October 10, 2024
  • October 10, 2024
Breaking News
  • Home
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்
July 11, 2023

எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்

By 0 324 Views

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

மேலும் எடப்பாடி பழனிசாமி நியமித்த நிர்வாகிகளை அங்கீகரித்து இணையதளத்தில் பதிவேற்றமும் செய்துள்ளது தேர்தல் ஆணையம். நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி தரப்பு அளித்த ஆவணங்களை ஏற்ற தேர்தல் ஆணையம், அதை இணையதளத்தில் பதிவேற்றியது.

பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் என தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம்.

தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக முழுமையாக அங்கீகரித்ததை காட்டுவதாக அமைந்துள்ளது.