April 1, 2025
  • April 1, 2025
Breaking News

கொஞ்சநாள் பொறு தலைவா” டிரெய்லர் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்

by by Mar 28, 2025 0

“கொஞ்சநாள் பொறு தலைவா” டிரெய்லர் வெளியீட்டு விழா திரையில் !

ஆருத்ரன் பிக்சர்ஸ் சார்பில், S.முருகன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் இயக்கத்தில், கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள படம் “கொஞ்ச நாள் பொறு தலைவா”. விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்….

*நடிகை சுதா பேசியதாவது…* 

மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இப்படத்தில் நானும் ஒரு அங்கமாக…

Read More

எனக்குள் இருந்த இயக்குனரை தயாரிப்பாளரான நான் எளிதில் ஒத்துக் கொள்ளவில்லை – சஷி காந்த்

by by Mar 16, 2025 0

தயாரிக்கும் படங்களில் மட்டுமல்ல தயாரிப்பு நிறுவனத்தின் பெயரிலும் வித்தியாசமாக இருப்பது ‘ஒய் நாட்’ (YNOT) ஸ்டுடியோஸ் நிறுவனம்.

அதன் தயாரிப்பாளர் எஸ்.சஷிகாந்த், ‘டெஸ்ட்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

“ஒய் நாட் என்று என் நிறுவனத்துக்குப் பெயர் வைத்ததே “ஏன் முயற்சிக்கக் கூடாது..?” என்கிற அடிப்படையில் சினிமாவில் சகல துறைகளிலும் புதிய முயற்சிகளை செய்து பார்ப்பதற்காகத்தான். அந்த வகையில் திரைப்பட இயக்கம் என்பது நான் ஆரம்பத்திலேயே முடிவு செய்த ஒன்றுதான். அதை முறையாகக் கற்றுக் கொள்வதற்காக தான் தயாரிப்பு…

Read More

அறிவழகனுடன் அடுத்தடுத்து படங்கள் பண்ணுவேன் – ஆதி

by by Mar 1, 2025 0

7G ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சப்தம்’. இந்த படத்தில் ஆதி கதாநாயகனாக நடித்துள்ளார். ‘ஈரம்’ பிளாக் பஸ்டர் ஹிட் படத்திற்கு பிறகு 15 வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ள இரண்டாவது படம் இது என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இருமடங்காக உள்ளது.. 

இந்த படத்தில் கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்க முக்கிய வேடங்களில் சிம்ரன், லைலா, எம்.எஸ் பாஸ்கர், ராஜீவ் மேனன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்….

Read More

எந்த மொழியை இங்கு திணித்தாலும், தமிழை அழிக்க முடியாது – ஆர்.கே.செல்வமணி

by by Feb 25, 2025 0

கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் ” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா..!

ஸ்ரீ கணபதி பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிப்பில், பிரபல இயக்குனர் K. ரங்கராஜ் இயக்கத்தில், ஸ்ரீகாந்த், புஜிதா பொன்னாடா நடிப்பில் ஒரு அழகான காதல் படமாக உருவாகியுள்ள படம் ” கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் ” வரும் மார்ச் 14 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தின் செய் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது….

Read More

அகரம் ஃபவுண்டேஷனின் புதிய கட்டிடம் புது நம்பிக்கையை தந்திருக்கிறது – சூர்யா

by by Feb 18, 2025 0

அகரம் பவுண்டேஷன் அமைப்பின் புதிய அலுவலக திறப்பு விழா 

சென்னை, தியாகராய நகர் அருளாம்பாள் தெருவில் அமைக்கப்பட்டுள்ள அகரம் பவுண்டேஷன் அமைப்பின் புதிய அலுவலக திறப்பு விழா பிப்ரவரி 16, 2025 ஞாயிறு அன்று நடைபெற்றது. நிகழ்வில் திரைக் கலைஞர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் கலந்து கொண்டனர். சூர்யா – கார்த்தி தாயார் லட்சுமி அவர்கள் கட்டிடத்தை திறந்து வைத்தார். 

Read More

இந்தியாவின் முதல் மல்டிவெர்ஸ் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் நிவின் பாலி

by by Feb 17, 2025 0

மலையாள சூப்பர் ஸ்டார் நிவின் பாலி நடிக்கும் ‘மல்டிவெர்ஸ் மன்மதன்’ படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியீடு

இந்தியாவின் முதல் மல்டிவெர்ஸ் சூப்பர் ஹீரோவாக நடிகர் நிவின் பாலி நடிக்கும் ‘மல்டிவெர்ஸ் மன்மதன்’ எனும் படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு பிரத்யேக புகைப்படத்துடன் வெளியிடப்பட்டிருக்கிறது. 

மலையாள சூப்பர் ஸ்டார் நிவின் பாலி இயக்குநர் ஆதித்யன் சந்திரசேகர் எழுதி இயக்கும் இந்தியாவின் முதல் மல்டிவெர்ஸ் சூப்பர் ஹீரோ படமான ‘மல்டிவெர்ஸ் மன்மதன்’ எனும் படத்தில் நடிக்கிறார். 

இந்தத் திரைப்படம் – அதிரடியான ஆக்சன் காட்சிகள்-…

Read More

கேப்டன் அமெரிக்கா : பிரேவ் நியூ வேர்ல்ட் திரைப்பட விமர்சனம்

by by Feb 16, 2025 0

மார்வெல் ஸ்டுடியோஸ்- இல் இருந்து வந்திருக்கும் கேப்டன் அமெரிக்கா தொடரின் நான்காவது படம் இது.

ஒரு காலத்தில் இராணுவ தளபதியாக இருந்த போது சூப்பர் ஹீரோக்களைத் துரத்திய ராஸ் இப்போது அமெரிக்காவின் ஜனாதிபதியாகி இருக்கிறார். முன்பு சூப்பர் ஹீரோக்கள் தேவையில்லை என்று நினைத்தவருக்கு இப்போது அதன் தேவை புரிகிறது. 

அதனால் இதில் கேப்டன் அமெரிக்காவை அழைத்து புதிய அவெஞ்சர்ஸ் டீமை உருவாக்கச் சொல்லி கேட்டுக்கொள்கிறார்.

இந்நிலையில் இந்தியப் பெருங்கடலில் திடீரென தோன்றிய செலஸ்டியல் தீவில் இருக்கும் புதிய சூப்பர் மெட்டலான…

Read More

ஒத்த ஓட்டு முத்தையா திரைப்பட விமர்சனம்

by by Feb 16, 2025 0

முன்னாள் நகைச்சுவை அரசன் கவுண்டமணியையும், இந்நாள் நகைச்சுவை இளவரசன் யோகி பாபுவையும் இணைத்து விட்டால் அது எத்தகைய வெற்றியை பெறும் என்ற கணக்கில் எடுக்கப்பட்டிருக்கும் நகைச்சுவைப் படம்.

அது நடந்ததா பார்க்கலாம். 

வீடு, வாசல், அன்பான மனைவி என்று வாழ்ந்து வரும் அரசியல்வாதி கவுண்டமணி ஒரு தேர்தலில் ஒரே ஒரு ஓட்டு வாங்கிய காரணத்துக்காக ஒத்த ஓட்டு முத்தையா என்று அழைக்கப்படுகிறார். அவரது கார் டிரைவராக யோகி பாபு இருக்கிறார்.

தன் வாழ்வில் நடந்த ஒரு சோகத்தின் காரணமாக மணமாகாத…

Read More

கண்நீரா திரைப்பட விமர்சனம்

by by Feb 16, 2025 0

இந்தக் காதலர் தினத்துக்கு மலேசியாவில் இருந்து வந்திருக்கும் தமிழ்ப் படம். 

கதிரவென் மற்றும் சாந்தினி கவுர் ஜோடி காதலர்களாக இருக்கிறது. அதேபோல் நந்தகோபால் மற்றும் மாயா கிளம்மி காதலித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் காதல்தான் கதையா என்றால் இல்லை.

முதல் ஜோடியில் ஒரு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் கதிரவென் தங்கள் திருமணத்துக்காக சாந்தினி கவுரை தயார்படுத்த நினைக்கிறார். ஆனால் சாந்தினியோ மேற்படிப்பு முடித்து வாழ்க்கையில் உயர்ந்த பிறகுதான் கல்யாணம் என்கிற குறிக்கோளுடன் இருக்கிறார். இதில் இருவருக்கும் சற்று…

Read More

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

by by Feb 15, 2025 0

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடித்திருக்கும் ‘வா வாத்தியார்’ எனும் படத்தில் இடம்பெற்ற ‘உயிர் பத்திக்காம..’ எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. 

இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘வா வாத்தியார்’ எனும் படத்தில் கார்த்தி, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி. எம். சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.‌ கலை இயக்கத்தை டி. ஆர்….

Read More