February 13, 2026
  • February 13, 2026
Breaking News

Currently browsing விமர்சனம்

ஜாக்பாட் திரைப்பட விமர்சனம்

by by Aug 2, 2019 0

ஜோதிகா முக்கிய வேடமேற்றாலே பெண்ணுரிமைக்காகவும், கல்விக்காகவும் போராடுகிற வேடமாகத்தான் அது இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு விட்டது நிஜம்தான்.

ஆனால், ‘நாங்களும் ஹீரோதான்…” பாணியில் ஒரு கமர்ஷியல் ஆக்‌ஷன் ஹீரோ என்னென்ன சாகசங்கள் புரிவாரோ அப்படியெல்லாம் ஒரு ஹீரோயினாக இருந்து ஹாலிடே மூடில் ஜோ நடித்துக் கொடுத்திருக்கும் படம்தான் இந்த ஜாக்பாட்.

ஹீரோவின் படம் போலவே அதிகாலை 5.30 மணி ப்ரீமியர் காட்சியெல்லாம் தியேட்டரில் வைத்து கலக்கி விட்டார்கள்.

கமர்ஷியல் படம் என்ற ஒற்றைவரி செய்தி போதும்… ‘கதையாவது பிரிஞ்சாலாவது…’…

Read More

தொரட்டி படத்தின் விமர்சனக் கண்ணோட்டம்

by by Jul 31, 2019 0

சஸ்பென்ஸ் வைக்காமல் முதலிலேயே சொல்லிவிடுகிறேன். நாளை மறுநாள் (02-08-2019) வெளியாகவிருக்கும் ‘தொரட்டி’ படம் நன்றாக இருக்கிறது…’

நிற்க… (உட்கார்ந்தாலும் கவனிக்க…) இந்த ‘நன்றாக இருக்கிறது…’ என்ற இரண்டு வார்த்தைகளை அவரவர் புரிந்து கொள்ளும் தன்மையே வேறு. அதனால், எப்படி ‘நன்றாக இருக்கிறது’ என்று புரிய வைக்க முயல்கிறேன்.

‘மெர்சல்’ படம் நன்றாக இருக்கிறது என்பதற்கும், ‘அவள் அப்படித்தான்’ நன்றாக இருக்கிறது என்பதற்கும் வார்த்தைகள் ஒன்றுதான். ஆனால், பொருள் வெவ்வேறு. “நன்றாக இருக்கிறது…” என்று சொன்னதை விஜய் ரசிகர் ஒருவர்…

Read More

A1 படத்தின் திரை விமர்சனம்

by by Jul 26, 2019 0

சந்தானம் படத்துக்கு எதற்காகப் போகிறோமோ அதை நன்றாகவே திருப்திப்படுத்தி அனுப்புகிற கதைக்களமும், அதைத் திறம்படக் கொடுத்திருக்கும் திரைக்கதையும் படத்தின் பலம்.

வீரமிக்க ஒருவரை மணக்க விரும்பும் பிராமணப் பெண்ணான நாயகி தாரா அலிசா, சந்தானத்தை அப்படி ஒரு மோதலில் பார்க்கிறார். அப்பாவின் விரதத்துக்காக தீர்த்தம் வாங்கிவர கோவிலுக்கு வந்த சந்தானம் நெற்றியில் நாமமும் போட்டிருக்க, அவரை பிராமணர் என்று புரிந்து க்பொள்ளும் தாரா அவர்மீது காதல் கொள்கிறார்.

ஆனால், சந்தானம் பிராமணர் இல்லை என்று தெரிந்ததும் காதலை முறித்துக்…

Read More

கொளஞ்சி திரைப்பட விமர்சனம்

by by Jul 26, 2019 0

கிராமத்தில் ஒரு பகுத்தறிவுவாதி வாழ்ந்தால் அவர் இந்த சமூகத்தில் எப்படியெல்லாம் எதிர்கொள்ளப்படுவாரோ அப்படி வாழ்ந்து வருகிறார் சமுத்திரக்கனி. மனைவி, இரண்டு மகன்கள் என்று வாழ்ந்து வருபவருக்கு ஆறாவது படிக்கும் மூத்த மகனின் முரட்டுத் தனத்தால் எப்போதும் பிரச்சினை. அவர்கள் இருவருக்குமான இடைவெளியும் அதை அவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதும்தான் கதை.

ஊருக்கெல்லாம் அறிவு தரும் ஒரு வாத்தியாருக்கு முட்டாள் மகன் ஒருவன் இருந்தால் அவர் எப்படியெல்லாம் பிரச்சினைகளை எதிர்கொள்வாரோ அப்படி ஆகிறது சமுத்திரக்கனிக்கு.

தான் நேர்மையாக, உண்மையானவனாக போராடி…

Read More

கடாரம் கொண்டான் திரைப்பட விமர்சனம்

by by Jul 21, 2019 0

தமிழில் நடிப்போச்சிய நடிகர்களை வகை பிரித்தால் சிவாஜி வழியில் கமலும், கமல் வழியில் விக்ரமும் வருவார்கள். அதிலும் தன்னை வருத்திக்கொண்டு கதபாத்திரத்துக்கு நியாயம் சேர்ப்பதில் விக்ரமின் அர்ப்பணிப்பு ஹாலிவுட் நடிகர்களுக்கு இணையானது (அதுவும் கோலிவுட் சம்பளத்தில் என்பது கூடுதல் செய்தி…)

அந்த வகையில் கமல் தயாரித்து விக்ரம் நடிக்கிற படமென்றால் எதிர்பார்ப்பு எப்படி எகிறும்..? அப்படியே இந்த ‘கடாரம் கொண்டான்’ படத்தின் மீதும் எதிர்பார்ப்புச் சுமை கூடியிருக்கிறது. அதை எதிர்கொண்டு படத்தைச் சுமந்திருக்கிறார் விக்ரம்.

கதைத் திருட்டுகள் கமலா…

Read More

கொரில்லா திரைப்பட விமர்சனம்

by by Jul 14, 2019 0

சமுதாயத்தை ஏமாற்றிப் பிழைத்துக் கொண்டிருக்கும் ஒருவன், சந்தர்ப்ப வசத்தால் சமூகப் போராளியாகும் கதை. எந்த சீரியஸ் பிரச்சினையையும் நகைச்சுவையாகக் கொடுக்க முடியுமென்றோ அல்லது எந்த நகைச் சுவைக் கதைக்குள்ளும் சீரியஸ் பிரச்சினையை வைக்க முடியுமென்றோ இயக்குநர் ‘டான் சாண்டி’ முடிவெடுத்து முயற்சித்திருப்பதாகத் தோன்றுகிறது.

அந்த முயற்சியைப் புரிந்துகொண்ட ஜீவாவும் பல சீரியஸ் படங்களுக்கிடையில் இந்த நகைச்சுவைப் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டிருக்கிறார் என்பதும் புரிகிறது.

வளர்ப்புப் பிராணியாக ‘காங்’ என்ற சின்பன்ஸியை வளர்த்துக்கொண்டிருக்கும் ஜீவா, நூதன முறையில் மக்களை ஏமாற்றிப்…

Read More

கூர்கா திரைப்பட விமர்சனம்

by by Jul 13, 2019 0

யோகி பாபுவுக்கு ரசிகர்களிடம் இருக்கும் வரவேற்பை வைத்து அவரை ஹீரோவாக்கும் முயற்சியில் அமைந்த இரண்டாவது படம். அவரது பலம் காமெடி என்பதால் அதை விட்டு விலகாமலும் ரொம்ப அலட்டிக்கொள்ளாமலும் சாம் ஆண்டன் படத்தை இயக்கியிருக்கிறார்.

போலீஸாகும் கனவுடன் இருக்கும் யோகிபாபுவுக்கு அவரது சிறப்புத் தகுதி (!) களால் வேலை கிடைக்காமல் போக, அவரை தகுதித் தேர்வு செய்த காவல் அதிகாரி ரவி மரியாவிடம் “ஒருநாள் உங்களையெல்லாம் என் உதவியை நாடி வரவழைக்கிறேன்..!” என்று சபதம் இட்டுச் செல்கிறார்….

Read More

ராட்சசி திரைப்பட விமர்சனம்

by by Jul 5, 2019 0

ஜோதிகா நடிக்கும் படம் என்பதுதான் படத்தின் தலையாய பலம். ஆனால், தலைப்பைக் கேட்டதும் ஏதோ நெகடிவ் கேரக்டரில் ஜோ வந்து அடித்துத் துவைப்பார் என்றெல்லாம் கற்பனை செய்து விட வேண்டாம்.

இதுவரை நாம் திரையில் பார்த்திருக்கக் கூடிய அரசுப் பள்ளிகளின் அவல நிலைதான் படத்தின் மையப்புள்ளி. அப்படி இருக்கும் புதூர் என்ற கிராமத்தின் அரசுப்பள்ளிக்கு தலைமை ஆசிரியராக வந்து சேரும் ஜோ எப்படி அந்தப் பள்ளியைச் சீரமைக்கிறார் என்பது கதை.

அவர் செய்யும் நல்லவை எல்லாம் பொல்லாதவர்களுக்கு அவரை…

Read More

ஜீவி திரைப்பட விமர்சனம்

சமீப காலமாக சில கிரைம் த்ரில்லர் படங்கள் வருகின்றன. அவையெல்லாமே ஹீரோ அடிக்கும் ஒரு கொள்ளையை போலீஸ் பிடியிலிருந்து எப்படி தப்பித்து மீட்பது என்கிற அளவிலேயே அமைந்து அவை திருட்டுக்கும், புரட்டுக்கும் துணை போவதாகவே அமைந்திருக்கின்றன.

இந்தப்படமும் முதல் பாதியில் அப்படியே கடக்கிறது. அதனாலேயே இன்னொரு களவு கற்பிக்கும் கதையா என்று தோன்றுகிறது. ஆனால், பின்பாதியில் அப்படியே ஒரு மாற்றம்… வாழ்க்கையில் நம் செயல்கள் எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடன் இருப்பதாக ஒரு கோட்பாட்டைச் சொல்லி நம்மை ஆச்சரியத்தில்…

Read More

மோசடி திரைப்பட விமர்சனம்

by by Jun 23, 2019 0

பட வெளியீட்டுக்கு முன்பே படத்தலைப்பாலும், படத்தைப் பற்றிய விளக்கத்தாலும் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம்.

மோசடி என்ற தலைப்பில் ‘ச’வை சிறியதாகப் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியதுடன் பண மதிப்பிழப்பு அமலுக்கு வந்தபோது பெரும் பெருச்சாளிகள் எப்படி பணத்தை மாற்றினார்கள் என்று சொல்ல வந்த படமாக இருந்ததால் பெரும் ஆர்வத்தைத் தூண்டியது.

அந்த ஆர்வத்தை இயக்குநர் கே.ஜெகதீசன் நேர்செய்தாரா பார்க்கலாம்.

கதாநாயகன் விஜு, 100 கோடி ரூபாயை சேர்த்து விடும் நோக்கம் கொண்டு தன் நண்பர்களுடன் சேர்ந்து மக்களை பல வழிகளிலும்…

Read More