September 14, 2026
  • September 14, 2026
Breaking News
November 6, 2018

கமல் வெளியிட்ட விக்ரம் 56 படத்தின் முதல் பார்வை

By 0 1461 Views

நடிகர்களில் கமலைப் போன்ற அழகும், திறமையும் ஒருங்கே பெற்றவர் விக்ரம். கமலைப் போன்றே தன் கேரக்டர்களுக்காக உடலை இளைத்தும், பெருக்கியும் நடிப்பதிலும் கமலுக்கு அடுத்தபடியாக விக்ரம் பெயர்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும்.

இவர்கள் இருவரும் இணைந்தால் ஒரு அற்புதப்படம் கிடைக்கும் என்பது ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் எண்ணமாக இருக்க, அப்படி ஒரு படமாக அமைகிறது ‘கடாரம் கொண்டான்’.

கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப்படத்தில் விக்ரம் நாயகனாக நடிக்க, அக்ஷரா ஹாசன் அவருக்கு ஜோடியாகிறார்.

விக்ரமின் 56வது படமாக அமையும் ‘கடாரம் கொண்டான்’ படத்தை ‘தூங்கா வனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் செல்வா இயக்குகிறார். இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை இன்று கமல் தன் ட்விட்டரில் வெளியிட்டார்.

ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருக்கும் கடாரம் கொண்டான் முதல்பார்வை போஸ்டர் கீழே…