October 15, 2025
  • October 15, 2025
Breaking News
January 3, 2020

ஒரே மூச்சில் தனுஷ் மாரி செல்வராஜ் இணையும் கர்ணன்

By 0 995 Views

‘பரியேறும் பெருமாள்’ ஒரே படத்தின் மூலம் ‘ஓகோ’ என புகழின் உச்சிக்குப் போன மாரி செல்வராஜின் இயக்கத்தில் ‘அசுரனி’ல் அசகாய வெற்றி பெற்ற தனுஷ் நடிக்கும் படம் ‘கர்ணன்’. இந்தப் படத்தை பிரமாண்டத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியில் தொடங்கி விட்டது. இதன் ஷெட்யூல் 60 நாளுக்கு ஒரே லொகேஷனில் ஒரே மூச்சில் படம் பிடிக்கப்படவிருக்கிறது..!

இதில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள வரவு ரஜிஷா விஜயன் நடிக்கவிருக்கிறார். அத்துடன் படம் முழுவதும் தனுஷுடன் வருகிறார் யோகிபாபு. பரியேறும் பெருமாளில் முழுவதும் கதிருடன் வந்து பட்டையைக் கிளப்பியதுபோல் இதில் ‘யோகிபாபு’ இன்னொரு செஞ்சுரி அடிக்கப் போகிறாராம்.

இவர்களுடன் மலையாள லால், அழகம்பெருமாள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.   

25 ஏக்கருக்கு செட் போட்டு எடுக்கப்பட்டு வரும் ‘கர்ணன்’ படத்தில் தன் முன் இரு படங்களான ‘அசுரன்’, ‘பட்டாஸ்’ போலவே நெல்லைத் தமிழில் பேசி நடிக்கிறார் தனுஷ்.

இந்த ‘கர்ணன்’ செட் அமைந்த இடம் மாரி செல்வராஜின் சொந்த ஊருக்கு அருகாமையில் இருப்பதால் தன் சொந்த சனங்களையே முக்கிய வேடங்களில் நடிக்க வைக்க இருக்கிறாராம் மாரி செல்வராஜ்.

அள்ளிக் கொடுக்க அசுரத் தயாரிப்பாளர் இருக்க, அடிச்சுக் கிளப்புங்க மாரி..!