May 9, 2024
  • May 9, 2024
Breaking News

Currently browsing விமர்சனம்

ஓ மணப்பெண்ணே திரை விமர்சனம்

by by Oct 21, 2021 0

ஐந்து வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் ஒரு கோடி ரூபாய்க்குள்ளான பட்ஜெட்டில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் முப்பது கோடி ரூபாய் வசூலித்த வெற்றிப்படம் பெல்லி சூப்புலு…

இது போதாதா இதனைத் தமிழில் தயாரிக்க..? ஆனால் ஐந்து வருட இடைவெளியில் இப்போது இங்கே இந்தத் தலைப்பில் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் வெளியாகி இருக்கிறது.

எல்லா காலத்திலும் வெற்றி பெறக்கூடிய மெல்லிய காதல் லைன்தான் இதிலும். இன்ஜினியரிங் படித்து எதற்கும் லாயக்கு இல்லாமல் இருக்கும் நாயகன் திருமணத்தில் வரும் வரதட்சனையை வைத்து வாழலாம்…

Read More

அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க திரைப்பட விமர்சனம்

by by Oct 18, 2021 0

வித்தியாசமான சிந்தனை உள்ள படங்களை அதன் தலைப்பே காட்டிக்கடுத்துவிடும் அப்படி ஒரு படம்தான் அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க…

சிறுவயது காதல் வாலிபர் காதல் என்றெல்லாம் தமிழ் சினிமாவில் பார்த்து அலுத்துப் போன இந்தப் படத்தின் இயக்குனர் இதில் தள்ளாத வயதில் காதலை மட்டும் தள்ளாத ஒரு ஜோடியை பற்றிய கதை சொல்லியிருக்கிறார்.

காதலர்களை சேர்த்து வைப்பது என்றால் அவர்களுடைய நண்பர்களுக்கு ஏக குஷி. அது வாலிப வயது ஆனாலும் சரி வயதான காலத்திலும் சரி அப்படி வயதான ஜோடிகள்…

Read More

அரண்மனை 3 திரைப்பட விமர்சனம்

by by Oct 17, 2021 0

ஒரு படம் வெற்றியடைந்தால் அதே தலைப்பில் இரண்டாம் முறை எடுக்கலாம். அதே தலைப்பில் அதுவும் முதல் இரண்டு படங்களை எடுத்த அதே இயக்குநர் மூன்றாம் முறையும் எடுக்கத் துணிவதென்றால் அந்த டைட்டில் மீது அந்த இயக்குநருக்கு எப்படி ஒரு அபார நம்பிக்கை இருக்கும் பாருங்கள். 

அப்படித்தான் சுந்தர்.சிக்கு அரண்மனை மீது அப்படி ஒரு ‘பேய் நம்பிக்கை’ ஏற்பட்டு அதில் முப்பெரும் வெற்றியும் அடைந்திருக்கிறார். அதுவும் அரண்மனையில் தங்கியிருக்கும் பேய்களென்றால் அவருக்கு அப்படி ஒரு ‘பாண்டிங்’. 

ஜமீன் சம்பத்தின் பிரமாண்ட…

Read More

உடன்பிறப்பே திரைப்பட விமர்சனம்

by by Oct 13, 2021 0

பாசமலர் காலம் தொட்டு கிழக்குசீமையிலே வரை அண்ணன் தங்கை கதைகள் நிறைய பார்த்தாயிற்று. தன் பங்கிற்கு தானும் ஒரு பாசக்கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் இரா. சரவணன்.

நீங்கள் நான் எல்லோரும் எதிர்பார்க்கிற அதே லைன் தான்.  அண்ணனை விட்டு அகல விரும்பாத தங்கை. தங்கையை தனியே விட்டு விடாத அண்ணன் என்று சசிகுமாரும் ஜோதிகாவும் வாழ்ந்து வர ஜோதிகாவுக்கு சமுத்திரக்கனியுடன் திருமணம் முடித்து வைக்கிறார் சசிகுமார். அப்புறம் அதேதான்… சசிகுமாருக்கும் சமுத்திரகனிக்கும் ஒத்துவராத சூழல் ஏற்பட்டு அண்ணன்…

Read More

டாக்டர் படத்தின் திரை விமர்சனம்

by by Oct 9, 2021 0

பாலச்சந்தர் பாரதிராஜா பாலுமகேந்திரா தொடர்ந்து சேரன், பாலா, அமீர் எல்லாம் தமிழ் சினிமாவை கட்டி ஆண்டது ஒரு காலம். இப்போது லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார் போன்றவர்களின் சீசன்.

சீரியசான ஒரு விஷயத்தை கையில் எடுத்துக்கொண்டு திரைக்கதையில் சீரியஸைக் கொண்டுவராமல் இலகுவாக நகைச்சுவையுடன் அமைப்பது இவர்களது பாணி. இன்றைய இளைய ஹீரோக்கள் மட்டுமன்றி இளைய தலைமுறையினரும் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள் என்பதால் இதில் குற்றம் சொல்ல ஒன்றுமில்லை.

இந்தப் படத்திலும் அப்படித்தான். சிறுமிகளைக் கடத்துகிறது ஒரு கும்பல். டாக்டராக வரும்…

Read More

எ கொயட் பிளேஸ் 2 (A Quiet Place – II) ஹாலிவுட் பட விமர்சனம்

by by Oct 6, 2021 0

நினைத்துப் பாருங்கள்… எந்த சப்தமும் எழுப்பப் படாமல் இந்த உலகம் நிசப்தமாவதை..! இதை இரண்டு வருடங்களுக்கு முன்பே இதே படத்தின் முதல் பாகத்தில் யோசித்து ஒரு சைலன்ட் திரில்லரைக் கொடுத்து விட்டார் இயக்குனர் ஜான் கிரசின்ஸ்கி. அவரே முதல் பாகத்தில் நம்ம சசிகுமார் மாதிரி ஹீரோ கம் இயக்குநராக வர, இந்த பாகத்தில் பழைய கதையை நினைவு படுத்த ஒரு சில காட்சிகளில் மட்டும் வருகிறார்.

திரில்லர் மற்றும் ஹாரர் படங்கள் நன்றாகப் போவதால் அதன் காரணமாக…

Read More

ஜங்கிள் குரூஸ் ஹாலிவுட் திரைப்பட விமர்சனம்

by by Sep 24, 2021 0

படத்தின் பெயரே சொல்கிறதல்லவா..? இது ஒரு ‘ஜாலி அட்வெஞ்சர் ரைடு’தான் என்பதை. அப்படி டிஸ்னியின் தீம் பார்க்கில் இருக்கும் ஜங்கிள் குரூஸை வைத்து ஒரு ஆக்ஷன் விருந்தையே படைத்து விட்டார்கள் டிஸ்னியின் இந்தப் படைப்பில்.

ஒரே ஒரு லைன்தான் கதை. வழக்கமாக ஒரு புதையலைத்தேடி ஒரு நாயகன் போவான். கூடவே ஒரு வில்லனும் போவான். ஹீரோ எல்லா சாகசங்களையும் செய்து புதையலை அடையும் நேரம் வில்லன் குரூப் உள்ளே வந்து “ஹேன்ட்ஸ் அப்” சொல்லி புதையலை அடைய…

Read More

சூ மந்திரக்காளி திரை விமர்சனம்

by by Sep 24, 2021 0

தலைப்பை பார்த்தவுடனேயே புரிகிறது அல்லவா, இது ஒரு மந்திரவாதக் கதை என்று. ஆனால் அதனை சீரியஸாக சொல்லாமல் சிரிப்பாக சொல்லியிருக்கிறார்கள்.

ஒரு கற்பனை கிராமத்தில் வாழ்பவர்கள் அனைவரும் பங்காளிகள். இருந்தாலும் ஒருவர் மேல் ஒருவர் பொறாமை குணம் கொண்டவர்கள். யாராவது நன்றாக வாழ்ந்தால் இன்னொருவர் கெடுத்து விடுவார்.

படத்தில் ஒருவருடைய வீடு பற்றி எரிகிறது. அதை அணைக்க முயல்வது போல் ஒவ்வொருவரும் நடிக்கிறார்களே அன்றி ஒருவருக்கும் அதை அணைப்பதற்கு மனது கிடையாது. கடைசியில் அந்த வீடு எரிந்து சாம்பலாகிப்…

Read More

ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் திரை விமர்சனம்

by by Sep 23, 2021 0

தரமான படங்களை மட்டுமே தருவது என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு இயங்கி வரும் சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மென்ட் தயாரித்த படம் என்பதே தரச்சான்றிதழ் ஆகிப்போகிறது.

கிராமத்து வாழ்வில் மாடுகள் தெய்வத்துக்கு ஒப்பானவை. அப்படி தன் திருமணத்துக்கு சீதனமாக வந்த இரண்டு காளை மாடுகளை தான் பெற்ற பிள்ளைகளைப் போலவே வளர்த்து வருகிறார் அறிமுக நாயகன் மிதுன் மாணிக்கம்.

எதிர்பாராமல் அவரது திருமணம் அமைந்து போக, ஒரு திடீர் பொழுதில் அவரது கைப்பிடிக்கிறார் ரம்யா பாண்டியன். அவர் ஆசையாக…

Read More

ஆறாம் நிலம் திரைப்பட விமர்சனம்

by by Sep 21, 2021 0

ஈழத்தில் நடைபெற்ற இறுதிப்போரின் போது  லட்சக் கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதும், ஆயிரக் கணக்கில் தமிழர்கள் சிங்கள இராணுவத்தினரிடம் சரணடைந்ததும் உலகம் அறிந்த உண்மை.

சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் அவர்களைத் தேடும் முயற்சியைத் தொடர்ந்து கொண்டே இருக்கின்றனர். அவர்களின் நிலை இன்னும் புரியாத புதிர்.

அதைவிடக் கொடுமை அவர்களைக் காணாமல் போனோர் என்றழைப்பதுதான். ஐநாவின் பார்வைக்கு இந்த விஷயம் கொண்டு போகப்பட்டும் அந்த விஷயம் சர்வதேச சமூகத்திடம் எடுபடவில்லை. அந்த வேலையை இந்தச் சிறிய படம் செய்கிறது.

இந்த அரிய முயற்சியைத் திரைப்படமாக…

Read More