February 12, 2025
  • February 12, 2025
Breaking News

Currently browsing அரசியல்

தீபாவளி பட்டாசு வெடிக்க காவல்துறை அறிவுறுத்தியுள்ள கட்டுப்பாடுகள்

by by Nov 7, 2023 0

தீபாவளிப் பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிப்பதற்கான விதிமுறைகள், கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அறிவுரைகளை சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது.

கனம் உச்ச நீதிமன்றத்தின் அறிவுரைகள் படியும், தமிழக அரசின் வழிகாட்டுதல் படியும் பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பதற்கான கால அளவுகள், விதிமுறைகள் ஆகியவற்றை நிர்ணயித்துள்ளன.

அதன்பேரில், வருகிற 12.11.2023 அன்று தீபாவளி பண்டிகையை ஒட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிப்பதற்கான…

Read More

ஆதார் பாதுகாப்பில் எந்த கோளாறும் இல்லை – இந்திய அரசு அறிவிப்பு

by by Sep 26, 2023 0

இந்தியாவில் உள்ள பல கோடி மக்கள் தொகைக்கும் அடையாள எண்ணாக ஒரு தனித்துவ அடையாள எண் ஆதார் எனும் பெயரில் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் சிறப்பமசம் என்னவென்றால், பயோமெட்ரிக் முறை எனப்படும் வழிமுறையில் ஒவ்வொரு தனிமனிதர்களின் கைவிரல் ரேகை மற்றும் முக அடையாளமும் இன்ன பிற விவரங்களும் சேகரிக்கப்படுவதால், ஒவ்வொரு குடிமகனின் அடையாள விவரங்களும் வேறு ஒருவருடன் ஒத்து போகாது.

இத்தகவல்கள் அனைத்தும் மத்திய அரசாங்கத்தினால் நிறுவப்பட்டுள்ள மென்பொருள் கட்டமைப்பான தனித்துவ அடையாள ஆணையத்தால் பாதுகாக்கப்படும். இந்த அடையாள…

Read More

சிறப்பு பாராளுமன்ற கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் வெளியீடு

by by Sep 14, 2023 0

பாராளுமன்ற சிறப்புக் கூட்டம் வருகிற 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடைபெறும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால், சிறப்புக் கூட்டம் எதற்காக கூட்டப்படுகிறது என்பது குறித்து தெரிவிக்கவில்லை.

இந்திய நாட்டின் பெயரை பாரத் என மாற்றுவதற்கு கூட்டப்படிருக்கலாம், ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்த மசோதாவை தாக்கல் செய்வதற்காக கூட்டப்பட்டிருக்கலாம் என பேசப்பட்டது.

ஆனால், 18-ந்தேதி பாராளுமன்ற பழைய கட்டிடத்தில் கூட்டம் தொடங்கும். அதன்பின் 19-ந்தேதி பாராளுமன்ற புதிய கட்டிடத்தில், அவை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த…

Read More

தலையை வெட்டச் சொல்பவர் சாமியார் அல்ல கசாப்புக் கடைக்காரன் – சீமான்

by by Sep 6, 2023 0

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் கிருஷ்ணர் ஜெயந்தி விழாவை தொண்டர்களுடன் கொண்டாடினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சனாதனத்தை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசியது தவறில்லை. அவர் எறிந்த பந்தை பா.ஜ.க.வினர் எடுத்து விளையாடுகிறார்கள்.

ஒருவர் சொன்ன கருத்துக்கு கருத்துடன்தான் மோத வேண்டும். அதுதான் ஜனநாயகம். அதைத் தவிர்த்து தலையை வெட்டுவேன் என்று கூறுவது முறையல்ல.

உதயநிதி ஸ்டாலின் தலையை சீவினால் ரூ.10 கோடி தருவதாக கூறிய அயோத்தி சாமியாரின் தலையை சீவினால்…

Read More

செப்டம்பரில் பாராளுமன்ற சிறப்புக் கூட்டம்

by by Aug 31, 2023 0

செப்டம்பர் 18-ம் தேதி துவங்கி செப்டம்பர் 22 ஆகிய ஐந்து நாட்களுக்கு பாராளுமன்ற சிறப்பு கூட்டம் நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகார துறை மந்திரி பிரகலாத் ஜோஷி அறிவித்து இருக்கிறார்.

பாராளுமன்ற சிறப்பு கூட்டம் எதற்காக கூட்டப்படுகிறது என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. ஆனால், ஜி20 மாநாட்டை தொடர்ந்து நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் கூட்டப்படுவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய இரு தினங்களில் ஜி20 உச்சி மாநாடு…

Read More

தீர்ப்பை படித்து விட்டு 3 நாட்கள் தூங்கவில்லை – தாமாக முன்வந்து ஹைகோர்ட் நீதிபதி விசாரணை

by by Aug 23, 2023 0

2 அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டதற்கு ஐகோர்ட் நீதிபதி கடும் அதிருப்தி

தி.மு.க. ஆட்சியின்போது கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை அமைச்சர்களாக இருந்த பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அ.தி.மு.க. ஆட்சியின்போது தொடரப்பட்ட இந்த வழக்கு தொடர்பான விசாரணை கீழ் கோர்ட்டுகளில் நடைபெற்று வந்தது. விழுப்புரம் கோர்ட்டில் நடைபெற்று வந்த பொன்முடி மீதான வழக்கு விசாரணை ஐகோர்ட்டு நிர்வாக உத்தரவின்பேரில்…

Read More

டெல்லி அவசர சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது

by by Aug 7, 2023 0

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசாங்கத்தின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.

இந்த அவசர சட்டத்திற்கு மாற்றாக டெல்லி அரசு நிர்வாக சட்டத்திருத்த மசோதாவை (டெல்லி சேவைகள் மசோதா) மத்திய அரசு, பாராளுமன்ற மக்களவையில் கடந்த 3ம் தேதி தாக்கல் செய்து நிறைவேற்றியது.

இன்று மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்தன.

விவாதத்திற்கு பதிலளித்து பேசிய உள்துறை மந்திரி அமித் ஷா, டெல்லி சேவைகள்…

Read More

திரைப்பட ஒளிப்பதிவு திருத்த மசோதா 2023 நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேறியது

by by Jul 31, 2023 0

  • சினிமா திருட்டை ஒழிக்கவும், திரைத்துறையை மேலும் மேம்படுத்தவும் இந்த மசோதா கொண்டுவரப்பட்டது என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
  • திரைத்துறைக்கு ரூ.20,000 கோடி இழப்பு ஏற்படுத்தும் சினிமா திருட்டைத் தடுக்க திருத்தங்கள்: திரு தாக்கூர்
  • திரைப்பட உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையை நீக்கி, வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் வகையில் மத்திய அரசு மாற்றியுள்ளது: திரு தாக்கூர்
  • 40…

    Read More

அடுத்தவரை திட்டக்கூடாது என்பது ஐஜேகே கொள்கை – பிறந்தநாள் விழாவில் ரவி பச்சமுத்து

by by Jul 16, 2023 0

இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவிபச்சமுத்து பிறந்தநாள் விழா மற்றும் மாநில பொதுக்கூட்டம்!

இந்திய ஜனநாயக கட்சி தலைவர் டாக்டர். ரவிபச்சமுத்து பிறந்தநாள் விழா மற்றும் மாநில அளவிலான பிரம்மாண்ட பொதுக்கூட்டம் சனிக்கிழமை (15.07.2023) நடைபெற்றது.

YMCA மைதானத்தில் நடைபெற்ற இந்த கூட்டம் கலை நிகழ்ச்சியுடன் துவங்கியது. இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் டாக்டர். பாரிவேந்தர் தலைமையில் கூட்டணி கட்சி முன்னோடிகள் மற்றும் 20000 பேர் IJK கட்சி தொண்டர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இந்தக் கூட்டத்துக்கு கட்சியின்…

Read More

எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்

by by Jul 11, 2023 0

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

மேலும் எடப்பாடி பழனிசாமி நியமித்த நிர்வாகிகளை அங்கீகரித்து இணையதளத்தில் பதிவேற்றமும் செய்துள்ளது தேர்தல் ஆணையம். நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி தரப்பு அளித்த ஆவணங்களை ஏற்ற தேர்தல் ஆணையம், அதை இணையதளத்தில் பதிவேற்றியது.

பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் என தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம்.

தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக முழுமையாக…

Read More