March 28, 2024
  • March 28, 2024
Breaking News

Currently browsing விமர்சனம்

ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் திரை விமர்சனம்

by by Sep 23, 2021 0

தரமான படங்களை மட்டுமே தருவது என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு இயங்கி வரும் சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மென்ட் தயாரித்த படம் என்பதே தரச்சான்றிதழ் ஆகிப்போகிறது.

கிராமத்து வாழ்வில் மாடுகள் தெய்வத்துக்கு ஒப்பானவை. அப்படி தன் திருமணத்துக்கு சீதனமாக வந்த இரண்டு காளை மாடுகளை தான் பெற்ற பிள்ளைகளைப் போலவே வளர்த்து வருகிறார் அறிமுக நாயகன் மிதுன் மாணிக்கம்.

எதிர்பாராமல் அவரது திருமணம் அமைந்து போக, ஒரு திடீர் பொழுதில் அவரது கைப்பிடிக்கிறார் ரம்யா பாண்டியன். அவர் ஆசையாக…

Read More

ஆறாம் நிலம் திரைப்பட விமர்சனம்

by by Sep 21, 2021 0

ஈழத்தில் நடைபெற்ற இறுதிப்போரின் போது  லட்சக் கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதும், ஆயிரக் கணக்கில் தமிழர்கள் சிங்கள இராணுவத்தினரிடம் சரணடைந்ததும் உலகம் அறிந்த உண்மை.

சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் அவர்களைத் தேடும் முயற்சியைத் தொடர்ந்து கொண்டே இருக்கின்றனர். அவர்களின் நிலை இன்னும் புரியாத புதிர்.

அதைவிடக் கொடுமை அவர்களைக் காணாமல் போனோர் என்றழைப்பதுதான். ஐநாவின் பார்வைக்கு இந்த விஷயம் கொண்டு போகப்பட்டும் அந்த விஷயம் சர்வதேச சமூகத்திடம் எடுபடவில்லை. அந்த வேலையை இந்தச் சிறிய படம் செய்கிறது.

இந்த அரிய முயற்சியைத் திரைப்படமாக…

Read More

மணிரத்னத்தின் பொன்னியின்செல்வன் முதல் பாகம் படப்பிடிப்பு முடிவடைந்தது

by by Sep 18, 2021 0

லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் , மணிரத்னத்தின் மெட்றாஸ் டாக்கீஸ் தயாரித்து வரும் சரித்திர பிரமாண்ட படைப்பு “பொன்னியின்செல்வன்” . 

இதன் படபிடிப்பு இந்தியா முழுக்க பல இடங்களில் நடந்தது. கடந்த பல மாதங்களாக ஐதராபாத் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் நடந்தது. இறுதியாக பொள்ளாச்சியில் நடந்த “பொன்னியின்செல்வன்-1” முதல் பாகம் படபிடிப்பு இத்துடன் முடிவடைந்தது என்று நேற்று படக்குழு அறிவித்தது. 

பல தலைமுறகள் கொண்டாடி வரும் நாவல் கல்கியின் “பொன்னியின்செல்வன்” . 

எற்கனவே இதை படித்து பலர் பரவசமாகினர். 

பலரும் இதை படமாக்க…

Read More

டிக்கிலோனா திரைப்பட விமர்சனம்

by by Sep 16, 2021 0

முன்பெல்லாம் ஹீரோக்கள் என்றால் போலீஸ் கதையில் நடித்தாக வேண்டும் என்ற எழுதப்படாத விதி இருந்தது. எல்லா ஹீரோக்களும் ஒரு படத்திலாவது போலீஸாக வந்தார்கள். கொஞ்ச காலத்துக்கு முன்பு அந்த விதி ஹீரோக்கள் என்றால் சிக்ஸ் பேக் வைத்தாக வேண்டும் என்று மாறி எல்லோரும் கிராபிக்ஸிலாவது சிக்ஸ் பேக் வைத்தார்கள். இது டைம் டிராவல் சீசன். 
 
டைம் ட்ராவல் செய்ய கால யந்திரத்தில் ஏறி கடந்த காலத்துக்கும், எதிர்காலத்துக்கும் செல்லும் டிரெண்டில் சந்தானம் இப்போது அந்த யந்திரத்தில் நுழைந்திருக்கிறார். 
 
ஹாக்கி…

Read More

கோடியில் ஒருவன் திரைப்பட விமர்சனம்

by by Sep 16, 2021 0

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பது முதுமொழி. அப்படி கவுன்சிலர் ஆகி அரசியல் குறுக்கீடுகளால் தன் கிராமத்துக்கு நல்லது செய்ய முடியாமல் போன தாய், தான் மகனை ஐ ஏ எஸ் ஆக்கி நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய நினைக்கிறார்.

குட்டி பாய்ந்த அந்த 16 அடி என்ன என்பதுதான் கதை.

எரிந்த சாம்பலில் இருந்து பீனிக்ஸ் பறவை உயிர் பிழைக்கும் என்பார்கள். அந்த வகையில் கர்ப்பிணியான கவுன்சிலர் தாயை சதிகாரர்கள் உயிரோடு எரிக்க,…

Read More

துக்ளக் தர்பார் திரை விமர்சனம்

by by Sep 15, 2021 0

துக்ளக் என்ற மன்னரின் தர்பார் எப்படி குழப்பமாக இருந்ததோ அதைப்போலவே ஒரு குழப்பமான கதையைத் தயார் செய்து அதற்கு ‘துக்ளக் தர்பார்’ என்றே பெயர் வைத்திருக்கிறார் இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாள். ரொம்ப தைரியம்தான்..!

அமைதிப்படையில் இரண்டு கை போட்டு, பிறகு அதில் அந்நியனில் ஒரு கை போட்டு, அதில் நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படத்தில் அரைக்கை போட்டு மொத்தமாக மிக்ஸியில் அடித்தால் இந்தப்படத்தின் திரைக்கதை கிடைக்கும்.

ஒரே மனிதனின் சிந்தனையில் இரண்டு விதமான ஆட்கள் வந்து…

Read More

தலைவி திரைப்பட விமர்சனம்

by by Sep 10, 2021 0

உண்மைக் கதைகளைப் படமாக்குவது கத்தி மீது நடக்கும் விஷயம். அதிலும், சரித்திரம் சொல்லும் தலைவர்களைப் பற்றிய பயோபிக் என்றால் சவரக் கத்தி மீது சாகசம் செய்யும் கதைதான். அப்படி ஒரு சாகசத்தைக் கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர் விஜய்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு அஜயன் பாலா எழுதிய ‘தலைவி’ கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட கற்பனைக் கதை என்று படத்தை ஆரம்பிக்கிறார் விஜய்.

அதனாலேயே ஜெயலலிதாவை ‘ஜெயா’ என்றும், எம்.ஜி.ஆரை ‘எம்.ஜே.ஆர்’ என்றும்,…

Read More

லாபம் திரைப்பட விமர்சனம்

by by Sep 10, 2021 0

கலை உன்னதப் படுவதே அது மக்களுக்கானதாக ஆகும்போதுதான். நூற்றாண்டு கண்ட இந்திய சினிமாவில் நூறு படங்களாவது இந்த வேலையைச் செய்தனவா என்று தெரியாது. அப்படிச் செய்திருந்தால் மக்கள் விழிப்புணர்வு பெற்று நாடே முன்னேற்றம் கண்டிருக்கும். 

ஆனால், விவசாயிகள் தெருவில் இறங்கிப் போராடும் இந்தக் காலக்கட்டத்தில் இந்தப் படத்தைப் போன்ற படங்கள் உருவாவது காலத்தின் கட்டாயம் என்றே சொல்லலாம். தன் ஒவ்வொரு படத்திலும் சமுதாய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் எஸ்.பி.ஜனாநாதன்…

Read More

கர்ணன் படத்தின் திரைவிமர்சனம்

by by Apr 10, 2021 0

செவி வழியாகச் சொல்லப்பட்டுக் காலத்துக்கும் கடத்தப்படும் கதைகளை ‘கர்ண பரம்பரைக் கதைகள்’ என்பார்கள். ஆனால், இந்தப்படத்தின் ‘கர்ணன்’ கதை நம் காலத்தில் நம் கண் முன்னே நடந்து முடிந்த ஒரு இனப் போராட்டத்தை முன் வைக்கிறது. 

அதற்கு அழுத்தம் சேர்த்தவை ‘பரியேறும் பெருமாள்’ இயக்குனர் மாரி செல்வராஜும், நடிப்பு ‘அசுரன்’ தனுஷும், அசுரனைச் சாத்தியமாக்கிய கலைப்புலி எஸ்.தாணுவும் அடுத்து கைகோத்த படம் இது என்பதே.

கதை நடக்கும் ஊருக்குப் ‘பொடியன் குளம்’ என்று பெயர் வைத்திருப்பதிலேயே மாரி செல்வராஜ்…

Read More

சுல்தான் படத்தின் திரை விமர்சனம்

by by Apr 2, 2021 0

விவசாயத்தின் பெருமையை வலியுறுத்தி பல படங்கள் வந்திருந்தாலும் அதை சொல்லும் விஷயத்தில் சுவாரசியத்தை சேர்க்காமல் விட்ட காரணத்தால் பல படங்கள் வலுவிழந்து தோல்வியை சந்தித்து இருக்கின்றன.

ஆனால் இந்தப் படம் விவசாயத்தை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் அதில் ஆக்ஷன் மற்றும் கமர்ஷியல் விஷயங்களை சேர்த்து நம்மை முழுமையாக ரசிக்க வைத்திருக்கிறார்கள் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணனும், நடிகர் கார்த்தியும்.

நியாயமான காரணங்களுக்காக ரவுடியிசத்தை பயன்படுத்தி நல்ல தாதாவாக இருக்கிறார் நெப்போலியன். மனைவியை இழந்த அவரது மகனான கார்த்தி நெப்போலியனிடம்…

Read More