இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் ‘சோலையம்மா’ படத்தில் கொடூர வில்லனாக அறிமுகமாகி தமிழ் தெலுங்கு கன்னட மொழிகளில் 70 படத்திற்கும் மேல் நடித்திருக்கும் வில்லன் நடிகர் கரிகாலன். அதில் தமிழில் ரமணா, அரவான், அடிமைச் சங்கிலி, நிலாவே வா, கருப்பு ரோஜா, தயா, தேவன் படங்கள் குறிப்பிடத்தக்கவை. இவரே இயக்கி நடித்த படம் ‘வைரவன்’.
அரவான் படத்துக்குப் பின் சில காலம் நடிப்பு இயக்கம் எதிலும் ஈடு படாமல் ரியல் எஸ்டேட் துறையில் கால் பதித்து உச்சத்தை தொட்டார்….
Read More
நம்பிக்கை நட்சத்திரம் சிவகார்த்திகேயன் நடிக்க பொன்ராம் இயக்கும் ‘சீமராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரையில் நடத்துகிறார் 24ஏஎம் தயாரிப்பாளர் ஆர்டி ராஜா.
ஆகஸ்டு 3ஆம் தேதி நடக்கவிருக்கும் இந்த இசை விழா திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதுசரி… மதுரையில் ஏன் இசை வெளியீடு..? காரணம் சொல்கிறார் ஆர்டி ராஜா…
“தமிழ்த் திரையுலகின் இதய துடிப்பாக விளங்கும் நகரம் மதுரை. நாங்கள் படத்தைத் தொடங்குவதற்கு முன்பே படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரையில்தான் நடத்துவது என்பதில் தீர்மானமாக…
Read More
‘ஆடிப் பட்டம் தேடி விதை’ என்பார்கள் பெரியோர். இதையே சினிமா மொழியாக்கி ‘ஆடிப் பட்டம் தேடி இசை’ என்கிறார் இயக்குநர் ஆர்.கண்ணன்.
அவரே தன் ‘மசாலா பிக்ஸ்’ நிறுவனத்துக்காக தயாரித்து இயக்கும் ‘பூமராங்’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டை ஆடி 18 அன்று (03-08-2018) அறிவித்திருக்கிறார். படத்துக்கு இசை அமைத்திருப்பவர் ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ‘ரதன்’.
அதர்வா முரளி கதாநாயகனாக மேகா ஆகாஷ் நாயகியாகும் படத்தில் ஆர்ஜே பாலாஜி, சுஹாசினி மணிரத்னம், உபென் படேல், காமெடி சதீஷ்…
Read More
தலைப்பைப் பார்த்து அந்த அறிமுக இட்யக்குநரைப் பற்றி ஏதும் ஏடாகூடமாக முடிவெடுத்து விடாதீர்கள். முழுதும் படித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.
பிரபல ஒளிப்பதிவாளரும் மதுரை வீரன் படத்தில் இயக்குனருமான பி.ஜி.முத்தையா தயாரிக்கும் நான்காவது படம் ‘லிசா’ 3டி. அதிநவீன 3டி டெக்னாலஜி ஸ்டீரியோ ஸ்கோப்பில் இந்தியாவில் தயாராகும் முதல் ஹாரர் திரைப்படம் லிசா.
இந்த ஹாரர் படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக நடிகை அஞ்சலி நடிக்கிறார். படத்தை அறிமுக இயக்குநர் ராஜு விஸ்வநாத் இயக்குகிறார். ‘ஏமாலி’ படத்தின் நாயகன் ஷாம்…
Read More
‘ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட்’ சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, ஸ்ரீநிவாஸ் கவிநயம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘பேய்பசி’. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கலந்து கொண்டு இசையை வெளியிட்டார்.
இயக்குநர்கள் வெங்கட்பிரபு, நலன் குமாரசாமி நடிகர்கள் ஆர்யா, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்டோர் கலந்துகொண்ட நிகழ்வில் படம் பற்றி இயக்குநர் ஸ்ரீநிவாஸ் கவிநயம் பேசியதிலிருந்து….
“முழுக்க டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் நடக்கும் முதல் படம் இது. இந்தப் படத்தின்…
Read More
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்ற சிறிய படத்தைத் தந்து பெரிய வெற்றியை அள்ளிய விஜய் சேதுபதி மற்றும் பாலாஜி தரணீதரன் ஆகியோரின் இணைப்பில் மீண்டும் உருவாகும் புதிய முயற்சிப்படம் ‘சீதக்காதி’. இது விஜய் சேதுபதியின் 25வது படமாகவும் அமைகிறது.
கோவிந்த் மேனன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்துக்கு சரஸ்காந்த் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ‘பேஷன் ஸ்டுடியோஸ்’ தயாரித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி இதுவரை ஏற்காத புராஸ்தடிக் மேக்கப் போட்டு நடித்திருக்கிறார். அதைப்பற்றி அவரே கூறும்போது, “இதில் நான் 80…
Read More
பஞ்சாயத்துத் தேர்தல் எப்போது நடக்கும் என்கிற கேள்விக்கு பதிலைப் போலத்தான் கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ எப்போது ரிலீசாகும் என்கிற கேள்விக்கு பதிலும்.
ஆனால் உற்சாகமாக இருக்கும் கௌதம் மேனன், நேற்று ‘எனை நோக்கி…’ படத்தின் கடைசி ஷெட்யூலை ஆரம்பித்திருக்கிறார். அதற்காக போட்ட ட்வீட்டில் “இந்த இறுதி ஷெட்யூலில் தனுஷுடன் சசிகுமாரும் நடிக்கிறார். திடீரென்று யோசிக்கும்போதுதான் நாங்கள் மூன்று இயக்குநர்கள் இணைந்திருக்கிறோம்..!” என்று மெசேஜ் போட்டிருக்கிறார்.
‘மூன்று நடிகர்கள்…’ என்றும்…
Read More