April 27, 2024
  • April 27, 2024
Breaking News

Currently browsing விமர்சனம்

சுல்தான் படத்தின் திரை விமர்சனம்

by by Apr 2, 2021 0

விவசாயத்தின் பெருமையை வலியுறுத்தி பல படங்கள் வந்திருந்தாலும் அதை சொல்லும் விஷயத்தில் சுவாரசியத்தை சேர்க்காமல் விட்ட காரணத்தால் பல படங்கள் வலுவிழந்து தோல்வியை சந்தித்து இருக்கின்றன.

ஆனால் இந்தப் படம் விவசாயத்தை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் அதில் ஆக்ஷன் மற்றும் கமர்ஷியல் விஷயங்களை சேர்த்து நம்மை முழுமையாக ரசிக்க வைத்திருக்கிறார்கள் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணனும், நடிகர் கார்த்தியும்.

நியாயமான காரணங்களுக்காக ரவுடியிசத்தை பயன்படுத்தி நல்ல தாதாவாக இருக்கிறார் நெப்போலியன். மனைவியை இழந்த அவரது மகனான கார்த்தி நெப்போலியனிடம்…

Read More

காடன் படத்தின் திரை விமர்சனம்

by by Mar 26, 2021 0

தன் ‘மைனா’ படம் முதலே காடுகளின் காதலனாகிப் போன இயக்குநர் பிரபு சாலமன் இந்த முறையும் தன் குழுவினருடன் காட்டுக்குள்ளேயே சென்று படம் பிடித்து வந்திருக்கிறார். காட்டுக்குள் அவர் பெற்ற அனுபவங்களின் வாயிலாக இந்த முறை காட்டின் அகலமும், நீளமும் அவருக்கு நன்றாகவே கை வந்திருப்பதாகக் கொள்ள முடிகிறது.

காடுகளின் அவசியத்தையும், காடுகளில் மனிதர்களின் பிரவேசத்தால் வன விலங்குகளுக்கு ஏற்படும் ஆபத்தையும், வனமும், வன விலங்குகளும் அழிவதால் மனிதர்களுக்கு ஏற்படவிருக்கும் பேராபத்தையும் இந்தப்படம் மூலம் அபாய அறிவிப்பாக…

Read More

சுல்தான் படத்தின் அதிரடி டிரெய்லர்

Read More

காதம்பரி திரைப்பட விமர்சனம்

by by Mar 19, 2021 0

ஹீரோ அருள் தனக்கு நெருக்கமானவர்களுடன் டாக்குமெண்டரி படமெடுக்க காட்டுப் பகுதிக்கு செல்ல, அவர்களுடைய கார் விபத்துக்குள்ளாக, அந்த காட்டில் இருக்கும் வீடு ஒன்றில் வசிக்கும் வாய் பேச முடியாத பெரியவரிடம் உதவி கேட்டு தங்குகிறார்கள்.

அங்கே அவரது செயல்கள் விசித்திரமாக இருப்பதோடு, அந்த வீட்டில் இருக்கும் அறை ஒன்றில் இருக்கும் மரப்பெட்டியில் சிறுமி ஒருவர் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடிக்கிறார்கள். அந்த சிறுமியை காப்பாற்றும் நண்பர்கள், அதன் மூலம் மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கிக் கொள்ள, அதில்…

Read More

அன்பிற்கினியாள் படத்தின் திரை விமர்சனம்

முதலில் இப்படி ஒரு அருமையான தமிழ்த்தலைப்பு வைத்ததற்காக பாராட்டுகளை தெரிவித்து விட்டு விமர்சனத்தை தொடரலாம் .

மலையாளத்தில் வெளியாகி வெற்றி அடைந்த ‘ஹெலன்’ படத்தைத் தமிழில் ரீமேக் செய்துள்ளார் இயக்குநர் கோகுல். தன் மகள் கீர்த்தி பாண்டிய னுக்காக தானே தயாரித்ததுடன் நடித்தும் இருக்கிறார் அவரது தந்தை அருண்பாண்டியன். 

இந்த இரண்டு சுவாரஸ்யங்கள் மட்டுமல்லாது அருண் பாண்டியனும் கீர்த்தி பாண்டியனும் தந்தை மகளாகவே நடித்து இருப்பதும் இந்த படத்தின் ஹைலைட்.

எல்.ஐ.சி. ஏஜெண்டாகப் பணிபுரிந்து வரும் அருண் பாண்டியனின் மகள்…

Read More

கால்ஸ் படத்தின் திரைவிமர்சனம்

by by Mar 2, 2021 0

சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டு இறந்த சின்னத்திரை நடிகை சித்ரா நடித்திருக்கும் முதல் படம் என்பதால் இந்தப் படத்திற்கு தனி கவனம் கிடைத்திருக்கிறது. 

சென்னை கால் சென்டரில் பணியாற்றுகிறார் சித்ரா. வேலையை இழக்கும் அபாயம் ஒருபுறம், போனில் மிரட்டும் அனாமதேய குரல் இன்னொருபுறம் என்று ஏகப்பட்ட பதட்டத்தில் இருக்கிறார்.

அவருடன் பணியாற்றும் தேவதர்ஷினி அவருடன் பேச்சு கொடுக்கையில் சிறிய வயதில் தனக்கு நடந்த பாலியல் கொடுமைகள் பற்றி சொல்கிறார் சித்ரா.

இந்த ஒரு நாள் நிகழ்வுக்கு இடையில் பல இடங்களில் ஒரு…

Read More

சங்கத் தலைவன் திரைப்பட விமர்சனம்

தமிழ் படங்களில் அனேகமாக இயக்குனர் ராமநாராயணன் மறைவுக்குப்பின் சிவப்பு சிந்தனை உள்ள படங்கள் வரவில்லை என்றே சொல்லலாம்.
 
அந்த குறையை போக்க வந்திருக்கிறது இந்த சங்க தலைவன் படம். இதன் களமாக நெசவுத் தொழில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
 
நெசவுத் தொழில் முக்கியத்துவம் பெற்ற ஊரில் தொழிலாளர்களுக்காக சங்கம் வைத்து போராடுகிரார் சிவப்பு சிந்தனை உள்ள சமுத்திரக்கனி.
 
இன்னொரு பக்கம் சொந்தத்தில் நெசவு மில் நடத்தும் ராமதாஸின் மகனாக இருந்தும் மாரிமுத்து நடத்தி வரும் மில்லில் வேலை பார்த்து வருகிறார் கருணாஸ்.
 
அடங்க மறுக்கும்…

Read More

கமலி from நடுக்காவேரி திரை விமர்சனம்

by by Feb 20, 2021 0

கிராமத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு குறிப்பாக மாணவிகளுக்கு சென்னை போன்ற பெருநகரத்தில் அமைந்திருக்கும் ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி கற்பதென்பது எத்தகைய கடினமான விஷயம் என்பது கற்றறிந்தவர்களுக்குத் தெரியும்.
 
அப்படி நடுக்காவேரியிலிருந்து சென்னை ஐஐடியில் சேர கடின உழைப்பில் வந்த கமலி என்ற மாணவியைப் பற்றிய படம்தான் இது. கல்வியைப் பற்றிய படம் என்பதால் படமாக இல்லாமல் பாடமாக இருக்குமோ என்று ஐயமடையைத் தேவையில்லை. சினிமாவுக்குண்டான அத்தனை அம்சங்களும் படத்தில் தேவைக்கேற்ற அளவில் இருக்கின்றன.
 
சரி… நடுக்காவேரியைச் சேர்ந்த…

Read More

சக்ரா படத்தின் திரை விமர்சனம்

by by Feb 19, 2021 0

மூன்று தலைமுறையாக இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து சேவை செய்த குடும்பம் விஷால் உடையது. விஷாலும் இப்போது ராணுவத்தில் இருக்க அவரது தந்தையின் சேவைக்காக அவருக்கு சக்ரா விருது வழங்கப்பட்டிருக்கிறது.
 
இது ஒருபுறமிருக்க சென்னையில் சுதந்திர தினத்தன்று 50 வீடுகளில் கொள்ளையர்கள் கைவரிசை காட்ட அதில் விஷால் வீடும் ஒன்று.
 
போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் சுதந்திர தினம் என்பதால் போலீசார் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த காரணத்தால் அவர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் கொள்ளையர்கள் தப்பித்து விடுகின்றனர். 
 
கொள்ளையர்கள் தாக்கியதில்…

Read More

நானும் சிங்கிள்தான் படத்தின் திரை விமர்சனம்

by by Feb 14, 2021 0

நாயகன் தினேஷ் ஒரு 90’ஸ் கிட். டாட்டூ போடும் கடை நடத்தி வரும் அவருக்கு டு திருமணம் முடிக்க அவரது நண்பர்களான கதிர், ஆதித்யா, செல்வா மூவரும் தீவிரமாக பெண் தேடுகிறார்கள்.

இதற்கிடையில் நாயகி தீப்தியை ஒரு பிரச்சினையில் இருந்து காப்பாற்றும் தினேஷ் அவர் மீது காதலாக, காதலே பிடிக்காத தீப்தி, தினேஷ் காதலை ஏற்காமல் லண்டன் சென்றுவிடுகிறார்.

தினேஷ் அண்ட் கோ அங்கும் அவரை விரட்டிச் சென்று தன் தீப்தியின் காதலை பெற முயற்சிக்க  தீப்தி ஒரு…

Read More