July 1, 2025
  • July 1, 2025
Breaking News

Currently browsing செய்திகள்

பாடகர் ஜேசுதாஸின் சகோதரர் மர்ம மரணம்

by by Feb 6, 2020 0

தமிழ் தொடங்கி மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 50,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருப்பவர் பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ்.

இவருடைய தம்பி கே.ஜே.ஜஸ்டின்(60). இவர் கடந்த இரண்டு தினங்களாக காணவில்லை. இது குறித்து அவரது குடும்பத்தினர் கேரளாவில் உள்ள திரிக்ககர காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில் ஜஸ்டின் வயதையொத்த ஒருவரது சடலம் ஏரியில் மிதந்துக் கொண்டிருப்பதாக திரிக்ககர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து…

Read More

கடவுளாக நடிக்க விஜய் சேதுபதி காசு வாங்கினாரா வீடியோ இணைப்பு

by by Feb 6, 2020 0

அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஓ மை கடவுளே’. அஷ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, கவுதம் மேனன் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்கள். இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ம் தேதி வெளியாக இருக்கிறது.

இப்படம் குறித்து அசோக் செல்வன் பேசும் போது , ‘ஓ மை கடவுளே’ என் வாழ்வில் முக்கியமான படம். ரொம்ப வருஷமாக அஷ்வத்தை எனக்கு தெரியும். இரண்டுபேரும் சேர்ந்து…

Read More

வீட்டுக் காவலில் விஜய்? அன்பு செழியன் வசம் 65 கோடி பறிமுதல்…

by by Feb 6, 2020 0

நேற்று நெய்வேலியில் வைத்து விஜய்யிடம் 5 மணிநேர விசாரணை, பின்னர் வருமான வரித்துறை அதிகாரிகளுடன் காரில் சென்று தனி விடுதியில் வைத்து இரவு 9 மணிவரை விசாரணை பிறகு பனையூரிலுள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று வீட்டில் வந்து விசாரணை என்று வருமான வரித்துறை கிடுக்கிப்பிடி போட்டு விசாரித்து வருகிறது.

இதெல்லாம் ‘பிகில்’ தொடர்பான வருமானம் குறித்த விசாரணைகள்தான் எனத் தெரிகிறது. விஜய்யிடம் விசாரித்த அதே நேரத்தில் பிகில் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் நிறுவனங்களிலும் அதே…

Read More

ஷூட்டிங்கில் இருந்து விஜய் யை அழைத்து சென்ற அதிகாரிகள் – நெய்வேலியில் பரபரப்பு

by by Feb 5, 2020 0

இன்று பிற்பகல் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது விஜய் நெய்வேலியில் ஷூட்டிங்கில் இருந்தார்.

எனவே சென்னையிலிருந்து நெய்வேலி என்.எல்.சி சுரங்க பகுதிக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் ‘நடிகர் விஜய்யை பார்க்க வேண்டும் என்றனராம்’. 

ஆனால் நுழைவாயிலிலிருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் அவர்களை சுரங்க பகுதிக்குள் அனுமதிக்கவில்லை. எனவே என்.எல்.சி உயர் அதிகாரிகளிடம் பேசி அனுமதி பெற்று படப்பிடிப்பு பகுதிக்கு சென்றனர்.

அங்கு விஜய்யிடம் விசாரணை மேற்கொண்டவர்கள் தங்களுடன் சென்னைக்கு வருமாறு நடிகர்…

Read More

தஞ்சாவூர் காரன் வரவேற்பதில் தவறில்லையே..?

by by Feb 5, 2020 0

தமிழரின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றும் மிகப்பெரிய அடையாளம் தஞ்சை பெருவுடையார் கோவில் என்று அழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம்.

உலகமே வியக்கும் வகையில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயம் ஆயிரத்தி பத்து ஆண்டுகள் தாண்டியும் கம்பீரமாக தமிழரின் பெருமையை பேசிக்கொண்டிருக்கிறது.

இந்த கோவிலின் கும்பாபிஷேகம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று விமரிசையாக நடைபெறுகிறது.

தஞ்சை குதூகலத்தில் மிதந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பல வரவேற்புகள் கவனத்தைக் கவர்ந்தது. அதில் களவாணி வில்லன் துரை சுதாகரின் ரசிகர்களும் சேர்ந்து…

Read More

யோகி பாபு திடீர் திருமணம் மஞ்சுபார்கவி யை மணந்தார்

by by Feb 5, 2020 0

நகைச்சுவை நடிகர் யோகிபாபு சொந்தமாக வீடு கட்டிவிட்டார். திருமணம் ஒன்றுதான் பாக்கி என்கிற நிலையில் சமீப காலமாகவே அவரது திருமணம் பற்றிய செய்திகளும், இவர்தான் மணப்பெண் என்ற செய்திகளும் உலா வந்து கொண்டே இருந்தது.

இந்நிலையில் யாரும் எதிர் பார்க்காத வண்ணம் இன்று காலை யோகிபாபுவின் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.

நகைச்சுவை நடிகர் யோகிபாபுவிற்கும் மணமகள் மஞ்சு பார்கவிக்கும் இன்று காலை (05.02.2020) யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது .

திருமணம் பற்றிய மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

இந்நிலையில்…

Read More

இணையத்தில் வைரலாகும் சமந்தா ஸ்ருதிஹாசன் குஷ்பு ரம்யா கிருஷ்ணன் ஓவிய புகைப்பட கேலரி

by by Feb 4, 2020 0

இந்தியாவின பிரபல ஓவியரான ராஜா ரவி வர்மா வரைந்த சில ஓவியங்களை, அப்படியே நடிகைகளை வைத்து புகைப்படங்களாக போட்டோ ஷுட் ஒன்றை புகழ்பெற்ற புகைப்படக் கலைஞரான ஜி. வெங்கட்ராம் எடுத்துள்ளார்.

இவை அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருவதுடன் மக்களின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

பிரபல புகைப்பட கலைஞர் ஜி.வெங்கட்ராம், லிமிடெட் எடிசன் 2020 நாட்காட்டிக்காக வித்தியாசமான புகைப்படங்களை எடுக்க விரும்பி ரவி வர்மாஓவியங்களில் உள்ள முகத் தோற்றத்திற்குப் பொருத்தமான நடிகைகளை தேர்ந்தெடுத்தார் .

சமந்தா, ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன், குஷ்பு,…

Read More

துணை நடிகைகளிடம் மன்னிப்பு கேட்ட பிரபல சீரியல் இயக்குனர்

by by Feb 4, 2020 0

சென்னை வானகரத்தில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் ஒன்றின் படப்பிடிப்பு நடந்துள்ளது.

அப்போது, சரியாக நடிக்கவில்லை எனக்கூறி  அடை மொழியுடன் கூடிய இயக்குனர் பாண்டியன்,     நீர் ஆவியாகும் அளவுக்கு துணை நடிகைகளை ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த துணை நடிகைகள் திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதனையடுத்து போலீசார், நீராவி பண்டியனை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது தான் பேசியதற்கு துணை நடிகைகளிடம் மன்னிப்பு கேட்ட பிறகு ‘ அடைமொழி…

Read More

முருகப்பெருமானுக்கும் காக்டெயிலுக்கும் இதுதான் சம்பந்தம் சர்ச்சை இயக்குனர் முருகன்

by by Feb 4, 2020 0

PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் பிரபல ஒளிப்பதிவாளர் PG முத்தையா தயாரித்து வரும் படம் ‘காக்டெய்ல்’. இந்த படத்தை அறிமுக இயக்குநர் முருகன் இயக்கியுள்ளார்.

 ஹீரோவாக யோகிபாபு, மற்றும் யோகிபாபுவின் நண்பர்களாக ரமேஷ், மிதுன், மற்றும் விஜய் டிவி கலக்கப்போவது யாரு புகழ் பாலா, குரேஷி, ஆகியோருடன் சாயாஜி ஷிண்டே, மனோபாலா, மைம் கோபி, லொள்ளுசபா சாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த “காக்டெய்ல்” என்கிற பறவையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறது. இந்திய சினிமாவில் முதன்முறையாக…

Read More

இந்தியில் தடம் பதிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்

by by Feb 3, 2020 0

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரித்து, நடிகர் கார்த்தி நடித்த படம் ‘கைதி’.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தீபாவளிக்கு வெளியாகி உலகமெங்கும் மாபெரும் வெற்றி பெற்றது.

அதுமட்டுமில்லாமல், கார்த்தி இதுவரை நடித்த படங்களிலேயே இந்தப் படம்தான் முதன் முறையாக 100 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஹிந்தியிலும் இப்படத்தை ரீமேக் செய்கிறார்கள். இதன் மூலம் இந்தியில் முதன் முதலாக கால் பதிக்கிறது ட்ரீம் வாரியர்…

Read More