October 4, 2023
  • October 4, 2023
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • கருமேகங்கள் கலைகின்றன – நடிக்கும் இயக்குனர்கள் பட்டியலில் தானும் இணைந்த தங்கர்
February 5, 2023

கருமேகங்கள் கலைகின்றன – நடிக்கும் இயக்குனர்கள் பட்டியலில் தானும் இணைந்த தங்கர்

By 0 150 Views

“கருமேகங்கள் கலைகின்றன” தங்கர்பச்சான் இயக்கத்தில் ஏற்கனவே டைரக்டர்கள் பாரதிராஜா, கவுதம் வாசுதேவ் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர்,ஆர்.வி.உதயகுமார் நடித்து வருகிறார்கள்.

இந்த இயக்குனர்கள் வரிசையில் தங்கர் பச்சானும் ஒன்றாக இணைந்தார். இவர் வக்கீலாக கவுரவ வேடத்தில் நடித்தார். படத்தின் முக்கியமான காட்சியில் இவர் நடித்தது சிறப்பு அம்சம். 

VAU மீடியா என்டர்டெயின்மென்ட் சார்பாக வீரசக்தி தயாரித்திருக்கும் இப்படம் தமிழின் முக்கிய இயக்குனர்கள் நடித்திருப்பதால் முக்கியத்துவம் பெறுகிறது. இதில் அதிதி பாலன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்

இப்போது இதன் படப்பிடிப்பு முடிவடைந்தது. நீண்ட நாட்களுக்கு பின் எடிட்டர் பி.லெனின் எடிட்டிங்கில் இதன் எடிட்டிங் வேலைகளும் முடிந்து இப்பொழுது டப்பிங் பணிகள் தொடர்து நடந்து வருகிறது.

விரைவில் இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளிவருகிறது.