May 4, 2025
  • May 4, 2025
Breaking News
August 1, 2019

கல்லூரி மாணவிகளை கலகலப்பூட்டிய துருவ் விக்ரம்

By 0 825 Views

விக்ரமுக்கு ஒரு தனி அடையாளம் உள்ளது போல் துருவ் விக்ரமுக்கும் தனி அடையாளம் உருவாகி வருகிறது என்லாம். தன் முதல் படம் வெளிவரும் முன்பே தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் என்ற அந்தஸ்தைப் பெற்று வருகிறார் நடிகர் துருவ் விக்ரம்.   

தெலுங்கில் பெரு வெற்றிபெற்ற அர்ஜுன் ரெட்டி படம் தமிழில் ‘ஆதித்ய வர்மா’ என்ற பெயரில் ரிமேக் ஆகி வருவது அனைவரும் அறிந்த செய்தி. முழுதாக தயாரான அப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அந்த டீசர் இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் துருவ் விக்ரம் சில தினங்களுக்கு முன்பு சென்னை வைஷ்ணவா மகளிர் கல்லூரிக்கு  ஒரு நிகழ்ச்சிக்காக சென்றார். அப்போது அவரை மாணவிகள் சூழ்ந்து கொண்டனர். மாணவிகள் மத்தியில் கலகலப்பாக உரையாடிய அவர், நிகழ்ச்சியில் ஒரு பாடலும் பாடி அசத்தினார். கோலமாவு கோகிலா படத்தில் இடம்பெற்ற “கல்யாண வயசு தான்” என்ற பாடலை அவர் பாட மாணவிகள் கைகள் தட்டி உற்சாகப் படுத்தினார்கள்.

மேலும் மாணவிகள் அனைவரும் துருவ் விக்ரமோடு செல்பி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாக ஆதித்ய வர்மா படத்தின் டீசர் திரையிடப்பட்டது. அவ்வேளையில் மாணவிகள் சந்தோசக் கூச்சலிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Dhruv Vikram in Women College

Dhruv Vikram in Women College