March 28, 2024
  • March 28, 2024
Breaking News
  • Home
  • அரசியல்
  • இந்தியா
  • பெட்ரோல் டீசல் விலை ரூ.2.50 குறைப்பு – பாஜக ஆளும் மாநிலங்களில் ரூ.5 குறைப்பு
October 4, 2018

பெட்ரோல் டீசல் விலை ரூ.2.50 குறைப்பு – பாஜக ஆளும் மாநிலங்களில் ரூ.5 குறைப்பு

By 0 935 Views

வரலாறு காணாத வகையில் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வந்த நிலையில், அமைச்சர்கள் அருண் ஜெட்லி, தர்மேந்திர பிரதான் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தியதை அடுத்து அருண் ஜெட்லி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அந்த சந்திப்பில் பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு விதிக்கும் கலால் வரி ரூ.1.50 குறைக்கப்படும் எனவும், எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் பங்குக்கு ரூ.1 குறைக்கும் எனவும் அறிவித்தார். ஆக மொத்தம் லிட்டருக்கு ரூ.2.50 குறைக்கப்பட்ட நிலையில், மாநில அரசுகளும் ரூ.2.50 குறைக்கவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

அதன்படி பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.2.50 குறைக்க பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா அகியோர் பாஜக ஆளும் மாநில முதல்வர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதனால், பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை ரூ.5 குறைகிறது.

மற்ற மாநிலங்களும் இந்தக் குறைப்பை அமல்படுத்தினால் இந்தியா முழுக்கவே பெட்ரோல் டீசல் விலை ரூ. 5 குறையும்.