September 20, 2024
  • September 20, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டிய ரஜினிக்கு ரூ 100 அபராதம்
July 24, 2020

சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டிய ரஜினிக்கு ரூ 100 அபராதம்

By 0 508 Views

சூப்பர் ஸ்டார் ரஜினி கார் ஓட்டிய படங்கள் சமூக வலைதளங்களில் வந்தாலும் வந்தன அதை தொடர்ந்து பிரச்சனையும் வரிசையாக வந்து கொண்டிருக்கிறது.

புதிதாக வாங்கிய காரில் அவர் கேளம்பாக்கம் பண்ணை வீட்டிற்கு சென்றார் அப்படி செல்லும்போது கேளம்பாக்கம் செங்கல்பட்டு மாவட்டத்தில் வருவதால் அவர் e பாஸ் வாங்கி சென்றாரா என்பது குறித்த ஆய்வு நடத்தப்பட்டதில் அவர் அப்படி e பாஸ் வாங்கி செல்லவில்லை என்பது தெரிந்தது.

இப்போது அடுத்த பிரச்சனை முளைத்திருக்கிறது.

சென்னையிலிருந்து செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டிற்கு காரில் சென்றபோது சென்னை-செங்கல்பட்டு மாவட்ட எல்லை பகுதியான செம்மஞ்சேரியில் சோதனையில் ஈடுபட்டு வரும் செங்கல்பட்டு மாவட்ட போலீசார் சீட்பெல்ட் அணியாமல் சென்றதால் போக்குவரத்து விதிமுறையை மீறி சென்றதாக கூறி 100 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

Reciept for Rajini's Violation

Reciept for Rajini’s Violation

புகழ் பெற்று விட்டால் எப்படி எல்லாம் பிரச்சனை வருகிறது பாருங்கள். அத்துடன் புகழ் பெற்றவர்கள் எத்தனை கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.