January 30, 2026
  • January 30, 2026

அறிவழகனுடன் அடுத்தடுத்து படங்கள் பண்ணுவேன் – ஆதி

by on March 1, 2025 0

7G ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சப்தம்’. இந்த படத்தில் ஆதி கதாநாயகனாக நடித்துள்ளார். ‘ஈரம்’ பிளாக் பஸ்டர் ஹிட் படத்திற்கு பிறகு 15 வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ள இரண்டாவது படம் இது என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இருமடங்காக உள்ளது..  இந்த படத்தில் கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்க முக்கிய வேடங்களில் சிம்ரன், லைலா, எம்.எஸ் பாஸ்கர், ராஜீவ் மேனன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். […]

Read More

சப்தம் திரைப்பட விமர்சனம்

by on March 1, 2025 0

தலைப்பே படத்தின் கதையைச் சொல்லிவிடுகிறது. மொழிகள் தோன்றுவதற்கு முன்னால், பல வகையில் எழுப்பப்படும் ஒலிகள்தான் தகவல்களைக் கொண்டு சேர்த்தன. மொழியே கூட ஒலியின் அடிப்படையில் அமைந்ததுதான். ஆக தகவல் பரிமாற்றத்துக்கு சப்தம் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது என்ற லைனைப் பிடித்து நம்மை ஒரு திகிலோடு கூடிய ரசிக அனுபவத்துக்குள் இட்டுச் செல்கிறார் இயக்குனர் அறிவழகன். அறிவழகன் படத்தில் என்னவெல்லாம் இருக்கும் என்று எதிர்பார்த்துச் செல்கிறோமோ அவை எல்லாமே இருக்கின்றன – கூடவே இதுவரை நம் செவிகள் திரையரங்கிற்குள் […]

Read More

ஹாரி பாட்டர் போன்ற ஃபேண்டஸி கதைதான் கிங்ஸ்டன் – ஜீவி பிரகாஷ்

by on March 1, 2025 0

“ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘கிங்ஸ்டன்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா..! ஜீ ஸ்டுடியோஸ் – பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழில் முன்னணி நட்சத்திர நடிகரான சிவ கார்த்திகேயன் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். முன்னதாக நடைபெற்ற முன்னோட்ட வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, முன்னணி நட்சத்திர இயக்குநர்களான வெற்றிமாறன்- சுதா கொங்காரா- பா.ரஞ்சித் – அஸ்வத் மாரிமுத்து […]

Read More

சுழல் 2 அமேசான் பிரைம் சீரிஸ் விமர்சனம்

by on February 28, 2025 0

அமேசான் பிரைமில் சுழல் முதல் சீசன் வெளிவந்தபோதே அது பெரும் வரவேற்பைப் பெற்றதற்குக் காரணம் வழக்கமான சீரிஸ்கள் போல் அல்லாமல் இது திரைப்படம் பார்க்கும் அனுபவத்தைத் தந்ததுதான். அந்த அனுபவம் கொஞ்சமும் குறையாமல் இந்த சீசன் 2 சுழல் வெளிவந்திருக்கிறது. முதல் சீசனுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும் ஆனால் அதிலிருந்து விலகி இருக்கும் இன்னொரு கருப்பொருளைத் தொட வேண்டும் என்கிற சவாலுடன் இந்த இரண்டாவது சீசனில் களம் இறங்கி இருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள் புஷ்கரும் காயத்ரியும்.  எட்டு எபிசோடுகள் […]

Read More

திரைப்பாடல்களின் உரிமை யாருக்கு – சட்டம் என்ன சொல்கிறது?

by on February 28, 2025 0

“என் அனுமதி இல்லாமல் நான் இசையமைத்த திரைப்பட பாடல்களை யாரும் பயன்படுத்தக் கூடாது…” என்று கொஞ்ச காலம் முன்பு இசைஞானி இளையராஜா தன் பாடல்களை பயன்படுத்துவோர்களிடம் ராயல்டி கூறியிருந்தார். அது சர்ச்சைக்குரிய பேச்சானது. காரணம் ஒரு படத்தில் வரும் பாடல்கள் நியாயப்படி அந்த படத்தின் தயாரிப்பாளரைதான் போய்ச் சேர வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சிலர் அந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். பொதுவாகவே திரைப்படப் பாடல்கள் மூலம் கிடைக்கும் வருமானம் யாருக்கு சொந்தம்? என்பது குறித்த சர்ச்சை இருந்து […]

Read More

எஸ்ஆர்எம் பல்கலையில் மிலான்’25 தேசிய அளவிலான கலாச்சார திருவிழா..!

by on February 28, 2025 0

சென்னை 28 பிப்ரவரி 2025 அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருக்கும் தேசிய அளவிலான, கலாச்சார திருவிழா மிலான்’25, 2025 மார்ச் 3-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது. ரூ.15 லட்சம் என்ற மொத்த பரிசுத் தொகையுடன் 40-க்கும் அதிகமான நிகழ்ச்சிகளுடன் நான்கு நாட்கள் நிகழ்வாக நடைபெறவிருக்கும் இக்கலைத் திருவிழாவில் நாடெங்கிலுமிருந்து திறமைமிக்க பங்கேற்பாளர்கள் கலந்துகொள்கின்றனர்.  மார்ச் 3-ம் தேதியன்று நடைபெறவிருக்கும் மாபெரும் தொடக்கவிழா நிகழ்வில் பிரபல திரைப்பட நடிகர் திரு. அதர்வா […]

Read More

ஸ்வீட்ஹார்ட் படம் ஒரு கம்ப்ளீட் ரொமான்டிக் டிராமா – ரியோ ராஜ்

by on February 28, 2025 0

Y S R பிலிம்ஸ் சார்பில் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் ரியோ ராஜின் ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு YSR பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. ‘ஸ்வீட்ஹார்ட் ‘ எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரஞ்சி பணிக்கர், ரெடின் கிங்ஸ்லி, […]

Read More

ஸ்மார்ட் வைஃபை மற்றும் ஹெவி டியூட்டி ஏசி பிரிவுகளில் தனது நிலையை வலுப்படுத்தும் ப்ளூ ஸ்டார்..!

by on February 27, 2025 0

ப்ளூ ஸ்டார் நிறுவனம், 150 மாடல்கள் கொண்ட அறை ஏசிகளின் ஒரு விரிவான வரம்பை அறிமுகப்படுத்துகிறது; ஸ்மார்ட் வைஃபை மற்றும் ஹெவி டியூட்டி ஏசி பிரிவுகளில் தனது நிலையை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது… சென்னை, பெப்ரவரி 24, 2025 – ப்ளூ ஸ்டார் லிமிடெட், வருகின்ற கோடை காலத்திற்காக, ஒரு ‘ஃப்ளாக்ஷிப்’ பிரீமியம்’ வரம்பு உட்பட, 150 மாடல்கள் கொண்ட அறை ஏசிகளின் அதன் புதிய விரிவான வரம்பை இன்று வெளியிட்டது. இந்த வரிசையில் இது அனைத்து விலைப் […]

Read More

தமிழ் சினிமாவில் புதுசு – வேற லெவல் மர்மர் டிரெய்லர்

by on February 25, 2025 0

தமிழ் திரையுலகில் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படம் என்ற வகையில் மர்மர் சாதனை படைக்க இருக்கிறது. இந்தப் படத்தை ஹேம்நாத் நாராயணன் எழுதி, இயக்கியுள்ளார். எஸ்.பி.கே. பிக்சர்ஸ் சார்பில் பிரபாகரன் மற்றும் ஸ்டான்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளன. இந்தப் படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி பெரும் பாராட்டைப் பெற்றது. இந்த நிலையில் மர்மர் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில், திரைப்படத்தின் இயக்குநர் ஹேம்நாத் நாராயணன், ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸ், ஒலி […]

Read More

எந்த மொழியை இங்கு திணித்தாலும், தமிழை அழிக்க முடியாது – ஆர்.கே.செல்வமணி

by on February 25, 2025 0

கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் ” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா..! ஸ்ரீ கணபதி பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிப்பில், பிரபல இயக்குனர் K. ரங்கராஜ் இயக்கத்தில், ஸ்ரீகாந்த், புஜிதா பொன்னாடா நடிப்பில் ஒரு அழகான காதல் படமாக உருவாகியுள்ள படம் ” கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் ” வரும் மார்ச் 14 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் செய் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக […]

Read More
CLOSE
CLOSE