November 21, 2019
  • November 21, 2019
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • விஸ்வாசத்தில் நட்சத்திரம் தாண்டி நடிகர் அஜித்தை பார்க்கலாம் – சிவா
January 9, 2019

விஸ்வாசத்தில் நட்சத்திரம் தாண்டி நடிகர் அஜித்தை பார்க்கலாம் – சிவா

By 0 215 Views

அஜித்குமார் மற்றும் இயக்குநர் சிவா இணைந்த ‘விஸ்வாசம்’ பாடல்களும் டிரெய்லரும் பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் நாளை படம் வெளியீடு என்ற எந்த பதட்டமும் இல்லாமல், சிவா இன்னும் அமைதியாகவும், தன்னம்பிக்கையுடனும் இருக்கிறார்.

 
‘விஸ்வாசம்’ உருவாக்கம் தொடங்கியதிலிருந்து அவர் பேசத் தொடங்கினார்,
 
“நாங்கள் ஒரு புதிய படத்தில் வேலை செய்யத் தீர்மானித்த உடனேயே, விஸ்வாசம் ஸ்கிரிப்ட்டை அஜித் சார்க்கு நான் விளக்கினேன். அவருடைய ரியாக்‌ஷன் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எந்தக்  கதை கேட்டபோதும் அவர் இந்த அளவுக்கு ரசித்து சிரித்ததை நான் பார்த்ததில்லை. உண்மையில், “இது போன்ற ஒரு பொழுதுபோக்கு ஸ்கிரிப்ட் எனக்கு வந்து நீண்ட காலம் ஆகிறது..!” என்று என்னிடம் கூறினார். இப்போது படத்தை வெளியிட நாங்கள் தயாராகி விட்டோம்.
 
இந்தப் படம் எப்போதும் எனர்ஜியுடன் இருக்கும் எமோஷனலான மதுரை மண்ணின் மைந்தன்  ஒருவரைப் பற்றி பேசுகிறது. படம் முடிந்து வீடு திரும்பும்போது, ‘தூக்குதுரை’ கதாபாத்திரத்தை ரசிகர்கள் மனதில் நினைத்துக் கொண்டே செல்வார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்.
 
அஜித் சாருடனான என் முந்தைய திரைப்படங்களை விட விஸ்வாசம் படத்தில் எமோஷன் தாக்கம் அதிகம் என்று நான் வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறேன். நிச்சயமாக, நிறைய மாஸான விஷயங்களும், அஜித் சாரின் எனர்ஜியும் உண்டு. இந்த பொங்கல் எங்களுக்கு சிறப்பான பொங்கலாக இருக்கும் என நம்புகிறோம்.
 
அஜித் சார் எப்போதும் தனி ஒருவரின் சுய ஒழுக்கம் சமூகத்தில் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறார். ஒருவேளை நீங்கள் அவரிடமிருந்து கேட்கும் சில விஷயங்கள் சாதாரணமாக இருக்கலாம், ஆனால் அவர் அதை ஒருபோதும் கைவிடமாட்டார். அவரும், நயன்தாராவும் ஒரு பைக் காட்சியில் ஹெல்மெட் அணிந்திருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். பைக் ஓட்டுபவர் மட்டுமல்லாமல், உடன் பயணிப்பவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதை நம்புகிறார்.
 
நான் அஜித் சாருடன் பணியாற்றிய படங்களிலேயே விஸ்வாசம் எப்போதும் என் இதயத்திற்கு அருகில் இருக்கும். அவர் ஒவ்வொரு செயலையும்  அனுபவித்து செய்தார் என்று மிகவும் தெளிவாக தெரிந்தது. எளிமையான சொற்களில் சொல்ல வேண்டுமானால்,  ரசிகர்களாக நாம் எப்பொழுதும் ‘ஸ்டார்’ அஜித்தை பார்த்து ரசித்துள்ளோம், இந்தப்படத்தில் ‘நடிகர்’ அஜித்தையும் பார்த்து ரசிக்கலாம்.
 
நயன்தாரா ஒரு நடிப்பு ராட்சஷி, தேர்ந்த நடிப்பை கொடுப்பார். சிறிய நுணுக்கங்களை கூட சரியாக கொடுக்கும் அவரது தன்னிச்சையான திறன் என்னை உற்சாகப்படுத்தியது. இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் மிக முக்கியமானதாக இருக்கும்..!”
 
சிவா சொன்னதெல்லாம் சரியா என்பதை நாளை உறுதி செய்து கொள்ளலாம்..!”