January 23, 2022
  • January 23, 2022
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

டிராஃபிக் ராமசாமி விமர்சனம்

by by Jun 23, 2018 0

அப்போதெல்லாம் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரனைச் சொல்லும்போது ‘சட்டத்தைக் கையில் எடுத்து வைத்து விளையாடுபவர்’ என்பார்கள். அப்படித்தான் அவர் படங்களில் சட்டத்தைத் தன் கையில் எடுத்துக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாகப் போட்டு விளையாடுவார்.

அப்படிப்பட்ட அவரையே ஒரு கையிலும், சட்டத்தை இன்னொரு கையிலுமாக எடுத்து ‘ஜக்ளிங்’ விளையாட்டு விளையாடித் தள்ளியிருக்கிறார் அவரிடமே சினிமா பயின்ற விக்கி.

வாழும் உதாரணமாக இருக்கக் கூடிய சமூகப் போராளி ‘டிராஃபிக் ராமசாமி’யின் வாழ்க்கையை ஆவணப் படுத்த வேண்டுமென்றால் எவ்வளவு பொறுப்புடனும், கவனமாகவும் அந்த முயற்சியை மேற்கொண்டிருக்க…

Read More

ஆந்திரா மெஸ் விமர்சனம்

by by Jun 23, 2018 0

படத்தின் ஒன்லைன் என்ன என்று கேட்டால் இந்தப்பட டைரக்டர் ஜெய் என்ன பதில் சொல்வாரோ தெரியாது. ஆனால், நாம் புரிந்து கொண்டது, “யார் எப்படி நினைக்கிறீர்களோ, அப்படி வாழுங்கள்…” என்பதாகத்தான் இருக்கும்.

பணம் சம்பாதிக்க வக்கில்லாமல் காதலியால் கைவிடப்படும் ஏ.பி.ஸ்ரீதர், எப்படியாவது சம்பாதிக்க ஆசைப்பட்டு நண்பர்கள் ராஜ் பரத், மதி, பாலாஜியுடன் பெரும்பணம் அடிக்கும் அசைன்மென்ட்டை ஒத்துக்கொண்டு அதையும் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்காமல் லவட்டிக்கொண்டு காட்டில் ஒரு ஜமீன் தோட்டத்தில் அடைக்கலமாகிறார். பின்னர் என்ன…

Read More

அன்று பாவனா இன்று மேகா ஆகாஷ் – இயக்குநர் கண்ணனின் ஆக்‌ஷன்

by by Jun 21, 2018 0

மணிரத்னத்தின் பாசறையில் பயின்ற இயக்குனர் கண்ணன் ‘பர்ஃபெக்‌ஷனை’ விரும்புபவர் என்பதில் ஆச்சரியமில்லை. ஷூட்டிங்கில் மட்டுமல்லாமல் போஸ்ட் புடக்‌ஷனில் டப்பிங் பேசுவதில் கூட ஒரு முக்கியக் கதாபாத்திரத்துக்கு வேறு ஒருவரை டப்பிங் பேசவைப்பதை அவர் விரும்புவதில்லை. அதனால் படத்தில் நடித்த நடிகர்களையே டப்பிங் பேசச் சொல்லி வலியுறுத்துவார்.

தன் முதல் படமான ‘ஜெயம் கொண்டான்’ படத்திலேயே பாவனாவை டப்பிங் பேச வைத்தவைத்தவர் அவர். இப்போது கண்ணன் இயக்கி முடித்திருக்கும் ‘பூமராங்’ படத்தில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்திருக்கும்…

Read More

சர்கார் முதல் பார்வை சர்ச்சைக்கு உள்ளாகுமா..?

by by Jun 21, 2018 0

நாளை (22-06-2018) விஜய்யின் பிறந்தநாளாக இருக்க, அவர் ரசிகர்களுக்கான அவரது பரிசாக சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் விஜய்யின் 62வது படத்தலைப்பும், முதல் பார்வை போஸ்டரும் வெளியிடப்பட்டது. வெளியான நேரம் முதலே வைரலாகிவிட்ட ‘சர்கார்’ படத்தலைப்பு ஒருபக்கம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டும், இன்னொரு பக்கம் இப்போதைய ட்ரெண்டான ‘ட்ரோல்’ செய்யப்பட்டும் வருகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிவரும் இந்தப்படத்துக்கு இசை ஏ.ஆர்.ரஹ்மானாக இருக்க, இந்த டீமுடன் பாடலாசிரியர் விவேக்கும் இணைந்திருக்கிறார். விஜய்-ஏ.ஆர்.ரஹ்மான்-விவேக் கூட்டணியில் உருவான ‘ஆளப்போறான் தமிழன்’ உலகமெல்லாம் கொண்டாடப்பட்ட நிலையில் ‘சர்காரி’ல்…

Read More

இட்லி சாப்பிட 29ம் தேதி வரை பொறுத்திருங்க..!

by by Jun 21, 2018 0

தமிழ்ப்படங்களுக்கு டைட்டில் வைப்பதென்பது எள்ளின் தோலை உரித்து அதன்மேல் ஈயம் பூசுகிற வேலை. அதனால் இருக்கிற தலைப்புகளையே எடுத்து வைத்து ரசிகர்களைத் திணறடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வித்தியாமாக தலைப்பு வைக்கிறேன் பேர்வழி என்று வதைத்துக் கொண்டிருப்பவர்கள் இன்னொரு புறம். இதில் சொந்தமாக எல்லோருக்கும் பிடிக்கிற தலைப்பைப் பிடிப்பவர்கள் வெகு சிலரே. அது கதைக்கும் பொருத்தமாக இருக்க வேண்டுமென்பதுதான் மிக முக்கியம்.

அந்த வகையில் இயக்குநர் வித்யாதரன் தன் படத்துக்கு ‘இட்லி’ என்று தலைப்பு வைத்துள்ளார். காமெடி த்ரில்லர் ஜேனரில்…

Read More

செம போத ஆகாதே படத்தின் Sneak Peek – வீடியோ

by by Jun 20, 2018 0

Read More

சிவகார்த்திகேயனுக்கு முன்பே ‘சீம ராஜா’ ஆனவர்…

by by Jun 19, 2018 0

இன்றைய சினிமாவில் தமிழ் சினிமா ஸ்டண்ட் மாஸ்டர்கள்தான் அகில இந்திய அளவில் கோலோச்சுகின்றனர். அவர்களில் ஒருவர் ‘ஸ்டன் சிவா’. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று எல்லா முன்னணி ஹீரோக்களுக்கும் சண்டைக் காட்சிகள் அமைத்துப் பெயர் பெற்று வருகிறார்.

இப்போது இவர் நடிகரும் கூட. சின்னச் சின்னதாக கேரக்டர்களில் நடித்து வந்தவர் இப்போது வெளியாகி ஓடிக்கோண்டிருக்கும் விஜய் மில்டனின் ‘கோலி சோடா 2’ படத்தில் வில்லன்கள் மூவரில் முக்கியமானவர்.

மாஸ்டராக சேது, நந்தா, பிதாமகன் என்று வரிசையாக…

Read More

ஜெய் படத்தின் டிரைலரில் சூர்யா சொன்ன கரெக்‌ஷன்

by by Jun 19, 2018 0

நடிகர் நிதின் சத்யா, வெளிநாட்டில் படித்துவிட்டு வந்தாலும் சினிமா அவரை சென்னையோடு கட்டிப் போட்டு விட்டது. நடிகராகத் தெரிந்த அடையாளம் போதுமென்று நினைத்தாரோ என்னவோ, படா படா ஹீரோக்களே கைவைக்கத் தயங்கும் தயாரிப்புத் துறையில் இறங்கிவிட்டார்.

அவர் தயாரித்து முடித்திருக்கும் படம், ‘ஜருகண்டி’. இந்தியா முழுக்கத் திருப்பதி போனவர்கள் அத்தனை பேருக்கும் தெரிந்த ஒரு சொல்லாக இருக்கவே ‘சீக்கிரம் போங்க’ என்று பொருள்படும் தெலுங்குச் சொல்லையே ‘நேஷனல் லாங்குவேஜ்’ ஆக நினைத்துத் தலைப்பில் வைத்துவிட்டார்.

யூனிட் முழுக்க அவர்…

Read More

சிவகார்த்திகேயனின் சீமராஜா பேர்வெல்லுக்கு 2 நாள்

by by Jun 17, 2018 0

சிவகார்த்திகேயனின் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் ’24ஏஎம் ஸ்டூடியோஸ்’ ஆர்.டி.ராஜா தயாரிப்பில் அமைந்த ‘சீம ராஜா’ என்பது தெரிந்த விஷயம்தான். பொன்ராம் இயக்குவதால் இந்த வெற்றிக் கூட்டணிப் படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இன்னும் இரண்டு நாள்களில் படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் முடிந்து ஜூன் 19-ம்தேதியன்று படப்பிடிப்பு முடிந்ததற்கான ஃபேர்வெல் விழா நடக்க இருக்கிறது.

சமந்தா, சிவகார்த்திகேயனின் ஜோடியாகும் படத்தில் கீர்த்தி சுரேஷும் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பது சமீபத்தில்தான் அறிவிக்கப்பட்டது. காமெடிக்கு சூரி, இசைக்கு டி.இமான் இருக்கிறார்கள்.

முன்பே…

Read More

நாம் எடுக்கும் சினிமாவை யாரோ தீர்மானிக்கிறார்கள் – இயக்குநர் ஆதங்கம்

by by Jun 16, 2018 0

‘ஷோ போட் ஸ்டுடியோஸ்’ சார்பில் நிர்மல் கே.பாலா தயாரித்திருக்கும் ‘ஆந்திரா மெஸ்’ படத்தின் கதாநாயகனாக ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘ரிச்சி’ போன்ற படங்களில் நடித்த ராஜ் பரத், கதாநாயகிகளாக தேஜஸ்வினி, பூஜா தேவரியா நடித்திருக்கின்றனர். இவர்களுடன் புகழ்பெற்ற ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

நான்கு திருடர்கள், ஒரு முன்னாள் ஜமீன்தார், அவருடைய இளம் மனைவி.. இவர்களின் வாழ்வில் அடுத்தடுத்து நடக்கிற சம்பவங்களின் தொகுப்பை மாறுபட்ட கோணத்தில் சொல்லியிருக்கும் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார், பிரபல விளம்பரப்…

Read More