April 16, 2024
  • April 16, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • டாக்டர் க்கு பெரிய விலை கொடுத்த சன் டிவி ஆவலைத் தூண்டும் அயலான்
February 18, 2020

டாக்டர் க்கு பெரிய விலை கொடுத்த சன் டிவி ஆவலைத் தூண்டும் அயலான்

By 0 556 Views
சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு, அவருடைய  பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் நேற்று இன்ப அதிர்ச்சிகளாக காலை ‘டாக்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், மாலை ‘அயலான்’ படத்தில் ஃபர்ஸ்ட் லுக்கும்  வெளியடப்பட்டது.
 
இதில் அடுத்த வெளியீடாக பல்வேறு வகையில் எதிர்பார்ப்பை எகிறச் செய்திருக்கிறது ‘டாக்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக். சிவகார்த்திகேயன், அனிருத் ஹிட் கூட்டணியில் இயக்குநர் நெல்சனும்  இணைந்துள்ளது ரசிகர்களை குதூகலம் கொள்ளச் செய்திருக்கிறது.
 
ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களுக்கு சரியான விருந்தாக வெளியானதோடு, படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டீவி பெரும் விலைக்கு கைப்பற்றியுள்ள செய்தியும் தற்போது  வெளியாகியுள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
 
2020 ஆம்  வருடத்தின்  மத்தியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள, இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு, கோவாவில் 15 நாட்கள் திட்டமிடப்பட்டு, தற்போது நடைபெற்று வருகிறது. படத்தின் முக்கிய காட்சிகள் கோவாவில் நடைபெறுவதாக கதை அமைக்கப்பட்டுள்ளது.
 

சிவகார்த்திகேயனின் வித்தியாசமான லுக்குடன், படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்து பெரும் மர்மம் நிலவும் நிலையில், ஃபர்ஸ்ட் லுக்கில் சிவகார்த்திகேயனை சுற்றி இருக்கும் ‘மெடிகல் சர்ஜிகல் கத்திகள்’ படத்தின் கதை என்னாவாக இருக்கும் என்கிற  எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகிறது.

இப்படத்தில் தென்னிந்திய சினிமாக்களில் சமீபத்திய பரபரப்பான  நடிகை பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க, காமெடியில் கலக்கி வரும் யோகிபாபு, சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கிறார். ஸ்டைலீஷ்  நாயகன்  வினய் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

KJR Studios உடன் இணைந்து சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரிக்கிறார்.

 
மேற்படி காரணங்களால் மாலை வெளியான சிவகார்த்திகேயனின் அயலான் முதல் பார்வையும் ரசிகர்களைத் திக்குமுக்காட வைத்து விட்டது. அதிலும் அது குழந்திகளையும் கவரும் வண்ணம் அமைந்ததில் படத்தை வாங்கப் போட்டியே நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கீழே ஆவலை அதிகரிக்கச் செய்யும் அயலான் ஃபர்ஸ்ட் லுக்கைப் பாருங்கள்…
SivaKarthikeyas Ayalaan Makes Excitement

SivaKarthikeyas Ayalaan Makes Excitement