July 1, 2025
  • July 1, 2025
Breaking News

Currently browsing விமர்சனம்

பேரன்பும் பெருங்கோபமும் திரைப்பட விமர்சனம்

by by Jun 4, 2025 0

தலைப்புக்குக் கதை பொருந்துகிறதோ இல்லையோ படம் சொல்ல வந்த விஷயம் இதுதான்… 

சாதிய உணர்வு என்பது பிறப்பால் வருவது அல்ல வளர்ப்பால் வருவது என்பதைத்தான் இந்த படத்தின் மூலம் இயக்குநர் சிவபிரகாஷ் சொல்ல  வந்திருக்கிறார்.

அதை நீட்டி முழக்கி பிரித்துக் கட்டி 10, 15 வருடங்களுக்கு முந்தைய பாணியில் கொடுத்திருக்கிறார் அவர்.

நாயகன் விஜித் பச்சான் ஒரு அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்கிறார். அந்த மருத்துவமனையின் அவலங்கள் பற்றி அவ்வப்போது அவர் அந்த ஏரியா நிருபவரிடம் செய்திகள் சொல்ல…

Read More

THE VERDICT திரைப்பட விமர்சனம்

by by Jun 1, 2025 0

தலைப்பு தொடங்கி முழுப் படமுமே ஒரு ஆங்கிலப் பட அனுபவத்தைத் தருகிறது. போதாக்குறைக்கு முழுப் படமும் நடப்பது அமெரிக்காவில் என்று இருக்க ஒரு ஹாலிவுட் கோர்ட் டிராமா படமாகவே இதை உணர முடிகிறது.

வயதான பெண்மணி ஒருவர் இறந்த கேசில் நாயகி சுருதி ஹரிஹரன் கொலையாளியாக குற்றம் சாட்டப்படுகிறார். அவருக்காக வரலட்சுமி சரத்குமார் வாதாட, படம் முழுக்க ஒரு நீதிமன்ற வாதாடல்களிலேயே சென்று என்ன தீர்ப்பு வருகிறது என்பதைச்  சொல்கிறது கதை.

நம் தமிழ்ப் படங்களில் காட்டப்படும் இந்திய…

Read More

மனிதர்கள் திரைப்பட விமர்சனம்

by by May 30, 2025 0

நாலு பேர் நாலு விதமாகப் பேசுவார்கள் என்று பொதுவாக மனிதர்களைப் பற்றி விமர்சனம் செய்வது உண்டு. அதை மெய்ப்பிக்கும் வகையில் பின்னப்பட்ட கதை இது. 

ஒரே இரவில் ஒரு காரில் பயணிக்கும் ஐந்து பேரின் மனநிலை எவ்வாறு மாறிக் கொண்டே செல்கிறது என்பதைப் படம் பிடித்து காட்டியிருக்கிறார் இயக்குனர் இராம் இந்திரா.

ஆறு நண்பர்கள் ஓர் இரவில் ஒன்றாக சேர்ந்து மது அருந்தும் வேளையில், மோதல் ஏற்பட்டு அதில் ஒருவர் இறந்துவிட அவரை என்ன செய்வது என்று தெரியாமல்…

Read More

ஜின் தி பெட் திரைப்பட விமர்சனம்

by by May 29, 2025 0

பட ஆரம்பத்தில் உக்கிரம் பிடித்த ஆவி ஒன்றை ஒரு மந்திரவாதி அடக்கி பெட்டிக்குள் அடைக்கிறார். அப்போதே நமக்குத் தெரிகிறது, அந்தப் பெட்டி ஒரு கட்டத்தில் திறக்கப்பட்டு அதன் உள்ளே இருக்கும் ஆவி வெளியே வந்து அட்டகாசம் செய்யப் போகிறது என்று.

“ஓ…நீங்கள் அப்படி நினைத்து விட்டீர்களா..? ஆனால், இது வேறு கதை..!” என்று இயக்குனர் டி ஆர் பாலா கொஞ்சம் (டெம்) ப்ளேட்டை திருப்பிப் போடுகிறார்.

அதே பெட்டி மலேசியாவில் பழம் பொருட்கள் விற்கும் கடை ஒன்றில் இருக்க…

Read More

மையல் திரைப்பட விமர்சனம்

by by May 27, 2025 0

ஆடு திருடும் கள்வனுக்கும், மந்திரவாதம் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் காதல் வந்தால் என்ன ஆகும்..?

எல்லாக் காதலர்களுக்கும் என்ன ஆகுமோ அதுதான் ஆகும் என்கிறார்

இந்தக் கதை, திரைக்கதை, உரையாடலை எழுதி இருக்கும் எழுத்தாளர் ஜெயமோகன். 

அதை மைனா படத்தை மனதில் வைத்து இயக்கி இருக்கிறார் ஏபிஜி.ஏழுமலை.

மைனாவில் நமக்கு நன்கு அறிமுகமான சேது இந்தப் படத்தின் நாயகன் ஆகி இருக்கிறார். ஆரம்பத்தில் அவர், இரவில் ஒரு பட்டிக்குள் புகுந்து ஆட்டைத் திருடிக் கொண்டு செல்ல காவலாளிகள் அவரைத் துரத்துகிறார்கள். 

தப்பிக்க…

Read More

நரி வேட்டை திரைப்பட விமர்சனம்

by by May 25, 2025 0

தமிழைத் தொடாத மலையாளப் படங்களே இல்லை என்னும் அளவுக்கு மலையாளப் படங்களில் தமிழின் தாக்கம் நிறைந்து விட்டது. அந்த வகையில் டொவினோ தாமஸ் ஹீரோவாகி இருக்கும் இந்தப் படத்திலும் தமிழின் முக்கிய இயக்குனரும் நடிகருமான சேரன் நடித்திருக்கிறார்.

தந்தையை இழந்த டொவினோ தாமஸ் தையல் வேலை செய்யும் அம்மாவின் சொற்ப வருமானத்தை வைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்.

படித்த இளைஞராக இருந்தாலும் தன் படிப்புக்கு ஏற்ற வேலை வந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்வேன் என்கிற கொள்கையுடன் சுற்றித் திரிகிறார்….

Read More

ஏஸ் திரைப்பட விமர்சனம்

by by May 24, 2025 0

விஜய் சேதுபதியைப் பார்த்து கொஞ்ச நாள் ஆகிறதே என்று நினைப்பவர்களுக்கு என்றே பளிச்சென்று கம்பேக் தந்திருக்கிறார் அவர்.

அவரை மட்டுமே மனதில் வைத்து இயக்குனர் ஆறுமுககுமார் எழுதிய கதை போல் இருக்கிறது. 

விஜய் சேதுபதியின் கண்களே பல கதைகள் பேசும். அதில் எது நிஜம், எது பொய் என்றெல்லாம நம்மால் கண்டுபிடிக்கவே முடியாது அதை உள்ளடக்கி கமர்சியல் வேல்யூவுடன் கலந்த கதை இது. 

சிறையில் இருந்து வெளியே வரும் விஜய் சேதுபதி பிழைப்புக்காக மலேசியா வருகிறார். வந்த இடத்தில் (தொழிலதிபர்..?)…

Read More

ஸ்கூல் திரைப்பட விமர்சனம்

by by May 24, 2025 0

ஏற்கனவே சினிமாவை ஆவிகள் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்க, அதில் ஒரு வித்தியாசமாக இதில் ஆவிகளைக் கையில் வைத்துக்கொண்டு ஆட்டுவிக்கிறார் ஒரு மந்திரவாதி. 

அதுவும் இரண்டு மாணவ, மாணவியின் ஆவியை வைத்துக்கொண்டு அவர்கள் படித்த பள்ளியின் மேலேயே ஏவி விடுகிறார். அது எதற்காக… அந்த ஆபத்திலிருந்து பள்ளி மீண்டதா என்பதெல்லாம் மீதிக் கதை.

பாக்ஸ் பகவதி பெருமாள் முதல்வராக இருக்கும் தனியார் பள்ளி, தகுதி அடிப்படையில் மாநிலத்திலேயே இரண்டாவது ரேங்க் பெறுகிறது. அதை முதலிடத்திற்கு கொண்டு வரச் சொல்லி பள்ளியின்…

Read More

ஆக கடவன திரைப்பட விமர்சனம்

by by May 23, 2025 0

சிறிய லைனை வைத்துக்கொண்டு அதை வலிய திரைக்கதையின் மூலம் சுவாரஸ்யப் படுத்த முயன்றிருக்கிறார் இயக்குநர் தர்மா.

நம்மைப் படைத்த இந்தப் பிரபஞ்சம் நம்மை கவனித்துக் கொண்டே இருக்கிறது – நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும்தான் நம் வாழ்க்கைக்கான விளைவுகளை ஏற்படுத்துக்கிறது என்பதுதான் அந்த லைன்.

மருந்துக் கடையில் வேலை பார்க்கும் ஆதிரன் சுரேஷ், வின்சென்ட், ராகுல் மூவருக்கும் சொந்தமாக ஒரு மெடிக்கல் ஷாப் வைக்க வேண்டும் என்கிற கனவு வர, அதற்காக சேர்த்த பணம் களவு போகிறது.

கடன் வாங்கிய…

Read More

மாமன் திரைப்பட விமர்சனம்

by by May 17, 2025 0

தலைப்பே பாதி கதையைச் சொல்லிவிட்டது. அக்கா சுவாசிகா மீது உயிரையே வைத்திருக்கிறார் தம்பியாக வரும் நாயகன் சூரி. 

திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆகியும் சுவாசிகாவுக்கு குழந்தை பிறக்காமல் இருப்பதால் அவர் புகுந்த வீட்டில் பல இன்னல்களுக்கு ஆளாகி, ஒரு வழியாகக் கருவுறுகிறார். 

அவருக்கு ஆண் குழந்தை பிறக்க… தாய் மாமன் ஆகும் சூரி அந்த குழந்தையுடன் பிரிக்க இயலாத பாசப்பிணைப்பில் கட்டுண்டு கிடக்க அதுவே ஒரு கட்டத்தில் பிரச்சனை ஆகிறது. 

இந்நிலையில் சுவாசிகாவுக்கு மருத்துவம் பார்த்த டாக்டர் ஐஸ்வர்யா…

Read More