July 10, 2026
  • July 10, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

ஹ்ரிதிக் ரோஷன் – ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவான வார் 2 டீஸர் வெளியீடு

by on May 21, 2025 0

*ஹ்ரிதிக் ரோஷன், ஜூனியர் என். டி. ஆர் மற்றும் கியாரா அத்வானி ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள ‘வார்-2’ படத்தின் டீசரை யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.* இந்திய சினிமாவின் மிகச்சிறந்த இரண்டு உச்ச நட்சத்திரங்களான ஹ்ரிதிக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரது நடிப்பில், 2025-ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘வார்-2’ டீஸரை இந்தியாவின் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாளான இன்று (20/05/2025) வெளியிட்டுள்ளது.  இவர்களுடன் கியாரா […]

Read More

மகள் திருமண செய்தியை சிறப்பாகப் பகிர்ந்தமைக்கு நன்றி தெரிவித்த ஐசரி கணேஷ்..!

by on May 20, 2025 0

வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், பிரபல சினிமா தயாரிப்பாளருமான டாக்டர் ஐசரி கே கணேஷ்- ஆர்த்தி கணேஷ் அவர்களின் மூத்த மகள் டாக்டர்.பிரீத்தா கணேஷுக்கும், தொழிலதிபர் உமா சங்கர் – சித்திரா தம்பதியின் மகன் லஷ்வின் குமாருக்கும் திருமணம் நடைபெற்றது. இதில் அரசியல், சினிமா, கல்வியாளர்கள், தங்க வைர நகைக்கடை உரிமையாளர்கள் என பலத்துறைகளை சேர்ந்த பிரபலங்கள் அனைவரும் வந்திருந்து மண மக்களை வாழ்த்தினர். ஊடகங்களும் அந்தச் செய்தியை முழுமையாக மக்களிடம் எடுத்துச் சென்றன.  இந்நிலையில், ஐசரி கணேஷ் […]

Read More

எங்கள் திருமணத்துக்குப் பிறகும் சாய் தன்ஷிகா நடிப்பார்..! – யோகிடா விழாவில் விஷால் அறிவிப்பு

by on May 20, 2025 0

*துணிச்சலான காவல் ஆய்வாளராக சாய் தன்ஷிகா நடிக்கும் ‘யோகிடா’ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!* பேராண்மை, பரதேசி, கபாலி, சோலோ போன்ற வெற்றிப் படங்களில் நடித்த, சமீபத்தில் வெளியான ‘ஐந்தாம் வேதம்’ வெப் தொடரிலும் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்திய ‘சாய் தன்ஷிகா’ முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘யோகிடா’. இத்திரைப்படத்தில் சயாஜி ஷிண்டே, மனோபாலா, கபீர் துஹான் சிங், எஸ்தர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார் கௌதம் கிருஷ்ணா. மலையாளத்தில் […]

Read More

ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற சூர்யா 46 ‘ பட பூஜை..!

by on May 19, 2025 0

*சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி எழுதி இயக்கும் இரு மொழி படமான ‘#சூர்யா 46 ‘ படத்தின் பூஜை ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது* ரசிகர்களுக்கு அற்புதமான புதிய சினிமா அனுபவத்தை வழங்குவதற்கு ஏற்ற வகையில் களம் அமைத்து , சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், ‘புரொடக்ஷன் நம்பர் 33 – #சூர்யா 46 ‘ எனும் திரைப்படத்தின் தொடக்க விழா பிரம்மாண்டமான பூஜையுடன் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இது தமிழ் – தெலுங்கு என இரு மொழி திரைப்படத்தின் பணிகள் […]

Read More

நான் யார் என்று தெரியாத போதே என் மீது நம்பிக்கை வைத்தவர் ஆறுமுக குமார்..! – விஜய் சேதுபதி

by on May 19, 2025 0

*’மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘ ஏஸ் ‘ (ACE ) பட பத்திரிகையாளர் சந்திப்பு!* மக்கள் செல்வன் ‘ விஜய் சேதுபதி நடிப்பில், 7CS என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில், இயக்குநர் ஆறுமுக குமார் எழுதி, தயாரித்து, இயக்க, பிரம்மாண்டமான பொருட்செலவில், மலேசியா நாட்டின் பின்னணியில், அட்டகாசமான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் ‘ஏஸ்’ ( ACE). வரும் மே மாதம் 23 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, படக்குழுவினர் […]

Read More

சண்முக பாண்டியனை இனிமேல் உங்களிடம் ஒப்படைக்கிறேன் – பிரேமலதா விஜயகாந்த்

by on May 17, 2025 0

“படை தலைவன்”  பட இசை வெளியீட்டு விழா..! VJ Combines நிறுவனம் Dass Pictures உடன் இணைந்து வழங்க,  தயாரிப்பாளர் ஜகநாதன் பரமசிவம் தயாரிப்பில், இயக்குநர் U அன்பு இயக்கத்தில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் படமாக உருவாகியுள்ள திரைப்படம் படம்  “படை தலைவன்”.  வரும் மே 23 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரவுள்ள நிலையில், […]

Read More

இந்திய ரசிகர்களுக்கு டாம் குரூஸ் விட்டுச் செல்லும் செய்தி..!

by on May 17, 2025 0

டாம் குரூஸ் இந்தியாவை நேசிக்கிறார், மீண்டும் வர விரும்புகிறார்; அனைத்து ரசிகர்களுக்கும் ஒரு இதயப்பூர்வமான செய்தியை விட்டுச் செல்கிறார்: இம்பாசிபிள் – தி ஃபைனல் ரெக்கனிங்! மிஷன்: இம்பாசிபிள் – தி ஃபைனல் ரெக்கனிங் மே 17 அன்று இந்தியாவில் பிரமாண்டமாக வெளியிடப்பட உள்ளது, டாம் குரூஸ் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக வழிநடத்தி வரும் ஒரு உரிமையாளரின் காவிய முடிவை அமெரிக்கா குறிக்கும் 6 நாட்களுக்கு முன்பு, உலகளாவிய பொழுதுபோக்கை உண்மையிலேயே மறுவரையறை செய்த ஐகான், இந்தியாவுடனான […]

Read More

மாமன் திரைப்பட விமர்சனம்

by on May 17, 2025 0

தலைப்பே பாதி கதையைச் சொல்லிவிட்டது. அக்கா சுவாசிகா மீது உயிரையே வைத்திருக்கிறார் தம்பியாக வரும் நாயகன் சூரி.  திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆகியும் சுவாசிகாவுக்கு குழந்தை பிறக்காமல் இருப்பதால் அவர் புகுந்த வீட்டில் பல இன்னல்களுக்கு ஆளாகி, ஒரு வழியாகக் கருவுறுகிறார்.  அவருக்கு ஆண் குழந்தை பிறக்க… தாய் மாமன் ஆகும் சூரி அந்த குழந்தையுடன் பிரிக்க இயலாத பாசப்பிணைப்பில் கட்டுண்டு கிடக்க அதுவே ஒரு கட்டத்தில் பிரச்சனை ஆகிறது.  இந்நிலையில் சுவாசிகாவுக்கு மருத்துவம் பார்த்த […]

Read More

டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்பட விமர்சனம்

by on May 17, 2025 0

சினிமா விமர்சனங்களால் சந்தானமும் இயக்குனர் எஸ். பிரேம் ஆனந்தும் எவ்வளவு காண்டாகி இருக்கிறார்கள் என்று தெரிவிக்கும் படம். அதை கொஞ்சம் பேண்டஸி கலந்து சொல்லி இருக்கிறார்கள் அந்த விஷயத்தையே கருப்பொருளாக எடுத்துக்கொண்டு சந்தானமும் இதில் விமர்சனம் செய்யும் யூடியூபர் ஆகி இருக்கிறார்.  இவரைப் போன்ற சினிமாவை கிழி கிழி என்று கிழிக்கும் விமர்சகர்களை ஒரு மர்ம அழைப்பு அனாமதேய தியேட்டருக்கு அழைக்கிறது. அங்கே சென்றவர்களை பாடாய்ப் படுத்தி  போட்டுத் தள்ளுகிறது.  அதன்படியே சந்தானம் குடும்பத்திற்கும் அழைப்பு வர […]

Read More

பவர்ஸ்டார் பவன் கல்யாணின் ஹரி ஹர வீர மல்லு ஜூன் 12 ஆம் தேதி வெளியாகிறது..!

by on May 17, 2025 0

பவர்ஸ்டார் பவன் கல்யாணின் ஹரி ஹர வீர மல்லு ஜூன் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது! இந்தக் கோடையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் ஒரு அபூர்வமான சினிமா நிகழ்வாக, பவர்ஸ்டார் ‘பவன் கல்யாண்’, வீர மல்லுவாக—ஒரு வீரர், குற்றவாளி, கவியரசர் என்ற அவதாரத்தில் திரையில் தோன்றுகிறார். இது வரை வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன; இதனால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரிக்க, பட குழு மிகக் கடுமையாக உழைத்து மிகவும் எதிர்பார்க்கப்படும் மூன்றாவது சிங்கிளையும், படத்தின் […]

Read More