June 17, 2026
  • June 17, 2026
Breaking News
  • Home
  • Uncategorized
  • மக்கள் தலைவா திரைப்பட விமர்சனம்

மக்கள் தலைவா திரைப்பட விமர்சனம்

By on June 17, 2026 0 2 Views

தலைப்பே சொல்லிவிடுகிறது இது எந்த வகைப்படமென்று சொல்லி விடுகிறது. பொலிட்டிக்கல் சட்டையர் எனப்படும் அரசியல் நையாண்டி.படம்தான் இது.

உழைப்புக்கு வேலை கொடுக்காமல், பிழைப்பு நடத்தும் விதமாக மக்கள் பிரச்சினை தீர்க்கவென்று போராட்டம் நடத்தி அதன் மூலம்.சம்பந்தப்பட்டவர்களிடம் பணம் பெற்று வாழ்க்கை நடத்தி வருகிறார் தமிழ்க் குடிமகன் என்ற பெயர் கொண்ட நாயகன் ரவி மரியா.

அவரை வைத்து ஒரு அரசியல் சதுரங்கத்தை ஆடிப் பார்த்துவிட, தொழிலதிபர் பச்சமுத்து பழனிமாணிக்கம் என்ற ராதாரவி முடிவு செய்கிறார்.

முதலில் யோசித்தாலும் பிறகு ஒத்துக்கொண்டு, முதலில் நடிகராகி பின்னர் அரசியலுக்கு வரும் ரவி மரியா அதிரடித் திட்டங்களை அறிவித்து தேர்தலில் நிற்கிறார். இதற்குப் பின்புலமாக ராதாரவியும் அவரது ‘உள்ளே வெளியே,’ கட்சியில் இணைகிறார்.

வானவில் நிறத்துடன் களம் இறங்கும் உ.வெ கட்சியில் தேர்தலுக்கு முன் ரவி மரியா விபத்தில் சிக்கி, முதல்வராக மக்களில் ஒருவரைத்.நீங்களும் ஆகலாம் சி எம் என்ற பிரச்சாரதத்தை முன்வைக்கிறார்கள்.

அதன்.முடிவு என்ன ஆனது, இயல்பில் கர்மவீரர் தொண்டராக ராதாரவி இப்படி மக்களை ஏமாற்றும் அரசியல் வேலையில் ஏன் என்பதெல்லாம் மீதிப் படத்தில்.

பல படங்களில் காமெடியன் ஆக நடித்திருக்கும் ரவி மரியாவுக்கு முதல் முதலாக நாயகன் வேடம். அவரது வழக்கப்படியே நக்கலாக நடித்து தான் பெயரைக் காப்பாற்றிக் கொள்கிறார்.

தொழிலதிபராக நடித்திருக்கும் ராதாரவி தான் அனுபவ நடிப்பால் கவர்கிறார். அவரது செயலுக்குப் பின்னால் ஏதோ ஒரு திட்டம் இருக்கிறது என்பது ஒரு மாதிரி புரிகிறது.

இவர்களுடன் நிஜ அரசியல்வாதிகள் பழ.கருப்பையா, நாஞ்சில் சம்பத் போன்றோரும் நடித்திருப்பது படத்துக்கு நிஜ அரசியல் நிறத்தைக் கொடுத்திருக்கிறது.