நேரத்தை வீணாக்காமல் வேலையைப் பார்ப்போம் என்றார் தனுஷ் – வாத்தி இயக்குனர்
இனி வலிமையான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் – சிம்ஹா
நடிகர் சிம்ஹா நடிப்பில் தயாராகி பிப்ரவரி 10ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு மற்றும்
கன்னட மொழிகளில் வெளியாகவிருக்கும் ‘வசந்த முல்லை’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. கன்னட மொழி முன்னோட்டத்தை ‘சூப்பர் ஸ்டார்’ சிவராஜ் குமாரும், தெலுங்கு மொழி முன்னோட்டத்தை ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவியும், தமிழ் மொழி முன்னோட்டத்தை மூத்த பத்திரிக்கையாளர்களும் வெளியிட்டனர்.
அறிமுக இயக்குநர் ரமணன் புருஷோத்தமா இயக்கத்தில் உருவான முதல் திரைப்படம் ‘வசந்த முல்லை’. இதில் சிம்ஹா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக…
Read More
கருமேகங்கள் கலைகின்றன – நடிக்கும் இயக்குனர்கள் பட்டியலில் தானும் இணைந்த தங்கர்
“கருமேகங்கள் கலைகின்றன” தங்கர்பச்சான் இயக்கத்தில் ஏற்கனவே டைரக்டர்கள் பாரதிராஜா, கவுதம் வாசுதேவ் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர்,ஆர்.வி.உதயகுமார் நடித்து வருகிறார்கள்.
இந்த இயக்குனர்கள் வரிசையில் தங்கர் பச்சானும் ஒன்றாக இணைந்தார். இவர் வக்கீலாக கவுரவ வேடத்தில் நடித்தார். படத்தின் முக்கியமான காட்சியில் இவர் நடித்தது சிறப்பு அம்சம்.

VAU மீடியா என்டர்டெயின்மென்ட் சார்பாக வீரசக்தி தயாரித்திருக்கும் இப்படம் தமிழின் முக்கிய இயக்குனர்கள் நடித்திருப்பதால் முக்கியத்துவம் பெறுகிறது. இதில் அதிதி பாலன் முக்கிய…
Read More
விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்
தெலுங்கின் முன்னணி நட்சத்திர இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா – சமந்தா ஜோடியாக நடிக்கும் ‘குஷி’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள்.
முன்னணி இயக்குநர் சிவ நிர்வானா இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘குஷி’. இதில் விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகும் இந்த திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து, இயக்குநர்…
Read More
வாணி ஜெயராம் இறந்தது எப்படி? – பணியாளர் சொல்லும் தகவல்
வாணி ஜெயராம் வீட்டில் வீட்டில் பணிபுரிந்து வரும் மலர்க்கொடி கூறும்போது, “நான் எப்போதும் காலை 10.15 மணிக்கு வீட்டிற்கு வருவேன். அப்படித்தான் இன்றும் 10.45 மணி அளவில் வீட்டுக்கு வந்த காலிங்பெல் அடித்தேன். நான்கு, ஐந்து முறை பெல் அடித்தும் கதவை திறக்கவில்லை. அப்போது எனக்கு சந்தேகம் வந்ததது. பின்னர் போன் செய்தேன் எடுக்கவில்லை.
என் கணவரிடம் தொலைபேசியில் அழைக்கச் சொன்னேன். அவரும் ஐந்து முறை முயற்சித்தும் தொலைபேசி அழைப்பு எடுக்கப்படவில்லை. கீழ் வீட்டுக்காரரிடம் சென்னோம். பிறகு,…
Read More
தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்பட விமர்சனம்
ஆணுக்குப் பெண் சரிநிகர் சமம் என்று உலகம் முழுக்க நிரூபிக்கப்பட்டு வந்தாலும், நம் நாட்டில் குழந்தை வளர்ப்பில் இருந்து போதிக்கப்பட்டு வரும் ஆணாதிக்கம் பெரும்பாலும் ஒரு பெண்ணை சமையலறைக்கும், படுக்கை அறைக்கும் மட்டுமே பயன்படுத்தி வருவது பரிதாபத்திற்குரிய விஷயம்.
அந்த ஆணாதிக்க மனப்பான்மைக்கு ஒரு சவுக்கடி கொடுத்த காரணத்தினாலேயே மலையாளத்தில் வெளியான ‘தி கிரேட் இண்டியன் கிச்சன் ‘ வெற்றி பெற்றது.
அங்கே சமைத்த அந்த உண(ர்)வு நீர்த்துப் போகாமல் அப்படியே தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் ஆர்.கண்ணன்.
மூலத்தின்…
Read More
இயக்குனர் ஆர்.கண்ணனுடன் காளிகாம்பாள் கோவில் சென்ற ஹன்சிகா
மசாலா ஃபிக்ஸ் படம் நிறுவனம் சார்பில் தயாரித்து டைரக்ட் செய்து வரும் படம் “காந்தாரி” .
இதில் நாயகியாக ஹன்சிகா நடித்து வருகிறார். இதன் படப் பிடிப்பு முடிவடைந்த நிலையில் தனது டைரக்டர் ஆர்.கண்ணனை அழைத்து கொண்டு சென்னை காளிகாம்பாள் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டார் ஹன்சிகா.
இதற்கு முன் படபிடிப்பு ஆரம்பித்த அன்றும் கண்ணனோடு சாமி கும்பிட்ட பிறகு தான் #காந்தாரி படபிடிப்பில் கலந்துகொண்டார் . ஆர்.கண்ணன் இயக்கி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த “ தி கிரேட்…
Read More
இந்த முகத்தையும் வச்சு ஏதாவது செய்ய முடியும்னு நினைச்சா என்கிட்ட வாங்க – யோகிபாபு
இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘பொம்மை நாயகி’. நடிகர் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார் இயக்குனர் ஷான். கதாநாயகியாக சுபத்ரா நடிக்க, யோகிபாபுவின் மகளாக குழந்தை நட்சத்திரம் ஸ்ரீமதி நடித்துள்ளார்.
இவர்களுடன் ஜி.எம் குமார், அருள்தாஸ், ‘மெட்ராஸ் ஜானி’ ஹரிகிருஷ்ணன், கேபிஒய் ஜெயச்சந்திரன், இயக்குனர் எஸ்.எஸ் ஸ்டான்லி, லில்லி ஜான், ராக்ஸ்டார் ரமணியம்மா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள இந்த…
Read Moreதமிழில் தலைப்பு வைக்கும் சட்டத்தை முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கொண்டுவர வேண்டும் – பேரரசு
ASW கிரியேஷன்ஸ் மற்றும் JSJ சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் ஹென்றி டேவிட் மற்றும் ஜஸ்டின் விஜய் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஸ்ட்ரைக்கர்’.
ஜஸ்டின் விஜய் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக வித்யா பிரதீப் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ராபர்ட் மாஸ்டர், கஸ்தூரி, அபிநயாஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் படக் குழுவினருடன் இயக்குநர்கள் சுசீந்திரன், பேரரசு, சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன், நடிகர் இமான் அண்ணாச்சி,…
Read More
கல்லூரிக்கு கைக்குழந்தையுடன் போகும் கவின் – DADA பட சுவாரஸ்யம்
’ஜிப்ஸி’ படத்தை அடுத்து ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரித்திருக்கும் படம் ‘டாடா’. DADA என்று ஆங்கிலத்தில் தலைப்பிடப் பட்டிருக்கும் இதன் பொருள் குழந்தைகள் மொழியில் ‘ அப்பா’ என்பதே.
கவின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அபர்ணா தாஸ் நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் கே.பாக்யராஜ், விடிவி கணேஷ், ஐஸ்வர்யா பாஸ்கரன், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ்.கே உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அறிமுக இயக்குநர் கணேஷ் கே.பாபு எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு புதுமுக இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையமைத்துள்ளார். எழில்…
Read More