March 25, 2025
  • March 25, 2025
Breaking News
  • Home
  • பல்சுவை
  • ஸ்மார்ட் வைஃபை மற்றும் ஹெவி டியூட்டி ஏசி பிரிவுகளில் தனது நிலையை வலுப்படுத்தும் ப்ளூ ஸ்டார்..!
February 27, 2025

ஸ்மார்ட் வைஃபை மற்றும் ஹெவி டியூட்டி ஏசி பிரிவுகளில் தனது நிலையை வலுப்படுத்தும் ப்ளூ ஸ்டார்..!

By 0 45 Views

ப்ளூ ஸ்டார் நிறுவனம், 150 மாடல்கள் கொண்ட அறை ஏசிகளின் ஒரு விரிவான வரம்பை அறிமுகப்படுத்துகிறது; ஸ்மார்ட் வைஃபை மற்றும் ஹெவி டியூட்டி ஏசி பிரிவுகளில் தனது நிலையை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது…

சென்னை, பெப்ரவரி 24, 2025 – ப்ளூ ஸ்டார் லிமிடெட், வருகின்ற கோடை காலத்திற்காக, ஒரு ‘ஃப்ளாக்ஷிப்’ பிரீமியம்’ வரம்பு உட்பட, 150 மாடல்கள் கொண்ட அறை ஏசிகளின் அதன் புதிய விரிவான வரம்பை இன்று வெளியிட்டது. இந்த வரிசையில் இது அனைத்து விலைப் புள்ளிகள் முழுவதிலும் ஒவ்வொரு நுகர்வோர் பிரிவின் தேவைகளையும் பூர்த்தி செய்கின்ற இன்வெர்டர், ஃபிக்ஸ்ட் ஸ்பீட் மற்றும் விண்டோ ஏசிகள் உள்ளன.

நாட்டின் பல பகுதிகளில் ஏற்படும் கடும் கோடை வெப்பம் மற்றும் இந்தியாவின் விரிவடைந்து வரும் நடுத்தர வர்க்கத்தின் அதிகரித்து வரும் நிகர வருமானம் ஆகியவற்றால் உந்தப்பட்ட அறை ஏசிகளுக்கான இந்த தேவை கணிசமான வளர்ச்சியைக் காண்கின்றது. மேலும், அடுக்கு 3, 4 மற்றும் 5 சந்தைகளில் அதிகரித்து வருகின்ற தேவை, மாற்று வாங்குபவர்கள் மற்றும் தங்கள் வீடுகளில் கூடுதல் அறைகளுக்கு ஏசி வாங்கும் நுகர்வோர் ஆகியோரால் இந்த வளர்ச்சி மேலும் தூண்டப்படுகிறது. மதிப்பீடுகளின்படி, இந்தியாவின் ஏசி தொழில் நிதியாண்டு 30க்குள் இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, ப்ளூ ஸ்டார் நிறுவனம் தனது உற்பத்தி, R&D மற்றும் புதுமைத் திறன்களைப் பயன்படுத்தி புதிய, வேறுபட்ட மற்றும் வகுப்பில் சிறந்த ஏசிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

2025 ஆண்டுக்கான புதிய ஏர் கண்டிஷனர்களின் வரம்பு

இந்த நிறுவனம், தீவிர வானிலை நிலைமைகளிலும் அதிக குளிரூட்டும் செயல்திறனை வழங்குகின்ற 3-ஸ்டார் மற்றும் 5-ஸ்டார் வகைகளில் பல மாடல்களை உள்ளடக்கிய ஒரு விரிவான வரம்பை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த மாடல்கள் ரூ. 28,990 முதல் தொடங்குகின்ற கவர்ச்சிகரமான விலைகளுடன் 0.8 TR முதல் 4 TR வரை பல்வேறு குளிரூட்டும் திறன்களில் கிடைக்கின்றன.

‘Customised Sleep’ போன்ற தனித்தன்மை வாய்ந்த மற்றும் ஸ்மார்ட் அம்சங்களைக் கொண்டுள்ள ஸ்மார்ட் வைஃபை ஏசிகளின் கிட்டத்தட்ட 40 மாடல்கள் இதில் அடங்கும். இதில் தடையற்ற தூக்கத்தை உறுதி செய்கின்ற வகையில் 12 மணி நேரத்திற்கு, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் வெப்பஅளவு, ஃபேன் வேகம், கூல்/ஃபேன் மோட் மற்றும் ஏசியை இயக்குதல் /நிறுத்துதல் போன்றவற்றை ஒருவர் கூட்டியே அமைக்கலாம். வாய்ஸ் கமாண்ட் டெக்னாலஜியுடன், வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்மார்ட் சாதனங்கள் மூலம் தங்கள் ஏசிகளை இயக்க முடியும், உதாரணமாக அமேசான் அலெக்ஸா அல்லது கூகிள் ஹோம் போன்றவற்றை ஆங்கிலம் அல்லது ஹிந்தி மொழியில் குரல் கட்டளைகள் மூலம் பயன்படுத்தலாம். கூடுதலாக, கண்காணிக்க, கட்டுப்படுத்த மற்றும் ஏசி பயன்பாட்டை வரம்பிடுவதற்கான அணுகல்தன்மையை வழங்குகின்ற எனர்ஜி மேனேஜ்மெண்ட் அம்சம் ஏசியின் மின்சார நுகர்வை முழுமையாக கட்டுப்படுத்த உதவுகிறது, இதன் மூலம் அதிகப்படியான மின்சார நுகர்வை தடுக்கிறது.

இந்த புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஏசிகள் பல்வேறு சக்திவாய்ந்த அம்சங்களுடன் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் பல்வேறு அளவுருக்களை உணர்ந்து, சரிசெய்து, கண்காணித்து அதிகபட்ச சௌகரியத்தை வழங்கும் ஒரு உயர்நுட்ப மற்றும் உள்ளுணர்வு அல்காரிதம் ஆன ‘AI Pro+’ என்ற ஒரு புதுமையான அம்சம் அடங்கும். மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் ஏசியின் உள் யூனிட்டை சுத்தமாக வைத்து உகந்த செயல்திறனை பராமரிக்க வடிவமைக்கப்பட்ட மூன்று-படி செயல்முறையான ‘டிஃப்ராஸ்ட் க்ளீன் டெக்னாலஜி’ ஆகும். இது காயில் உறைபனியுடன் தொடங்கி, உருகி மற்றும் உலர்த்துவதன் மூலம் செயல்திறனை கணிசமாக மேம்படுத்தி அதன் ஆயுட்காலத்தை நீட்டிக்கிறது. கூடுதலாக, அனைத்து ப்ளூ ஸ்டார் இன்வர்டர் ஏசிகளும் ஸ்மார்ட் ரெடியாக உள்ளன மேலும் ஒரு தனி ஸ்மார்ட் தொகுதியை சேர்ப்பதன் மூலம் ஸ்மார்ட் ஏசிகளாக தரமுயர்த்தலாம்.

இன்னும் கூடுதலாக, இவை விரைவான குளிரூட்டலுக்கான ‘டர்போ கூல்’, வாடிக்கையாளர், குளிரூட்டல் திறனை மேல்நோக்கி அல்லது கீழே சரிசெய்ய அனுமதிக்கும் ‘கன்வெர்ட்டிபிள் 6-இன்-1 கூலிங்’, மற்றும் IDU மற்றும் ODU இரண்டிற்கும், காயில் அரிப்பு மற்றும் கசிவைத் தடுப்பதற்கும் மற்றும் நீண்ட ஆயுளைப் பெறுவதற்கும் முறையே நானோ ப்ளூ புரொடெக்ட் டெக்னாலஜி மற்றும் ஹைட்ரோஃபிலிக் ‘ப்ளூ ஃபின்’ பூச்சு போன்ற அம்சங்களை உள்ளடக்குகின்றன. வேறு சில தனித்துவமான அம்சங்களில், ஒப்பிடமுடியாத துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையை வழங்குகிற DigiQ Octa சென்சார்கள்; ஒவ்வொரு 0.5°C லும் வெப்பநிலையை அமைக்கும் சீரான குளிரூட்டல் மற்றும் துல்லியமான குளிரூட்டல் தொழில்நுட்பத்திற்கான 4-வழி ஸ்விங் மற்றும் பரந்த கோண லூவர் இயக்கம் ஆகியவை அடங்கும். கூடுதலாக இந்த வரம்பு, காற்று குளிர்ச்சியாக மட்டுமல்லாமல், தூய்மையானதாகவும் சுத்தமாகவும் இருக்கும் என்பதை உறுதிப்படுத்தும் ஒரு HEPA ஃபில்ட்டர், PM2.5 ஃபில்ட்டர் மற்றும் செயல்படுத்தப்பட்ட கார்பனுடன் கூடிய ஆன்டி-மைக்ரோபியல் போன்ற மேம்பட்ட வடிகட்டுதல் விருப்பங்களின் தேர்வுகளை வழங்குகிறது. ப்ளூ ஸ்டார் நிறுவனத்தின் இன்வெர்ட்டர் ஏசிகளின் மற்றொரு முக்கிய அம்சம், வெளிப்புற வோல்டேஜ் ஸ்டெபிலைசரின் தேவையை நீக்குகின்ற அவற்றின் பரந்த இயக்க மின்னழுத்த வரம்பு ஆகும்.

முதன்மை வரம்பு

இந்த நிறுவனம், ‘சூப்பர் எனர்ஜி-எஃபிசியண்ட் ஏசிகள்’, ‘ஹெவி-டியூட்டி ஏசிகள்’, ‘ஹாட் & கோல்ட் ஏசிகள்’ மற்றும் ‘ஆன்டி-வைரஸ் டெக்னாலஜி கொண்ட ஏசிகள்’ உள்ளிட்ட ஒரு சக்திவாய்ந்த முதன்மை மாடல்களின் வரம்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

ப்ளூ ஸ்டார் நிறுவனத்தின் ‘சூப்பர் எனர்ஜி-எஃபிசியண்ட் ஏசிகள்’, ஒரு 3-ஸ்டார் இன்வெர்ட்டர் ஏசியை விட 64% அதிக ஆற்றல் திறனுள்ளதாக இதை ஆக்குகின்ற வகையில் உயர்ந்த காற்று ஓட்ட அளவை வழங்குவதன் மூலம் உகந்த குளிரூட்டலுடன் விரிவாக்கப்பட்ட ஆற்றல் திறனை அடைய ஒரு தனித்துவமான டைனமிக் டிரைவ் டெக்னாலஜியைக் கொண்டுள்ளன. இதன் விளைவாக, 1 TR இன்வெர்ட்டர் ஸ்ப்ளிட் ஏசிகள் 6.25 ISEER ஐ அடைகின்றன.

இந்தியா முழுவதும் வெப்பநிலை ஒவ்வொரு ஆண்டும் உச்ச கோடை காலத்தில் அதிகரித்து வருவதால், இந்த நிறுவனம் அதன் உயர் செயல்திறன் கொண்ட ‘ஹெவி-டியூட்டி ஏசிகள்’ வரம்பை வழங்குகிறது. மேம்பட்ட விவரக்குறிப்புகளுடன் கட்டமைக்கப்பட்ட இந்த ஏசிகள், 56°C வரையிலான கொடிய வெப்பத்திலும் கூட தனித்துவமான குளிரூட்டல் சக்தி மற்றும் சௌகரியத்தை வழங்குகின்றன. 55 அடி வரையிலான ஒரு வலுவான காற்று வீசுதல் திறனைக் கொண்ட இவை, 43°C வெப்பநிலையிலும் தீவிர சூழ்நிலைகளில் உகந்த செயல்திறனை உறுதி செய்கின்ற முழு குளிரூட்டல் திறனை பராமரிக்கின்றன.

‘ஹாட் & கோல்ட் ஏசிகள்’ ஆண்டு முழுவதும் சௌகரியத்தை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. ப்ளூ ஸ்டார் நிறுவனம், ஸ்ரீநகர் போன்ற சந்தைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட -10°C வரையிலான சுற்றுப்புற வெப்பநிலையில் செயல்படக்கூடிய ஒரு மாடலை உருவாக்கியுள்ளது. மற்றொரு வரம்பு, கடுமையான குளிர்காலத்தை எதிர்கொள்ளும் நாட்டின் பிற பகுதிகளுக்கு ஏற்றதாக -2°C வரையிலான சுற்றுப்புற வெப்பநிலையில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இறுதியாக, சௌகரியத்தையும் ஆரோக்கியத்தையும் ஒருங்கிணைக்கிற இந்த நிறுவனத்தின் ‘ஆன்டி-வைரஸ் டெக்னாலஜி கொண்ட ஏசிகள்’ வரம்பு, தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் மற்றும் துகள்களை திறம்பட வடிகட்டுகிறது. வாடிக்கையாளர்கள் குளிர்காலத்தில் குறிப்பாக இந்த ஏசிகளை காற்று சுத்திகரிப்பானாகவும் பயன்படுத்தலாம்.

ப்ளூ ஸ்டார் இன் ஏர் கண்டிஷனர்கள், மலிவு விலையில் கூட தனித்துவமான குளிரூட்டலை வழங்குவதுடன், தங்களது தரம், நம்பகத்தன்மை மற்றும் நீடித்த தன்மைக்காக பிரபலமானவை. இன்வெர்ட்டர் கம்ப்ரசருக்கு ஒரு வாழ்நாள் உத்தரவாதம், PCBகளுக்கு ஒரு 5-ஆண்டு உத்தரவாதம் மற்றும் அதன் தயாரிப்புகளுக்கு எளிதான நிதி வசதிகள் போன்ற சலுகைகளை இந்த நிறுவனம் வழங்குகிறது.

2011ல் குடியிருப்பு ஏசி பிரிவில் இந்த நிறுவனம் நுழைந்ததிலிருந்து, ப்ளூ ஸ்டார் ஆண்டுதோறும் இந்த தொழில்துறையை விஞ்சுகின்ற வகையில் இந்த பிரிவில் தொடர்ந்து வளர்ந்துள்ளது. குடியிருப்பு ஏசி பிரிவில் நிதியாண்டு 26க்குள் 14.3% சந்தை பங்கை அடைய இந்த நிறுவனம் நோக்கம் கொண்டுள்ளது.

உற்பத்தி இருப்பை விரிவாக்குதல்

ப்ளூ ஸ்டார், தன் முழுமையான சொந்த நிறுவனமான ப்ளூ ஸ்டார் க்ளைமேடெக் லிமிடெட் மூலம், ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீ சிட்டியில் ஒரு நவீன உற்பத்தி ஆலையை நிறுவியுள்ளது. இந்த ஆலை ஜனவரி 2023 முதல் வணிக உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. கூடுதலாக, இந்நிறுவனம் ஹிமாச்சலப் பிரதேசத்தில் அறை ஏர் கண்டிஷனர்கள் உற்பத்தி செய்வதற்காக இரண்டு தனி ஆலைகளை செயல்படுத்துகிறது. இந்த ஆலைகள் அதிநவீன தானியங்கி தொழில்நுட்பங்களுடன் பொருத்தப்பட்டுள்ளன, இதில் நவீன அசெம்ப்ளி வரிசைகள் மற்றும் பொருள் கையாளும் அமைப்புகள், அத்துடன் IoT ஒருங்கிணைப்பு மற்றும் டிஜிட்டல்மயமாக்கல் மீது கவனம்செலுத்தப்பட்ட முழுமையான முயற்சிகள் அடங்கும். இந்த ஆலைகளின் மூலம், ப்ளூ ஸ்டார் நிறுவனத்தின் தற்போதைய உற்பத்தி திறன் சுமார் 1.4 மில்லியன் அறை ஏசி (AC) களாகும், மேலும் அண்மைய காலத்தில் இது படிப்படியாக 1.8 மில்லியன் யூனிட்களாக விரிவாக்கப்படும் திட்டம் உள்ளது.

அணுகல் விரிவாக்கம்

இந்நிறுவனம் இ-காமர்ஸ் மற்றும் நவீன வர்த்தக சேனல்களில் விற்பனையை ஊக்குவிக்க கடையில் உள்ள செயல்முறை விளக்குநர்களில் முதலீடு செய்கின்ற மற்றும் அனைத்து சந்தைப் பிரிவுகளிலும் விற்பனையை அதிகரிக்க இலக்கு வைத்த ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விளம்பரங்களைப் பயன்படுத்துகின்ற வலுவான முன்னேற்றங்களை செய்து வருகின்றது. மேலும், குறிப்பாக வட இந்தியாவில் தனது விநியோக நெட்ஒர்க் ஐ விரிவுபடுத்தி வருகிறது. ப்ளூ ஸ்டார், தனது ‘தங்கத் தரமான சேவை’ மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தின் மூலம், 2,100 க்கும் மேற்பட்ட சேவை மையங்கள் மற்றும் 150 க்கும் மேற்பட்ட சேவை வாகனங்கள் கொண்ட நெட்ஒர்க்கின் மூலம் தன்னை வேறுபடுத்திக் கொள்கிறது. இதன் மூலம், நாடு முழுவதும் அணுகக்கூடிய மற்றும் நம்பகமான விற்பனைக்குப்பிந்தைய ஆதரவை உறுதி செய்கிறது.

பிராண்ட் அம்பாசடர் விராட் கோலி

நிறுவனத்தின் பிராண்ட் விழிப்புணர்வு மற்றும் மதிப்பை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்ற வகையில், அறை ஏர் கண்டிஷனர்களுக்கான ப்ளூ ஸ்டார் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசடராக விராட் கோலி தொடர்ந்து இருந்து வருகிறார். விராட் கோலி நடித்த டிவி விளம்பரங்கள், வெப்பத்தை மனிதரூபமாக்கும் கருத்தை மையமாகக் கொண்டு, பார்வையாளர்களிடம் நன்றாக பிரதிபலித்துள்ளன. அதே கருத்தின் அடிப்படையில் புதிய டிவி விளம்பரங்களை இந்த நிறுவனம் வெளியிட உள்ளது, அவை மார்ச் மாதத்தில் டிவி மற்றும் டிஜிட்டல் சேனல்களில் ஒளிபரப்பப்படும். மொத்தத்தில், வருகின்ற கோடை காலத்தில் ப்ளூ ஸ்டார் 50 கோடி ரூபாய்க்கும் மேல் விளம்பரத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

எதிர்கால வாய்ப்புகள்

சென்னையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பத்திரிகையாளர்களுடன் பேசிய ப்ளூ ஸ்டார் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் B. தியாகராஜன் கூறுகையில்: “2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியா சுமார் 450 மில்லியன் நடுத்தர வர்க்க நுகர்வோரைச் சேர்க்க இருப்பதால், அறை ஏர் கண்டிஷனர்களுக்கான சந்தை அதன் திருப்புமுனையில் உள்ளது, மேலும் அடுத்த சில ஆண்டுகளில் அதிவேகமாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீட்டுவசதித் துறையின் விரிவாக்கம், புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் ஏற்றுக்கொள்ளுதல் அதிகரிப்பு மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தின் வளர்ச்சி போன்ற நேர்மறையான போக்குகளும் தொழில்துறையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது எங்களுக்கு 80 ஆண்டுகளுக்கும் மேலான காற்றுச்சீரமைப்பு நிபுணத்துவம் மற்றும் ஒரு வலுவான சந்தை இருப்பால் ஆதரிக்கப்பட்ட ஒரு முக்கியமான வாய்ப்பைக் குறிக்கிறது. வளர்ந்து வரும் தேவையை திறம்பட பயன்படுத்துவதற்கான தகுதியுடைமை மற்றும் திறன்களை மேம்படுத்த, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D), உற்பத்தி மற்றும் விற்பனை சங்கிலி போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க முதலீடுகளை நாங்கள் தொடர்ந்து செய்து வருகிறோம். அனைத்து நுகர்வோர் பிரிவுகள் மற்றும் விலைப் புள்ளிகளை உள்ளடக்கிய எங்களின் விரிவான அறை ஏசி (AC) வரம்பு, சந்தையை விட ஒரு விரைவு வேகத்தில் வளர எங்களுக்கு உதவும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.”என்று கூறினார்.

கூடுதல் தகவலுக்கு, புளூ ஸ்டார் லிமிடெட் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் (கூலிங் & சுத்திகரிப்பு சாதனங்கள்) & கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் துணைத் தலைவர் கிரிஷ் ஹிங்கோரானியை தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்.

மின்னஞ்சல்: girishhingorani@bluestarindia.com

தொலைபேசி: +91 22 66684000/ +91 9820415919