
அம்பானிக்கு ஒரு இந்தியா விவசாயிக்கு ஒரு இந்தியா படைக்கும் மோடி – ராகுல் காந்தி

கஜா நிவாரண நிதிக்கு 1 லட்சம் வழங்கிய கேரள கவர்னர்
தமிழகத்தில் கடந்த வாரம் தாக்கிய கஜா புயல் கரையைக் கடந்தும், புயல் தக்கிய நாகை, திருவாரூர் உள்ளிட்ட கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இன்னும் இயல்பு நிலை மீளவில்லை. அங்கெல்லாம் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன..
கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமர் மோடியிடம் நேரில் தெரிவித்து கஜா புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழுவினர் பார்வையிட்டது ஒருபுறமிருக்க, கஜா புயல் நிவாரணமாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு…
Read More
தேவர் மகன் 2 விவகாரத்தில் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு கருணாஸ் அறிக்கை
புதியதமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி, வெளியிட்ட அறிக்கையில் கமலஹாசன் தேவர் மகன்2 படம் எடுக்கப்போவதாகவும், அப்படி எடுத்தால் அப்படம் முடங்கும் எனவும் தெரிவித்திருந்ததார்.
இது குறித்து கருணாஸ் வெளியிட்ட அறிக்கை…
“தமிழகத்தில் யார் என்ன படம் எடுக்கணும், என்ன பெயர் வைக்கணும் என்பதை கதாநாயகனும், தயாரிப்பாளரும் முடிவு செய்வார்கள் தவிர நீங்கள் இல்லை.
தேவர் மகன் படத்தால் தென் தமிழகத்தில் பெரிய கலவரம் ஏற்பட்டதாக கூறியிருந்தீர்களே…ஏதேனும் இரு சமூகத்திடையே கலவரம் வரும் மாதிரி எந்த ஒரு காட்சியாவது அப்படத்தில் இருக்கிறதா? தேவர்…
Read More
சர்கார் பற்றி தமிழிசை தாக்கு – விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி
இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பல கேள்விகளுக்குப் பதில் அளித்தபோது சர்கார் பற்றிய கேள்வி ஒன்று இடம் பெற்றது.
அதற்கு பதிலளித்த தமிழிசை,
“யாருடைய கருவையோ அவர்கள் எடுத்துவைத்துக்கொண்டு ‘கரு மற்றவருடையது, உடல் என்னுடையது’ எனக் கூறுகின்றனர்.
ஆக, அவர்கள் துறையிலேயே நேர்மையைக் கடைப்பிடிக்க முடியாதவர்கள், அரசியலுக்கு வந்து நேர்மையான ஆட்சியைக் கொண்டுவர முடியும் எனக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
திரைப்படத்திலேயே சர்காரை சரியாக நிர்வகிக்க முடியாதவர்கள் மக்களுக்காக சிறந்த சர்காரை உருவாக்க முடியும் எனப் பேசுவதெல்லாம் ஒரு…
Read More
கட்சி ஆரம்பிக்கும் வேலைகள் 90 சதவிகிதம் முடிந்தது – ரஜினி
‘சன் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் ரஜினி நடிக்கும் ‘பேட்ட’ படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருவது தெரிந்த விஷயம். இதன் படப்பிடிப்பு வாரணாசியில் நடந்து வந்தது. நேற்றுடன் படப்பிடிப்பு முடிந்த விஷய்த்தை ட்விட்டரில் தெரிவித்திருந்தார் ரஜினி.
பின்னர் வாரணாசியில் இருந்து சென்னை திரும்பியவர் நிருபர்களைச் சந்தித்தார்.
“டிசம்பர் 12-ம்தேதி உங்கள் பிறந்தநாளன்று புதுக்கட்சி அறிவிப்பு வருமா..?” என்ற கேள்விக்கு பதிலளித்த ரஜினி, “கட்சி தொடங்கும் வேலைகள் 90 சதவிகிதம் முடிந்து விட்டன. ஆனால், என் பிறந்த நாளன்று கட்சியை அற்விக்கும்…
Read More
நான் முப்பது வருடங்களுக்கு முன் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும் – கமல்
வேல்ஸ் கல்விக்குழுமத்தின் நிறுவனர், வேந்தர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் அவர்களின் பிறந்த தினமான அக்டோபர் 7ஆம் தேதியை ஆண்டுதோறும் வேல்ஸ் குடும்ப விழாவாகk கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆண்டின் வேல்ஸ் குடும்ப விழா சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வேல்ஸ் இண்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்றது.
விழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். இவ்விழாவில் வேல்ஸ் கல்விக்குழுமத்தில் சிறப்பாக பணியாற்றி, அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவர்களுக்கு விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கி…
Read More
பெட்ரோல் டீசல் விலை ரூ.2.50 குறைப்பு – பாஜக ஆளும் மாநிலங்களில் ரூ.5 குறைப்பு
வரலாறு காணாத வகையில் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வந்த நிலையில், அமைச்சர்கள் அருண் ஜெட்லி, தர்மேந்திர பிரதான் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தியதை அடுத்து அருண் ஜெட்லி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அந்த சந்திப்பில் பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு விதிக்கும் கலால் வரி ரூ.1.50 குறைக்கப்படும் எனவும், எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் பங்குக்கு ரூ.1 குறைக்கும் எனவும் அறிவித்தார். ஆக மொத்தம் லிட்டருக்கு ரூ.2.50 குறைக்கப்பட்ட நிலையில், மாநில…
Read More
1000 வழக்குகள் போட்டாலும் எதிர்கொள்வேன் – ஜாமீனில் வெளிவந்த கருணாஸ்
நடிகரும், சட்ட மன்ற உறுப்பினருமான கருணாஸ் நுங்கம்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதல் அமைச்சர், துணை கமிஷனர் அரவிந்தன் ஆகியோரை மிரட்டும் வகையிலும் அவதூறு பரப்பும் வகையிலும் பேசிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு கருணாஸ் மனு தாக்கல் செய்ய மனுவை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கருணாசுக்கு ஜாமீன் வழங்கியது.
இதற்கிடையே கடந்த ஏப்ரல் 10ம்…
Read More
தினகரனுக்கு வேலை செய்ததால்தான் எனக்கு இவ்வளவு பிரச்சினைகள் – விஜயபாஸ்கர்
“இலங்கை இறுதி கட்டப் போரில் அப்பாவி தமிழர்களைக் கொன்று குவிக்க அப்போது காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியாயிருந்த மத்திய அரசு உதவி செய்ததாக இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவே தெரிவித்துள்ளார்.
எனவே ஐ.நா.சபை தி.மு.க- காங்கிரஸ் கட்சிகளை போர் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும்…!” என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசியுள்ளார். புதுக்கோட்டையில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி கட்சியினரை போர் குற்றவாளிகளாக அறிவிக்க வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசினார்.
மேலும் அவர் பேசியதிலிருந்து…
“தி.மு.க. தலைவர்…
Read More
ரஜினியின் அரசியல் கட்சி அறிவிப்பு அடுத்த மாத ஆலோசனைக் கூட்டத்தில்..?
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக அறிவிப்பை வெளியிட்டதையடுத்து ரஜினி ரசிகர் மன்றங்கள் ரஜினி மக்கள் மன்றமாக மாற்றம் செய்யப்பட்டன.
அதன் பிறகு மாவட்டம் தோறும் ரஜினி மக்கள் மன்றத்துக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். இளைஞர் அணி, மகளிர் அணி உள்ளிட்ட பல்வேறு அணி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.
ஜூலை மாதம் மாவட்டந்தோறும் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கையும், உடனுக்குடன் அடியாள அட்டை வழங்கும்…
Read More