March 25, 2025
  • March 25, 2025
Breaking News
November 19, 2018

இந்தியாவெங்கும் வைரலாகும் வீடியோவில் நயன்தாரா

By 0 1035 Views

நேற்று நயன்தாரா தன் பிறந்தநாளைக் காதலர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடினார். யார் யார் அவருக்கு என்னென்ன பரிசுகள் கொடுத்தார்களோ தெரியாது. ஆனால், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவருக்கு அளித்த பரிசுதான் உன்னதமானது.

ஏற்கனவே அவர் உருவாக்கிய வந்தே மாதரம் ஆல்பம் போல் இப்போது இந்தியாவையும், இந்திய தேசிய விளையாட்டான ஹாக்கியையும் உயர்த்தும் பொருட்டு, ‘ஜெய்ஹிந்த் இந்தியா…’ எனும் வீடியோ ஆல்பத்துக்கு இசையமைத்திருக்கிறார். அதன் ப்ரொமோ வீடியோவை நேற்று நயன்ஸின் பிறந்தநாளில் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார்.

Jaihind India

Jaihind India

இந்தியாவெங்கும் பரபரப்பாக வைரலாகிவரும் இந்த வீடியோவில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் ஷாரூக் கான் நடித்திருக்கிறார். இவர்களுடன் நயன்தாராவும் ஒரு காட்சியில் நடித்திருக்கிறார். இவர்கள் மட்டுமல்லாமல் ஸ்வேதா மோகன், டிரம்ஸ் சிவமணி, நீதி மோகன், சாஷா திருபாதி உள்ளிட்டோரும் இதில் பங்கெடுத்துள்ளனர்.

இந்த ‘ஜெய்ஹிந்த் இந்தியா’ ஆல்பத்தின் பாடலை பிரபல இந்திப் பாடலாசிரியர் குல்சார் எழுத, இந்த வீடியோவை ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

நயன்ஸைக் குளிர்வித்த அந்த வீடியோ கீழே…