July 1, 2025
  • July 1, 2025
Breaking News

Currently browsing அரசியல்

சர்வதேச யோகா தினத்தில் 51 தண்டால் எடுத்து அசத்திய ஆளுநர் ஆர். என். ரவி

by by Jun 21, 2025 0

மதுரை வேலம்மாள் சர்வதேச பள்ளி மைதானத்தில் தமிழக ஆளுநர் ஆா.என். ரவி கலந்து கொண்ட 11 வது சர்வதேச யோக தினத்தை முன்னிட்டு வேலம்மாள் கல்வி குழும நிறுவனத்தின் சார்பில் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் மெகா யோக சாதனை நிகழ்வு நடைபெற்றது.

வேலம்மாள் கல்வி குழுமம் சார்பாக மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இருந்து 10 ஆயித்து 200 பேர் கலந்து கொண்டது மதுரையின் முதல் சாதனை.

காலை 8 மணிக்கு…

Read More

இரட்டை வேடம் போடும் பாகிஸ்தான்..! – மத்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி குற்றச்சாட்டு

by by May 9, 2025 0

இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டு உள்ள நிலையில் மத்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி, ராணுவ கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் 3வது நாளாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

மத்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது: 

பாகிஸ்தானின் அத்துமீறல் இந்திய நகரங்கள் மற்றும் மக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்ததுடன், ராணுவ தளங்களையும் குறி வைத்தது. இதற்கு இந்தியப்படைகள் கடுமையான பதிலடி கொடுத்தன. இந்த தாக்குதலை பாகிஸ்தான் மறுத்துள்ளது. அவர்களின் இரட்டை…

Read More

1000 வது நாளை எட்டிய பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்புப் போராட்டம்

by by Apr 20, 2025 0

சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அங்கு விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் நடந்து வரும் நிலையில் இப்போராட்டம் இன்றுடன் 1,000-வது நாளை எட்டியுள்ளது.

இதனையொட்டி நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூர், நெல்வாய், நாகப்பட்டு, இடையர்பாக்கம், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 5,000-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம்…

Read More

குமரி அனந்தன் காலமானார்..!

by by Apr 9, 2025 0

குமரி அனந்தன், தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியும், தமிழ் இலக்கியத்தில் புலமை பெற்றவரும், சிறந்த பேச்சாளருமான ஒரு பன்முக ஆளுமை. அவர் 1933 ஆம் ஆண்டு மார்ச் 19 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தார். சுதந்திரப் போராட்ட வீரரான அரிகிருச்சுணன் மற்றும் தங்கம்மாள் தம்பதியரின் மகனாகப் பிறந்த இவரது இயற்பெயர் அனந்தகிருட்டிணன். பின்னாளில் அவர் “குமரி அனந்தன்” என்று அழைக்கப்பட்டார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராகவும், இந்திய மக்களவை மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர். பெருந்தலைவர்…

Read More

முதல்வர் வெளியிட்ட ‘திருக்குறள்’ திரைப்படத்தின் முதல் பாடல்..!

by by Jan 18, 2025 0

‘காமராஜ்’, ‘WELCOME BACK GANDHI’ திரைப்படங்களைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தமிழரின் பெருமைமிகு அடையாளம் திருக்குறள்–ஐத் திரைப்படமாகத் தயாரித்துள்ளது. இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். திரைப்படம் விரைவில் வெளியாகிறது.

இளையராஜா எழுதி இசையமைத்துள்ள ‘முல்லை வாசம்’ பாடலை முதல்வர் வெளியிட்டார்கள். இந்தப் பாடலின் ராகத்தில் இதுவரை இசைஞானி எந்தப்பாடலும் இயற்றவில்லை எனத் தெரிவித்தார்.

வெளியீட்டுவிழா நிகழ்வில் இயக்குனர் A.J.பாலகிருஷ்ணன், முதன்மைக் கொடையாளர் T.P.இராஜேந்திரன், VIT வேந்தர், தலைவர் தமிழியக்கம், டாக்டர் கோ.விசுவநாதன், வள்ளுவராக நடித்துள்ள…

Read More

வைரமுத்து படைப்புலகம் பன்னாட்டுக் கருத்தரங்கம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

by by Nov 29, 2024 0

*கவிப்பேரரசு வைரமுத்து படைப்புலகம் பன்னாட்டுக் கருத்தரங்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு*

கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைக்கு வயது 52. அவரது திரைப்பாட்டுக்கு வயது 44. இதுவரை 39 நூல்கள் எழுதியிருக்கிறார். சாகித்ய அகாடமி விருதுபெற்ற இவரது கள்ளிக்காட்டு இதிகாசம் 10 இந்திய மொழிகளில் பெயர்க்கப்பட்டு வெளிவந்திருக்கிறது; மேலும் 12 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.

இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்காக 7 ஜனாதிபதிகளிடம் விருது பெற்றிருக்கிறார். இவரது படைப்புகளை ஆராய்ச்சி செய்து இதுவரை…

Read More

கஸ்தூரி முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு நவ.14 க்கு ஒத்திவைப்பு

by by Nov 13, 2024 0

சென்னையில் பிராமணர்கள் அமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது மதுரை திருநகர் போலீஸார் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி கஸ்தூரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாஸ்கரன் வாதிடுகையில், “மனுதாரர் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர்…

Read More

5 பேர் உயிரிழந்த விவகாரத்தை கூட அரசியலாக்கக்கூடாதா? – இபிஎஸ்

by by Oct 7, 2024 0

சென்னை மெரினாவில் நேற்று நடந்த விமான சாகசத்தை காண லட்சக்கணக்கானோர் திரண்டனர். கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பலியாகினர். இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

விமான சாகசத்தை காண வருவோருக்கு அடிப்படை பாதுகாப்பு வசதிகள் செய்யப்படாததால் 5 உயிர்கள் பலியாகி உள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கியதில் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.  

முதலமைச்சரின் அறிவிப்பை அடுத்துதான் நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கில்…

Read More

ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை – பா.ரஞ்சித் எழுப்பும் கேள்விகள்

by by Jul 10, 2024 0

கோழைத்தனமான கொடூர படுகொலைக்கு ஆளான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணன் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் திருவுடலை, சலசலப்பு பதற்றம் ஏதுமின்றி சட்டம் ஒழுங்கு பிரச்சனை நிகழாமல் நல்லடக்கம் செய்து விட்டோம். அண்ணன் இல்லாத, அவருக்குப் பிறகான இந்த வாழ்க்கையை அவர் கொண்ட கொள்கையான பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் அரசியலை இன்னும் தீரத்துடனும் உறுதியுடனும் களமாடுவோம். அதுவே அண்ணன் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக அமையும். ஜெய்பீம்!

இதனையொட்டி திமுக தலைமையிலான தமிழக அரசுக்கும், சமூக…

Read More

குஜராத் கடல் பகுதியில் 173 கிலோ போதைப் பொருள் பறிமுதல்

by by Apr 29, 2024 0

மார்ச் மாதம் 12-ம் தேதி குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே ரூ.480 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது நடப்பு ஆண்டு மட்டும் குஜராத்தில் 

நடப்பு ஆண்டு மட்டும் குஜராத்தில் இதுவரை ரூ.3.400 கோடிக்கு மேற்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குஜராத் கடல் பகுதியில் இன்று 173 கிலோ போதைப் பொருட்களை இந்திய கடலோர காவல் படை மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பறிமுதல் செய்தது.

இதே போல், நேற்று சுமார் 90 கிலோ போதைப் பொருளுடன் 14…

Read More