March 29, 2024
  • March 29, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ரிக்‌ஷாக்காரன் படத்துக்கு இல்லாத பெருமை பாட்ஷா கன்னிமாடம் படங்களுக்கு உண்டு
February 17, 2020

ரிக்‌ஷாக்காரன் படத்துக்கு இல்லாத பெருமை பாட்ஷா கன்னிமாடம் படங்களுக்கு உண்டு

By 0 489 Views
Bose Venkat

Bose Venkat

தொலைக்காட்சி தொடர்களில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து, தனக்கென ஒரு தனித்த இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் போஸ் வெங்கட்.

 
தற்போது முதல் முறையாக வெள்ளித்திரையில் இயக்குநராகிறார். புதுமுகங்கள் நடிப்பில் ‘கன்னி மாடம்’ எனும் படத்தை இயக்கியுள்ளார். சில நாட்கள் முன் வெளியான இப்படத்தின் டிரெய்லர் அனைத்து தரப்பிலும் பாராட்டு பெற்றது.
 
படத்தின் வெளியீட்டு வேலைகள் நடந்து வரும் சூழலில் கோலகலமாக நடைபெற்ற இசை விழாவில் கலந்து கொண்ட ஒவ்வொரு ஆளுமையையும் அவர்களின் அட்டகாச அறிமுகத்துடன் படத்தில் அவர்களது பங்கு குறித்தும் கூறியது சுவாரஸ்யமாக இருந்தது.
 
இந்நிகழ்வை தொகுத்து வழங்கியதும் இயக்குநர் ‘போஸ் வெங்கட்’தான்.
 

Rooby Films தயாரிப்பாளர் ஹஷீர் பேசியதிலிருந்து…

“போஸ் வெங்கட் முதல் முறையாக கதை கூறியபோதே  மிக நல்ல படமாக இப்படம் வரும் எனத் தோன்றியது. உடனடியாக படம் தயாரிக்க ஒப்புக்கொண்டேன். நல்ல படங்களை தருவது என்பதே எங்கள் நிறுவனத்தின் குறிக்கோள். ‘கன்னி மாடம்’ தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படைப்பாக இருக்கும். இப்படத்தை பெரிய அளவில் ரிலீஸ் செய்யும் செண்பகமூர்த்தி அவர்களுக்கு நன்றி..!”

நடிகர் ரோபோ சங்கர் பேசியதிலிருந்து…

“முதல் முறையாக பாடகராக இங்கு மேடையேறியுள்ளேன். என்னை பாடகராக அறிமுகப்படுத்திய இசையமைப்பாளர் ஹரி சாய்க்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மேலும் இப்படத்தில் வாய்ப்பு தந்ததற்கு அண்ணன் போஸ் வெங்கட்டுக்கு நன்றி. அவர் என் வாழ்வில் ஒவ்வொரு படியிலும் பேருதவியாக நின்றிருக்கிறார்.பல வருடங்கள் முன்பாகவே இந்தக்கதையை என்னிடம் கூறியுள்ளார். ஒரு அற்புதமான படைப்பாக இப்படம் இருக்கும்.

 

தான் முதன் முதலாக பணிபுரிந்த ஆட்டோ டிரைவர் தொழிலை மறக்காமல் இந்தப்படத்தில் அவர்களுக்கு மரியாதை செய்துள்ளார். அவர் இன்னும் பல வெற்றிபடங்களை இயக்கி பெரிய இயக்குநராக வரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்..!”

இயக்குநர் விக்ரமன் பேசியது…

“சமீப காலங்களில் சினிமாவில் சிறு பட்ஜெட்டில் தயாராகும் தரமான படங்களே, சினிமாவின் அனைத்து தரப்பினருக்கும் லாபகரமானதாக அமைகிறது. பெரிய முதலீட்டு படங்கள் வெற்றியடைவது அனைவரையும் இக்கட்டில் வைக்கும் சவாலானாதாக இருக்கிறது. கன்னிமாடம் தரத்தில் உயர்ந்து விளங்குகிற படைப்பாக இருக்கிறது..!”  

 

Samuthirakani Vijay Sethupathi

Samuthirakani Vijay Sethupathi

நடிகர் சமுத்திரகனி பேசியது…

“நடிகர் போஸ் வெங்கட்  சினிமா மீது பெருங்காதல் கொண்டவர். நாங்கள் எப்போது சந்தித்தாலும் அவர் சினிமா பற்றியே தீவிரமாக பேசிக்கொண்டிருப்பார். அவரின் இந்த கன்னி முயற்சி கண்டிப்பாக தரமானதாகவே இருக்கும்..!”

நடிகர் பரத் பேசியது….

“நானும் போஸ் வெங்கட் அவர்களும் சகோதரர்கள் போலவே பழகி வருகிறோம். என் மீது எப்போதும் அன்புடன் இருப்பார். சிறு பட்ஜெட் படங்களை பொறுத்தவரை அதில் வேலை செய்யும் அனைவரும் படத்தின் மீது காதலுடன், படத்தில் தங்கள் முழுத்திறமையை வெளிப்படுத்துவார்கள். ‘கன்னிமாடம்’ தரமான படைப்பாக வந்திருக்கிறது..!”

திண்டுக்கல் லியோனி பேசியது…

“தமிழ் சினிமா வெகு அரிதாகவே ஆட்டோ, ரிக்‌ஷா டிரைவர்கள் பற்றி படம் எடுத்துள்ளது. கடந்த காலத்தில் எம் ஜி ஆர், சிவாஜி இருவரும் ரிக்‌ஷா ஓட்டுநராக நடித்துள்ளனர் ரஜினி ஆட்டோ டிரைவராக  நடித்துள்ளார். போஸ் வெங்கட் ஆட்டோ டிரைவர்கள்  மீது உள்ள அன்பில் அவர்களைப் பற்றி அழகாக படம் எடுத்துள்ளார்.

 
ரிக்‌ஷாக்காரன் படத்தில் ரிக்‌ஷாவைப் பற்றியோ, ரிக்‌ஷாக்காரனைப் பற்றியோ பாடல் இருக்காது. ஆனால், பாட்ஷா படத்தில் ஆட்டோக்காரர்களைப் பற்ரிய பாடல் இருக்கும். அதற்குப் பின் ஆட்டோவைப் பற்றிய பாடல் இந்தப்படத்தில்தான் இருக்கிறது. நல்ல கருத்துக்கள் கொண்ட தரமான படைப்பாக படம் இருக்கிறது..!”
 

நாயகன் ஶ்ரீராம் கார்த்திக் கூறியதாவது …

“நானும் போஸ்வெங்கட் சாரும் சில காலம் முன் ஒரு படப்பிடிப்பில் இருந்தபோது என்னை ஹீரோவாக வைத்து படம் எடுப்பதாக சொன்னார். சொன்னது போலவே இப்படத்தில் எனக்கு நாயகன் வாய்ப்பு தந்தார். எனது நெடுநாள் கனவு நனவாகியிருக்கிறது. ‘கன்னி மாடம்’ உருவாக உழைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி..1”

நடிகை காயத்திரி பேசியது…

“போஸ் வெங்கட் அவர்களுக்கும் ஹஷீர் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன். எனக்கு ஒரு அற்புதமான கதாபாத்திரத்தை தந்துள்ளார்கள். படம் நன்றாக வந்துள்ளது. படத்திற்கு எல்லோரும் ஆதரவு தாருங்கள்..!”