படம் வெற்றியடைந்தால் மொட்டை போடுவது ஒரு வகை. ஆனால், அந்த வெற்றிக்குக் காரணமான அர்ப்பணிப்புடன் மொட்டை போடுவது இன்னொரு வகை.
இதில் இரண்டாவது வகையாக ஆர்.கண்ணன் தனது மசாலா பிக்ஸ் நிறுவனத்துக்காக தயாரித்து இயக்கும் ‘பூமராங்’ படத்தில் தனது தலையை மொட்டையடித்துக் கொண்டிருக்கிறார் அதர்வா. அதை சற்றும் எதிர்பார்க்காத படக்குழுவினரே அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டார்களாம்.
அந்த நிகழ்வைப் பற்றி இயக்குனர் கண்ணன் கூறினார்.
“அதர்வா இயக்குனரின் நடிகர் என்பதை இன்னுமொரு முறை நிரூபித்து விட்டார். சினிமாவில் தனது ஆரம்ப…
Read More
‘சின்ன மச்சான் செவத்த மச்சான்’ என்ற பாடல் சார்லி சாப்ளின் 2 படத்தில் இடம் பெற்றிருந்த பாடல் இது. அம்ரீஷ் இசையில் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி பாடிய இந்த பாடல் இன்று உலகம் முழுவதும் பாப்புலராகியுள்ளது..யூடியூபில் சுமார் 53 லட்சம் பார்வையாளர்கள் கண்டு களித்திருக்கிறார்கள்.
இது பற்றிய சந்தோஷத்தை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டனர் தயாரிப்பாளர் அம்மா கிரியேசன்ஸ் டி.சிவா இசையமைப்பாளர் அம்ரீஷ் மற்றும் இயக்குனர் ஷக்திசிதம்பரம்.
“இந்த பாடல் விஜய் டிவியில் செந்தில் கணேஷ் ராஜலட்சுமியால் பாடப் பட்ட…
Read More
இயக்குநர் ஹரி ஆபீஸில் இரண்டு செட் காக்கி யூனிபார்ம்கள் இருக்கின்றன. அதில் ஒன்றை எடுத்து வடித்த கஞ்சி போட்டு இரும்பு அயர்ன் பாக்ஸில் பெட்டி போட்டால் சிங்கம் ஸ்கிரிப்ட் தயார் என்று அர்த்தம். அதுவே இன்ஸ்டன்ட் லிக்யூட் ஸ்டார்ச் போட்டு எலக்ட்ரிக் பாக்ஸில் அயர்ன் பண்ணினால் சாமி ஸ்கிரிப்ட் ரெடி என்று அர்த்தம்.
ஒரு செட் யூனிபார்மை மூன்றுமுறை வடித்த கஞ்சியில் முக்கி எடுத்த ஹரி, இன்னொரு செட்டை இரண்டு முறை இன்ஸ்டன்ட் ஸ்டார்ச் போட்டு மொடமொடக்க…
Read More
‘ஏபிசிடி, ‘நேபாளி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘ஓஎஸ்டி பிலிம்ஸ்’ ராம சரவணன் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் ‘ஏஞ்சல்’.
‘தொட்டாசிணுங்கி’, ‘சொர்ணமுகி’, ‘பிரியசகி’, ‘தூண்டில்’ போன்ற படங்களின் இயக்குநர் கே.எஸ்.அதியமான் இப்படத்தை இயக்குகிறார்.
அழுத்தமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் இதில் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தெலுங்கு வெற்றிப்படமான ‘RX 100’ படத்தில் நடித்த பாயல் ராஜ்புத் மற்றும் ‘கயல்’ ஆனந்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.
டி.இமான் இசையமைக்க ஒளிப்பதிவை மேற்கொள்கிறார் கவியரசு. ‘ரொமாண்டிக் ஹாரர்’ ஜானரில்…
Read More
தலைப்பை வைத்து இது எந்த மாதிரியான படம் என்பதை யாராலும் எப்படிக் கண்டுபிடிக்க முடியாதோ அப்படியே ‘மர்டர் மிஸ்டரி’யான இந்தக் கதையின் முடிவையும் யாராலும் கண்டுபிடிப்பது கடினம்.
‘ராஜா’ என்கிற காஸ்டபிள் ‘ரங்குஸ்கி’ என்ற பெண் எழுத்தாளினியிடம் காதல் வயப்பட்டு, அவளது காதலைப்பெற பல வழிகளிலும் முயல்கிறார். அதில் ஒன்று, இன்னொரு கேரக்டர் ரங்குஸ்கி மீது காதல் வயப்படு ராஜாவை விட்டுவிடச்சொல்லி மிரட்டுவது போல் போனில் குரலை மாற்றிப் பேசுவது.
‘வேண்டாம்’ என்றால் பெண்களுக்கு ‘வேண்டும்’ என்பதுதானே..? அந்த…
Read More