November 28, 2026
  • November 28, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

முழு நடிகையான பாக்ஸிங் வீராங்கனை பகீர் படங்கள்

by on October 30, 2019 0

நடிகையென்று வந்துவிட்டால் எப்படி நடிக்கச் சொல்கிறார்களோ, எப்படி உடை அணியச் சொல்கிறார்களோ அப்படி அணிந்துவிட்டுப் போக வேண்டியதுதான். அப்படி நடிக்க மாட்டேன், இப்படி உடை அணிய மாட்டேன் என்றால் ஓரம்கட்டி விடுவார்கள். “என்ன ஒன்று… கதைக்குத் தேவைப்பட்டது… அப்படி நடித்தேன்…” என்று பேட்டி கொடுத்து விட்டால் எல்லாம் சரியாகி விடும். அப்படித்தான் ஆனது அந்த பாக்ஸிங் வீராங்கனையின் நிலை. இறுதிச்சுற்று படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக அறிமுகமான ரித்திகா சிங், உண்மையிலேயே ஒரு மார்ஷல் ஆர்ட்ஸ் வீராங்கனை. அந்தப்படத்துக்கு […]

Read More

ரஜினியை முதல்வராக்கும் முயற்சியில் எஸ்.எஸ்.ராஜமௌலி

by on October 30, 2019 0

ரஜினி எப்போதும் உச்சத்தில்தான் இருக்கிறார். ஆனாலும், அவரது ‘டை ஹார்ட்’ ரசிகர்கள் மட்டுமல்லாது பொது ரசிகர்களும் அவரின் மீது ஈர்ப்பாக இருந்த கால கட்டத்தில்… அவரும் முழு ஆரோக்கியத்துடனும், இளமையுடனும் இருந்த போதே அவருக்காகவே ‘முதல்வன்’ கதையை எழுதினார் இயக்குநர் ஷங்கர். அதில் ரஜினி மட்டும் நடித்திருந்து கட்சியை அறிவித்து அதற்கடுத்து வந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் ‘ஷ்யூர் ஷாட்’டாக அப்போதே தமிழக முதல்வர் ஆகியிருப்பார். ஆனால், அதற்கான தைரியம் அவருக்கு அப்போது வராமல் போக, […]

Read More

சபாஷ் விஜய் ரசிகர்கள் – சுர்ஜித் மரணம் ஃபாலோ அப்

by on October 29, 2019 0

இரண்டரை வயது குழந்தை சுர்ஜித்தின் மரணம் நாடெங்கிலும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது எனலாம். திறந்து கிடக்கும் ஆழ்துளைக் கிணறுக்ளை மூட எல்லோருக்கும் பொறுப்பைத் தோற்றுவித்திருக்கிறது சுர்ஜித்தின் மரணப் போராட்டம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அனைத்து மாவட்ட கலெக்டர்களும் திறந்திருக்கும் ஆழ்துளைக் கிணறுகள் பற்றிய தகவல்களைப் பெற்று வருகிறார்கள். அவற்றின் மீது அவர்கள் நடவடிக்கை எடுத்து வரும் அதே சமயம், தன்னார்வமாக பொதுவானவர்களும் இச்செயலில் இறங்கியிருக்கிறார்கள். மக்களுக்கான பொறுப்புணர்வில் முக்கிய அங்கம் வகிக்கும் நக்கீரன் இதழும் இதுபோன்ற கைவிடப்பட்ட திறந்து […]

Read More

மானாட மயிலாட டான்சரான பட ஹீரோ சாலை விபத்தில் பலி

by on October 29, 2019 0

தீபாவளியின் துக்க நிகழ்வுகளில் தீ விபத்துகள்தான் முக்கியமாக இடம்பெறும் என்பதில்லை. சாலை விபத்துகளும் நிகழ்வதுண்டு. அப்படி ஒரு விபத்தில் பலியாகிவிட்டார் ஒரு பிரபலம். சன் டிவியில் தொகுப்பாளராகவும், ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் டான்சராகவும் பிரபலமானவர் மனோ. இவர் ‘புழல்’ திரைப்படத்தில் மூன்று நாயகர்களில் ஒருவராக அறிமுகமானார். மேலும் பல படங்களில் நடித்தார். மேடை நிகழ்ச்சிகளும் நடத்தி வந்தார் மனோ.    இத்தனை பரபரப்பாக இயங்கி வந்தவர் நேற்று (28.10.19) தீபாவளி அன்று மனைவி லிவியாவுடன் அம்பத்துாரில் காரில் […]

Read More

குழந்தை சுர்ஜித் உடலுக்கு மக்கள் கண்ணீர் அஞ்சலி வீடியோ

by on October 29, 2019 0

மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25-ம் தேதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் 2 வயது குழந்தை சுர்ஜித் தவறி விழுந்தான். அதனைத் தொடர்ந்த மீட்புக் குழுவினரின் பல்வேறு முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன  கடைசி முயற்சியாக அருகில் மற்றொரு பெரிய ஆழ்துளை கிணறு தோண்டி, பக்கவாட்டில் சுரங்கம் தோண்டி குழந்தையை மீட்கும் பணிகள் தொடங்கின. ஆனால், கடினமான பாறைகள் அதற்கு இடையூறாக இருந்தன.   இந்நிலையில், நேற்று (28-10-2019) இரவு 10.30 மணியளவிலிருந்து குழந்தையின் உடலில் […]

Read More

லோகேஷ் கனகராஜின் கைதி வெற்றிக்கு விஜய் கொடுத்த பரிசு

by on October 28, 2019 0

சினிமாவின் கதைக்குள்ளேதான் ஆச்சரியங்கள் நடக்குமென்பதில்லை. கதைக்கு வெளியிலேயும் அந்த ஆச்சரியங்கள் நடக்கலாம். இப்போது விஜய் 64 படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் அந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இந்நிலையில் இந்த தீபாவளிக்கு லோகேஷ் இயக்கிய ‘கைதி’, விஜய்யின் ‘பிகிலு’டன் மோதியது. இதில் ஒட்டுமொத்த ரசிகர்களின் தீர்ப்பும் ‘பிகில்’ படத்தைவிட ‘கைதி’ சிறப்பாக வந்திருக்கிறது என்பதே. இதனால் தன் அடுத்த படம் லோகேஷின் இயக்கத்தில் அமைந்திருப்பதால் மகிழ்ச்சியுடன் இருக்கும் விஜய் , […]

Read More

பிகில் விஜய்யை தவறாக பேசிய அஜித் ரசிகர்களுக்கு அடி வீடியோ

by on October 28, 2019 0

பிகில் படத்திற்கு சென்று தளபதி விஜய் பற்றி அவதூறாக பேசிய அஜீத் ரசிகர்களை அடித்து வெளுக்கும் தளபதி ரசிகர்களின் ஆவேச காட்சி.. வாயி வாய விடு வாயில குடு #கர்மவினை #Bigil pic.twitter.com/HeU3SFSyID — The Commander (@vpravindhra) October 28, 2019   மேற்படி வீடியோ எந்த தியேட்டரில் எடுக்கப்பட்டது என்ற தகவல் இல்லை. ஆனால், பிகில் ஓடும் தியேட்டரில் எடுக்கப்பட்டது தெளிவாகத் தெரிகிறது. இந்த வீடியோவை வெளியிட்டு மகிழ்ந்திருக்கிறார் ஒரு விஜய் ரசிகர். அஜித்தின் […]

Read More

லாரி டிரைவர்களை நினைத்து பெருமை கொள்கிறேன் – கார்த்தி

by on October 28, 2019 0

‘கைதி’ படம் அனைத்து ஏரியாக்களிலும் அற்புதமாக ஓடிக்கொண்டிருக்கும் மகிழ்ச்சியில் தீபாவளி வாழ்த்துகளை பரிமாறிக் கொள்ள பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் கார்த்தி. அப்போது அவர் பேசியதிலிருந்து… “கைதி’ படம் எனக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் அமைதியாக இருப்பதுதான் பொதுவான நாகரீகம். இது சில செட்டில் இருப்பதில்லை. நடிக்கும் போது அனைவருக்கும் அது தொந்தரவாக இருக்கும். ஆனால் இந்த செட்டில் அனைவரும் அமைதியாக இருந்தார்கள். இந்த கலாச்சாரத்தை இனிமேல் அனைவரும் பின்பற்றினால் நன்றாக இருக்கும். படம் […]

Read More

20 மற்றும் 25 லட்சம் ஏலம் போன மோடி புகைப்படங்கள்

by on October 27, 2019 0

தனக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து கிடைத்த பரிசுப்பொருட்களை ஏலத்தில் விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் நிதியை கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு செலவிட பிரதமர் நரேந்திர மோடி முடிவெடுத்தார். மத்திய கலாசார அமைச்சகம் அந்த பரிசுப் பொருட்களின் கண்காட்சி மற்றும் ஏல விற்பனையை டெல்லியில் நடத்தியது.  அவை டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 2,772 பரிசுகள் ஆன்லைன் மூலம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன. செப்டம்பர் மாதம் 14-ந் தேதி தொடங்கிய இந்த […]

Read More