July 1, 2026
  • July 1, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

பாத்ரூமுக்குள்ளேயே படமாக்கப்பட்ட ரூம்

by on October 22, 2019 0

சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரடக்சன்ஸ் மற்றும் அஸ்வின் கே.வின் மார்ச் 30 நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ரூம்’. பார்த்திபன் நடித்த ‘அம்முவாகிய நான்‘ மற்றும் ‘நேற்று இன்று‘ ஆகிய படங்களை இயக்கிய பத்மாமகன் ‘ரூம்’   படத்தை இயக்குகிறார். தமிழ் தெலுங்கு கன்னடம் என மூன்று மொழிகளில் ‘ரூம்’ தயாராகிறது.   தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த அபிஷேக் வர்மா  படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக மனோசித்ரா நடிக்கிறார். இவர் ’அவள் பெயர் தமிழரசி’, ’நீர்ப்பறவை’, ’வீரம்’ ஆகிய படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.    படத்தின் ஹைலைட்டான அம்சமே  பெரும்பகுதி காட்சிகள் ஒரு பாத்ரூமுக்குள் நிகழ்வதாக திரைக்கதை […]

Read More

விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன் வெளியீடு அறிவிப்பு

by on October 21, 2019 0

பார்க்கப் போனால் தீபாவளிக்கு முன்பே வெளியாகியிருக்க வேண்டிய படம் விஜய்சேதுபதி நடிக்க, விஜய் சந்தர் இயக்கியிருக்கும் ‘சங்கத் தமிழன்’ சில காரணங்களால் வெளியாகவில்லை. பின்னர் தீபாவளி வெளியீட்டில் ‘சங்கத் தமிழன்’ பெயர் இருந்தது. ஆனால், இரண்டு பெரிய படங்களான விஜய்யின் பிகிலும், கார்த்தியின் கைதியும் வெளியாவதால் இருவருக்கும் வழிவிட்டு ‘சங்கத் தமிழன்’ பின்வாங்கியது. இந்நிலையில் இப்போது நவம்பர் 15-ம் தேதி படம் வெளியாகுமென்று படத்தை வெளியிடும் ‘லிப்ரா புரடக்‌ஷன்ஸ்’ அறிவித்துள்ளது. இந்தத் தேதியாவது மாறாமல் படம் வெளியாக […]

Read More

பிகில் படத்துக்கு எதிராக பூ வியாபாரிகள் போர்க்கொடி வீடியோ

by on October 21, 2019 0

வரும் 25 ம் தேதி விஜய் நடித்த பிகில் வெளியாகிறது. இந்நிலையில் திருச்சி பூ வியாபாரிகள் பிகில் படத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.   இது குறித்து திருச்சி ஸ்ரீரங்கம் அண்ணா புஷ்ப தொழிலாளர் சங்க செயலாளர் படையப்பா ரங்கராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்…     “பிகில்’ திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஜய் பேசும்போது பூ வியாபாரிகளை மிகவும் இழிவாகப் பேசியுள்ளார்.   பூ வியாபாரம் செய்பவரை வெடி வியாபாரம் […]

Read More

ஆர் கண்ணன் இயக்கத்தில் சௌகார் ஜானகியின் 400 வது படம்

by on October 21, 2019 0

1952-ல் திரைப்படங்களில் நடிக்க வந்த நாள் முதல் இன்று வரை இடைவிடாமல் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார் சௌகார் ஜானகி. கமலுடன் நடித்த ‘ஹேராம்’ படத்திற்குப் பிறகு 14 வருட இடைவெளியில் ‘வானவராயன் வல்லவராயன்’ படத்தின் மூலம் மீண்டும் தனது திரைப் பயணத்தைத் தொடங்கிய ‘சௌகார் ஜானகி’ தற்போது ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நாயகனாகும் பெயரிடப்படாத நடிக்கிறார். இது இவருக்கு 400-வது படமாகும். தனது இயக்கத்தில் ‘சௌகார்’ ஜானகி நடித்ததையும் அவருடன் ஏற்பட்ட அனுபங்களையும் பற்றி இயக்குநர் கண்ணன் […]

Read More

காவியன் திரைப்பட விமர்சனம்

by on October 20, 2019 0

ஷாம் நடிப்பில் நீண்ட காலம் கழித்து வந்திருக்கும் படம். இதில் ஷாம் காவல்துறை அதிகாரியாக வருகிறார். பயிற்சிக்காக அவர் அமெரிக்கா செல்ல, அங்கே அவர் அமெரிக்க அதிகாரிகளுக்கே பயிற்சி கொடுக்கும் அளவில் பணியாற்றுவதுதான் கதை. அமெரிக்கா என்றாலே ‘சைக்கோ கில்லர்’ கதை தோன்றுகிறதா அல்லது ‘சைக்கோ கில்லர்’ கதை என்றாலே அமெரிக்கா போய் விடுகிறார்களா தெரியவில்லை. இதிலும் அப்படி ஒரு கில்லர் இளம் பெண்களை அவர்களின் ரத்த மாதிரியை எடுத்து பரிசோதித்து அதன் அடிப்படையில் குறிப்பிட்ட பெண்களை […]

Read More

தமிழர் தயாரிக்க முன்வராமல் மலையாளி தயாரித்த ஈழத்தமிழர் பற்றிய படம்

by on October 20, 2019 0

நேமி புரொடக்சன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரித்து நடிக்கும் படம் ’பயணங்கள் தொடர்கிறது;.. டாக்டர் அமர் ராமச்சந்திரன் மலையாளத்தில் பிரபல மலையாள நடிகராக இருப்பவர்.    தந்தை மகள் பாசப் பின்னணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தை இயக்குநர் அபிலாஷ் இயக்கியுள்ளார்.. இவர் பிரபல மலையாள திரைப்பட இயக்குநர்கள் ஐ.வி.சசி மற்றும் தம்பி கண்ணன் தானம் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.   போர் மூளும் சூழலில் இலங்கையிலிருந்து தமிழகம் வந்து உறவினர் வீட்டில் […]

Read More

விவசாயிகளின் நலன் கருதி ஒரு பேஷன் ஷோ

by on October 19, 2019 0

எதை எடுத்தாலும் விவசாயத்தை முன்னிறுத்துவது ஒரு ஃபேஷனாக மாறிக்கொண்டிருக்க, விவசாயிகளின் நலனுக்காக ஒரு ‘ஃபேஷன் ஷோ’ நடத்தப்படுகிறது என்றால் ஆச்சரியமாக இல்லை..?  ஃபேஷன் உலகில் தலைசிறந்த முன்னணி அமைப்பாக விளங்கும் PRAAWOLION EVENTZ சென்னையில் சமுகநல நோக்கத்துடன் மிகப்பெரும் ஃபேஷன் ஷோவான  “PRAWLION FASHION WEEK”  ஒன்றை சென்னையில் அரங்கேற்றுகிறது. ஃபேஷன் உலகின் மிகப்பெரும் டிசைனர்கள், திறமையாளர் கள் கலந்து கொள்ளும் இவ்விழா விவசாயிகளின் நலனை முன்னிட்டு நடத்தப்படுகிறது. இதனை முன்னிட்டு ஷோ நடத்தும் அமைப்பாளர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். […]

Read More

இமயம் சென்று திரும்பிய ரஜினி உற்சாக வரவேற்பு வீடியோ

by on October 19, 2019 0

சன் பிக்சர்ஸுகாக ரஜினி நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்புக்கு முன்பாக இமயமலைக்கு ஒரு ஆன்மீக சுற்றுப்பயணம் சென்று வந்தார் ரஜினி.  அது அவருக்கு மன அமைதியையும், ஆன்ம பலத்தையும் தருவதாக அவர் நம்பிக்கை. அந்தப்பயணம் முடிந்து நேற்று சென்னை திரும்பிய ரஜினிக்கு விமானநிலையத்தில் உற்காச வரவேற்பு அளிக்கப்பட்டது.  அப்போது பேட்டியளித்த அவர், “ஈமயமலை பயணம் நன்றாக இருந்தது…” என்றார்.  ஆர்வமிகுதியில் ஒரு ரசிகர் எடுத்து ட்விட்டரில் வெளியிட்ட வீடியோ கீழே…  #WelcomeBackTHALAIVA பிழிஞ்சிட்டாங்க தலைவர. நாம அங்க […]

Read More

கைதில நடிக்க கார்த்திக்கு நிறைய தைரியம் – நரேன்

by on October 19, 2019 0

கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகும் ‘கைதி’ பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. வெளியீட்டுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ரசிகர்கள் டிரைலரை கொண்டாடி வருகின்றனர். ‘அஞ்சாதே’ புகழ் நரேன் படத்தில் இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதை டிரைலர் சொன்னது. அவருடன் பேசியதிலிருந்து… “நல்ல படத்திற்காக காத்திருந்தேன். நான் கடைசியாக நடித்த படம் ‘யூ டர்ன்’. அதற்குப் பிறகு அதர்வாவுடன் ‘ஒத்தைக்கு ஒத்தை’ படத்துல ஒரு கேரக்டர் நடிச்சிருக்கேன். சுசீந்தரன் சாரோட சாம்பியன் […]

Read More