லாரா திரைப்பட விமர்சனம்
காக்கிச்சட்டையின் தீரம் சொல்லும் கதைகளும், புலன் விசாரணைக் கதைகளும் எந்தக் காலத்திலும் அலுப்புத் தட்டுவதே இல்லை. இந்த உண்மையைப் புரிந்து வைத்துக் கொண்டிருக்கும் இயக்குனர் மணி மூர்த்தி, ஒரு கிரைம் த்ரில்லராக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார்.
காரைக்கால் பகுதியில் நடக்கிற கதையில் ஒரு இளம் பெண்ணின் சடலம் பாறை இடுக்கில் கரை ஒதுங்குகிறது. சில நாட்கள் கவனிக்கப்படாமல் இருந்திருப்பதால் அந்தப் பெண்ணின் முகத்தை மீன்கள் கடித்துக் குதறி அடையாளம் தெரியாமல் ஆகியிருக்கிறது.
இன்னொரு பக்கம் தன்னுடைய மனைவியைக் காணவில்லை…
Read More
