நடிகை தன்ஷிகாவுக்கு இன்று பிறந்தநாள். சமீபத்தில் படத்துக்காக சிலம்பாட்டம் பயின்றிருக்கிறார் தன்ஷ்.
எனவே இன்று தனது பிறந்த நாளை தனது சிலம்பாட்டம் குருவான பாண்டியன் மாஸ்டர் அவர்களின் இடத்தில் கொண்டாட முடிவு செய்து அங்கே சென்றார்.
தனது பிறந்தநாளின் முதல் நிகழ்வாக தனது குருவிற்கு வணக்கம் செலுத்தியவர் அங்கு குழுமியிருந்த பல்வேறு மாவட்ட ரசிகர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.இந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் நடன இயக்குனர் ஸ்ரீதர் கலந்து கொண்டு தனது வாழ்த்துகளைத்தெரிவித்தார்.
ரசிகர்களின் அன்பிற்கிணங்க தன்ஷிகா சிலம்பாட்டம்…
Read More
விஜய் சேதுபதி வித்தியாச வேடமேற்று டிசம்பர் 20 அன்று உலகமெங்கும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக, இதுவரை அறியப்படாத ஒரு நடிகர் நடிக்கிறார்.
அவர் ஒரு பிரபல நடிகரின் அண்ணனும் கூட. ஆம், நடிகர் வைபவ்வின் மூத்த சகோதரர் சுனில், இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரம் மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறதாம்.
“உண்மையில், இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நடிகரை கண்டுபிடிப்பது மிகப்பெரிய ஒரு சவாலாக…
Read More
கஜா தன் கொடுங்கரங்களால் கலைத்துப் போட்ட தமிழகப் பகுதிகளைச் சீரமைக்க பல துறையினரும் உதவிகள் செய்து வருவதைப் போலவே திரைத்துறையிலிருந்தும் பலர் முன்வந்து உதவிகளைச் செய்து வருகிறார்கள்.
இதில் கடந்த வாரம் ஜோதிகா நடிப்பில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘காற்றின் மொழி’ தயாரிப்பாளர் தனஞ்செயன் ஒரு நூதன திட்டத்தைத் தன் உதவியாக மட்டுமல்லாமல், ரசிகர்களும் சேர்ந்து உதவும் முகமாக அறிவித்திருக்கிறார்.
அந்த உதவி அவர்கள் மொழியில் கீழே…
“காற்றின் மொழி’ திரைப்படத்தை ஒரு சிறந்த குடும்பப்படமாக கொண்டாடி வரும்…
Read More
நேற்று நயன்தாரா தன் பிறந்தநாளைக் காதலர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடினார். யார் யார் அவருக்கு என்னென்ன பரிசுகள் கொடுத்தார்களோ தெரியாது. ஆனால், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவருக்கு அளித்த பரிசுதான் உன்னதமானது.
ஏற்கனவே அவர் உருவாக்கிய வந்தே மாதரம் ஆல்பம் போல் இப்போது இந்தியாவையும், இந்திய தேசிய விளையாட்டான ஹாக்கியையும் உயர்த்தும் பொருட்டு, ‘ஜெய்ஹிந்த் இந்தியா…’ எனும் வீடியோ ஆல்பத்துக்கு இசையமைத்திருக்கிறார். அதன் ப்ரொமோ வீடியோவை நேற்று நயன்ஸின் பிறந்தநாளில் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார்.
Read More
ஒரு நடிகனின் பரிணாமத்தில் காக்கிச் சட்டை போட்டால்தான் அவர் முழுமையான நடிகனாகிறார் என்பது சினிமா சித்தாந்தம். அந்த வகையில் நடிகராகிவிட்ட இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியும் இந்தப் படத்தில் காக்கிச்சட்டை போட்டுக்கொண்டு ‘தி கம்ப்ளீட் ஆக்டர்’ ஆகி விட்டார்.
ஆனால், வழக்கமான போலீஸ் கதைகள் தவிர்த்து இதில் ஒரு முக்கியமான சமூகப்பிரச்சினையை அவர் கையில் கொடுத்து “அட…” போட வைக்கிறார் இயக்குநர் கணேஷா.
சமீப காலங்களில் நடந்த வன்கொடுமைக் குற்றங்களில் ஈடுபட்ட பெரும்பாலானவர்கள் இளம் வயது குற்றவாளிகள்தான். இது ஏதோ…
Read More