விஜய் சேதுபதி ஒரு மகா நடிகன் – பேட்ட விழாவில் ரஜினி
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்திருக்கும் பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
படத்தில் ரஜினியுடன் நடித்த சிம்ரன், த்ரிஷா, விஜய்சேதுபதி, சசிகுமார், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, படத்தின் இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் கலந்துகொண்ட விழாவில் ரஜினி பேசியதிலிருந்து…
ஹன்சிகா 50வது படத்துக்கு வரப்போகிறது ஆப்பு
ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஒரு ஹீரோவே 50வது படத்தை முடிப்பது இமாலய சாதனை என்றிருக்க, ஒரு நடிகை 50வது படத்தில் நடிப்பது ஆகப் பெருமைதான். அந்த பெருமைக்குரிய நடிகை ஹன்சிகா மோத்வானி.
அவர் குழந்தை நட்சத்திரமாக இருந்ததாலும், பல மொழிப்படங்களில் நடிப்பதாலும் இது சாத்தியப்பட்டது எனலாம். அவரது பொன்விழாப்படமாக அமைவது ‘மஹா’ என்கிற படம். ‘எட்சட்ரா’ வி.மதியழகன் தயாரிப்பில் யு.ஆர்.ஜமீல் இயக்கும் இந்தப்படத்தில் ஹன்சிகா முதன்மைப்பாத்திரம் ஏற்கிறார்.
நிஜ நோயாளி ஹீரோவான படத்தை தேனாண்டாள் வெளியிடுகிறது
இந்தப்படத்தின் கதையைக் கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். கேரளாவில் உள்ள ஒரு கோடீஸ்வரருக்கு மூன்று பிள்ளைகள். அந்தக் குடும்பமே கிருஷ்ண பக்தர்கள் கொண்ட குடும்பம்.
நன்றாகப் போய்க் கொண்டிருந்த அவரக்ளது வாழ்க்கையில் ஒரு நாள் புயலடித்தது. கோடீஸ்வரரின் 3வது பையனுக்கு இதயத்தில் ஒரு நோய். Chronic Constrictive Pericarditis என்பது நோயின் பெயராம். அது 10 லட்சம் பேரில் ஒருவருக்கு மட்டுமே வரும் நோய் என்றிருக்க அதைக் குணப்படுத்தும் அறுவை சிகிச்சைக்கு நீண்ட நேரம் பிடிப்பதோடு இச்சிகிச்சையில் பிழைக்கும் வாய்ப்பும்…
Read More
பா.இரஞ்சித் களமிறக்கும் இரண்டாவது குண்டு
இயக்குநர் பா.இரஞ்சித்துக்கு தன் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் மாரி செல்வராஜ் இயக்கி வெளியான ‘பரியேறும் பெருமாள்’ வெற்றித் திரைப்படமாக அமைந்ததி ல் மட்டற்ற மகிழ்ச்சி.
விமர்சகர்களும் கொண்டாடிய அந்தப் படத்தைத்தொடர்ந்து நீலம் புரொடக்சன்ஸின் இரண்டாவது படத்தைத் தயாரிக்கிறார் பா.இரஞ்சித். தலைப்பே மிரட்டலாக ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தினை ‘அதியன் ஆதிரை’ என்கிற புதுமுக இயக்குநர் இயக்குகிறார்.
இவர் இயக்குநர் பா.இரஞ்சித்திடம் மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களில் உதவியாளராக பணியாற்றியவர்.
இதில்…
Read More
சீமத்துரை திரைப்பட விமர்சனம்
வாழ்க்கையிலிருந்து சினிமா எடுப்பது ஒரு வகை. சினிமா பார்த்து சினிமா எடுப்பது இன்னொரு வகை. இது இரண்டாம் வகைப்படம் என்று உணரவைக்கிறார் இயக்குநர் சந்தோஷ் தியாகராஜன்.
ஒவ்வொரு தாய்க்கும் தன் மகன் சீமத்துரைதான் – அவன் என்னதான் ஊரைச்சுற்றி பொறுப்பில்லாமல் அலைந்தாலும். அப்படித்தான் ஏழைத்தாயான விஜி சந்திரசேகரின் மகனாக கீதன் வருகிறார். அப்பா இல்லாத பிள்ளையாக வளரும் அவரை அம்மா செல்லமாக வளர்க்க, அதன் காரணமாகவே ஊரைச்சுற்றிக்கொண்டு லந்து பண்ணித்திரியும் அவருக்கும் சினிமா வழக்கப்படியே ஊர்ப் பெரியமனிதரின்…
Read More
பவர் ஸ்டாரை காணவில்லை… பரவும் தகவல்
நடிகனாக ஆகியே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு கோலிவுட்டில் புகுந்து, நினைத்தது போலவே ஷங்கர் படம் வரை நடித்துப் புகழ் பெற்றவர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன்.
டாக்டர் தொழில் உள்பட பல தொழில்கள் செய்துவந்த அவர் மீது சீட்டிங் வழக்குகள் பாய்ந்து சிறை சென்றவர்… அதிலும் திகார் வரை சென்று புகழ் (!) பெற்றவர்.
இந்நிலையில் அவரைக் காணவில்லை என்று அவர் மனைவி ஜூலி அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறாராம். அதில் நண்பரைக் காணச் சென்ற அவரைக்…
Read More
இந்தியாவில் அதிக சம்பளம் – முதலிடம் சல்மான் கான்… ரஜினி 14வது இடம்… கமல் 71வது இடம்
‘போர்ப்ஸ்’ பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2018-ம் ஆண்டுக்கான முதலிடத்தில் உள்ள நூறு பிரபலங்களையும் அவர்களது சம்பளத்தையும் வெளியிட்டுள்ளது போர்ப்ஸ்.
இதில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் முதலிடத்தில் இருக்கிறார். சல்மான் கான் இந்த ஆண்டில் சம்பாதித்தது எவ்வளவு தெரியுமா..? மயக்கம் போட்டு விடாதீர்கள். அவரது ஆண்ரு வருமானம் ரூ.253.35 கோடியாம்.
கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியாகி நல்ல வசூலை ஈட்டிய ‘டைகர்…
Read More