September 20, 2024
  • September 20, 2024
Breaking News
July 20, 2018

அறிமுக இயக்குநரின் மண்டையை உடைத்த அஞ்சலி

By 0 1005 Views

தலைப்பைப் பார்த்து அந்த அறிமுக இட்யக்குநரைப் பற்றி ஏதும் ஏடாகூடமாக முடிவெடுத்து விடாதீர்கள். முழுதும் படித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.

பிரபல ஒளிப்பதிவாளரும் மதுரை வீரன் படத்தில் இயக்குனருமான பி.ஜி.முத்தையா தயாரிக்கும் நான்காவது படம் ‘லிசா’ 3டி. அதிநவீன 3டி டெக்னாலஜி ஸ்டீரியோ ஸ்கோப்பில் இந்தியாவில் தயாராகும் முதல் ஹாரர் திரைப்படம் லிசா.

இந்த ஹாரர் படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக நடிகை அஞ்சலி நடிக்கிறார். படத்தை அறிமுக இயக்குநர் ராஜு விஸ்வநாத் இயக்குகிறார். ‘ஏமாலி’ படத்தின் நாயகன் ஷாம் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் சண்டைக்காட்சி நேற்று படமாக்கப்பட்டபோது 3டி எஃபெக்ட்டில் எடுக்க, ஒரு தோசைக்கல்லைத் தூக்கி கேமரா முன் அஞ்சலி வீசவேண்டும். டைரக்டர் “ஆக்ஷன்…” என்றதும் ஏங்கிருந்துதான் அஞ்சலிக்கு அப்படி ஒரு பலம் வந்ததோ… தோசைக்கல்லைத் தூக்கி வீச, எதிர்பாராத விதமாக கேமரா அருகில் நின்ற இயக்குனரின் நெற்றியில் பட்டு புருவம் கிழிந்திருக்கிறது.

பதறியபடி யூனிட்டில் அனைவரும் ஓடிவர, வழியும் ரத்தத்தைத் துடைத்துக்கொண்டே ஷாட்டைப் பார்த்து திருப்தியடைந்தபடி மருத்துவமனைக்குப் போனாராம். அன்று படப்பிடிப்பு அத்துடன் நிறுத்தப் பட்டது.

அஞ்சலிக்கு ஆக்‌ஷன் ரோல் கொடுத்த டைரக்டருக்கு இதுவும் வேண்டும்… வேண்டாம் இது போதும்..!