளை தவிர்ப்பது, தலையணை வைத்துக்கொள்வதை தவிர்ப்பது, பெல்ட் அணிவது ஆகியவை உட்பட, பல்வேறு விஷயங்களில், பல கட்டுக்கதைகளும், உண்மையற்ற தகவல்களும் உலவுகின்றன. இத்தகைய பிரச்சனைகளுக்கு உலகளவில் தரநிலைப்படுத்தப்பட ஒரே மாதிரியான சிகிச்சை என்று எதுவும் இல்லை. பொதுமக்களுக்கு குழப்பமே ஏற்படுகிறது. பல நேரங்களில் அவர்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றன.

இந்தியாவில் வீட்டு வேலைகளது தன்மையின் காரணமாக முதுகு மற்றும் கழுத்து வலியினால் அவதிப்படும் அதிக வாய்ப்புள்ளவர்களாக பெண்கள் இருக்கின்றனர். தகவல் தொழில்நுட்ப துறையின் தலைநகரமாகவும் நமது நாடு திகழ்கிறது. இளம் பணியாளர்கள் ஒவ்வொரு நாளும் 8 முதல் 12 மணி நேரங்களுக்கும் அதிகமாக ஒரே இருக்கையில் அமர்ந்து தொடர்ச்சியாக பணியாற்ற வேண்டியிருக்கிறது.

மனித உழைப்பு தேவைப்படும் தொழிலகங்களில் சுவைகளை கூட்டுவது, பணியின்போது உடல்தோரணை ஆகியவை மீது பணியிட ஒழுங்குவிதி எதுவும் செயல்படுத்தப்படுவதில்லை. பிற முன்தடுப்பு நடவடிக்கைகளும் பின்பற்றப்படுவதில்லை. மோசமான சாலை மற்றும் வாகன பராமரிப்பு நிலைகளும், முதுகு காயம் மற்றும் வலிக்கு பங்களிப்பை வழங்குகின்ற மற்றொரு முக்கிய காரணமாக இருக்கிறது.

முதுகு மற்றும் கழுத்து வலி ஒரு கடுமையான பொருளாதார சுமையாக இருப்பதோடு, உலகளவில் பணிக்கு வரவிடாமல் செய்கின்ற, திறனிழப்பை ஏற்படுத்துகின்ற முதன்மை காரணமாகவும் இருக்கிறது. சுகாதார சிகிச்சை மேலாண்மை, பணி நேரங்கள் இழப்பு மற்றும் இழப்பீடு ஆகியவற்றில் நூற்றுக்கணக்கான பில்லியன் தொகையை உலகளவில் அரசுகள் செலவிடுகின்றன. மனச்சோர்வு, கலக்கம், தனிமை உணர்வு, விவாகரத்து மற்றும் தற்கொலை ஆகியவற்றிற்கு இட்டுச்செல்கின்ற கடுமையான மனநல பாதிப்புகளையும் முதுகு பிரச்சனைகள் ஏற்படுத்துகின்றன.

விளையாட்டோ, உடலுழைப்போ இல்லாத குழந்தைகள் மிக கனமான புத்தக சுமைகளை சுமக்க வேண்டியிருப்பது கடும் பிரச்சனைகளை உருவாக்குகிறது. உலகெங்கிலும் உடற்பருமனும் அதிகரித்து வருகிறது; முதுகு மற்றும் கழுத்துப் பிரச்சனைகளுக்கு முக்கியமான காரணமாக இதுவும் இருக்கிறது,

“பிரச்சனைகளை ஆரம்ப நிலையிலேயே எப்படி அடையாளம் காண்பது, ஆரோக்கியமான முதுகுத்தண்டைப் பேணுவதற்கு ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்துவதற்கு தேவையான உரிய நடவடிக்கைகளை எப்படி எடுப்பது குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்துவது மீதும் சிகிச்சை முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும்.” என்கிறார் எலும்பியல் மற்றும் முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர். கீர்த்திவாசன்.

“காவேரி மருத்துவமனையில் முதுகுவலிக்கு மிக நவீன சிறு துளை
மற்றும் எண்டோஸ்கோப்பிக் அறுவைசிகிச்சைகளை நாங்கள் வழங்கி வருகிறோம். அத்துடன், பல்வேறு முன்னெடுப்புகள் வழியாக, அறுவைசிகிச்சை அல்லாத சிகிச்சைகளையும் மற்றும் முதுகுத்தண்டு மறுவாழ்வு நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம்.” என்கிறார் எலும்பியல் மற்றும் முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர். S. சோமசுந்தர்.

“முதுகு மற்றும் கழுத்துப் பிரச்சனைகள் கடுமையான பொது சுகாதார பிரச்சனைகளாக உடல் சார்ந்த, உளவியல் சார்ந்த மற்றும் பொருளாதார ரீதியிலான அழுத்தத்திற்கும், பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கின்றன. நமது சமூகத்தில் மிக அதிகமாக காணப்படுகின்ற முதுகு மற்றும் கழுத்துப் பிரச்சனைகள் வராமல் தடுப்பதற்கு ஒழுங்குவிதிகளை வகுக்கவும், கொள்கைகளை செயல்படுத்தவும் நிறுவனங்களும், அரசும், சுகாதாரத்துறை பணியாளர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

ஸ்பைன் ரீசார்ஜ் என்ற இத்திட்டத்தின் மூலம் அதிகம் பேசப்படாத இந்த கடுமையான பிரச்சனை குறித்து மக்கள் மத்தியில் சரியான தகவல்களை வழங்கி விழிப்புணர்வை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம்.” என்று கூறுகிறார் ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையின் காவேரி ஸ்பைன் இன்ஸ்டிடியூட் – ன் தலைவர் டாக்டர். G. பாலமுரளி.

முதுகு, கழுத்து வலி குறித்த பல்வேறு தகவல்களைப் புரிந்துகொள்ளவும், தவறான கண்ணோட்டங்களை அகற்றவும் மற்றும் வலி இல்லாத, ஆரோக்கியமான முதுமையை உறுதி செய்யவும் முதுகுத்தண்டு குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வையும் உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். முதுகு பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கின்ற நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர், எலும்பு மற்றும் முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை நிபுணர், குழந்தை நல மருத்துவர், மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல் மருத்துவர், விளையாட்டு மருத்துவ நிபுணர், வலி தணிப்பு சிறப்பு மருத்துவர் மற்றும் இத்தகைய வலியால் அதிகம் பாதிக்கப்படுகின்ற நபர்களான காவல்துறையினர், நடன கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருடன் இவர்களுக்கு சிகிச்சையளிக்கும் யோகா, இயன்முறை சிகிச்சை, ஆயுர்வேத மருத்துவர்கள், உளவியல் மருத்துவர் மற்றும் மாற்று சிகிச்சை நிபுணர்கள் உட்பட, 26 நபர்கள் இந்த நிகழ்வில் நடைபெறும் விவாதத்தில் பங்கேற்கின்றனர்.

அத்துடன், இசை, நடனம் மற்றும் ஸ்டான்ட்அப் காமெடி ஆகிய கலைநிகழ்ச்சிகளும் இணைந்ததாக ஸ்பைன் ரீசார்ஜ் என்ற இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
“எலும்பு மற்றும் மூட்டின் சிக்கலான பிரச்சனைகளுக்கு சிறப்பான சிகிச்சையளிக்கின்ற அனுபவம் மிக்க அறுவைசிகிச்சை நிபுணர்களை கொண்டதாக நமது எலும்பியல் மற்றும் முதுகுத்தண்டு சிகிச்சை துறை இயங்கி வருகிறது, நிபுணர்கள் குழு மற்றும் நேர்த்தியான கட்டமைப்பு வசதிகளின் மூலம் பாதிக்கப்பட்ட நபர்கள் சுதந்திரமாக அவர்களது தினசரி செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு நாங்கள் சிகிச்சையின் மூலம் ஏதுவாக்குகிறோம்.

பெரும்பாலான நேரங்களில் முதுகு மற்றும் கழுத்துப் பிரச்சனைகளை மக்கள் அலட்சியம் செய்வதே அவர்களது நிலைமை மோசமாவதற்கு வழிவகுக்கிறது. இந்த இடைவெளியை நிரப்ப வேண்டுமென்ற நோக்கத்தோடு, முதுகு மற்றும் கழுத்து வலிக்கு காரணமாக இருக்கின்ற முக்கிய பிரச்சனைகள் மீது கவனம் செலுத்த ஒரு திட்டத்தை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம்.

பொதுமக்களிடமிருந்து இது குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் இந்நிகழ்வு உதவும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்க இந்த விழிப்புணர்வு திட்டம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் செயலாக்க இயக்குனர் டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் கூறினார்.