June 20, 2025
  • June 20, 2025
Breaking News
November 5, 2018

சர்கார் பற்றி தமிழிசை தாக்கு – விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி

By 0 1175 Views

இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பல கேள்விகளுக்குப் பதில் அளித்தபோது சர்கார் பற்றிய கேள்வி ஒன்று இடம் பெற்றது.

அதற்கு பதிலளித்த தமிழிசை,

“யாருடைய கருவையோ அவர்கள் எடுத்துவைத்துக்கொண்டு ‘கரு மற்றவருடையது, உடல் என்னுடையது’ எனக் கூறுகின்றனர்.

ஆக, அவர்கள் துறையிலேயே நேர்மையைக் கடைப்பிடிக்க முடியாதவர்கள், அரசியலுக்கு வந்து நேர்மையான ஆட்சியைக் கொண்டுவர முடியும் எனக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

திரைப்படத்திலேயே சர்காரை சரியாக நிர்வகிக்க முடியாதவர்கள் மக்களுக்காக சிறந்த சர்காரை உருவாக்க முடியும் எனப் பேசுவதெல்லாம் ஒரு மாயை மட்டுமே. இதை, பாக்யராஜ் போன்றவர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.

கள்ளக் கதையை வைத்து கள்ள ஓட்டு பற்றிய படம் எடுக்கிறார்கள்..!” என்றார்.

இந்தப்பேச்சால் விஜய் ரசிகர்கள் கொதிப்படைந்தாலும் கூட இன்னொரு பக்கம், விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தை பாஜகவின் எச்.ராஜா தாக்கிப் பேச, அந்தப்படம் நன்றாக ஓடி வசூலைக் குவித்தது போல், இந்தப்படமும் தமிழிசையின் தாக்குதலால் பரபரப்பாகி வசூலைக் குவிக்கும் என்று அவர்கள் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.