July 13, 2026
  • July 13, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

நடிகர் விவேக் பிறந்தநாளை முன்னிட்டு பி டி செல்வகுமாரின் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

by on November 19, 2025 0

ஏராளமான பெண்களுக்கும் காமெடி நடிகர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்..! பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த ‘புலி’ படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். அந்த வகையில் சினிமா மூலம் சமூக அக்கறை கருத்துக்களை எடுத்துச் சொன்ன ஜனங்களின் […]

Read More

ப்ரண்ட்ஸ் படப்பிடிப்பில் சூர்யா ஜோதிகா காதலுக்கு தூது போனேன்..! – ரமேஷ் கண்ணா

by on November 18, 2025 0

*மீண்டும் வெளியாகும் விஜய்-சூர்யா நடித்த ‘ப்ரண்ட்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா* ஸ்வர்க்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் விஜய்-சூர்யா இணைந்து நடித்து 2001ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் 24 ஆண்டுகளுக்கு பின்னர் 4K தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் 21ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் B. வினோத் ஜெயின் வெளியீட்டில் மீண்டும் திரைக்கு வருகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு […]

Read More

கும்கி 2 திரைப்பட விமர்சனம்

by on November 17, 2025 0

வனத்தில் வழி தவறிய யானைக் குட்டி ஒன்று பள்ளத்தில் விழுந்து விடுகிறது. அதேபோல் அதே வனத்தின் ஊருக்குள் பெற்றவர்கள் சாராய வியாபாரிகளாக இருக்க, அவர்களின் மகனும் தனிமையை உணர்கிறான்.  இந்த இருவரின் தனிமையும் ஒன்று சேர்ந்து கூட்டாளிகளாக, அந்த நட்பு பந்தம் தொடர்கிறது.  சிறுவன் இளைஞராக வளர்ந்ததும் அந்த வேடத்தில் அறிமுக நாயகன் மதி தோன்றுகிறார். ஒரு கட்டத்தில் அந்த யானைக்குட்டி தொலைந்து போக நாயகன் மதியும் மேல் படிப்புக்காக வெளியூர் செல்ல வேண்டி வருகிறது. ஐந்து […]

Read More

மதறாஸ் மாஃபியா கம்பெனி திரைப்பட விமர்சனம்

by on November 16, 2025 0

வில்லனாகவும் இருக்க வேண்டும், அதே நேரத்தில் காமெடியும் செய்ய வேண்டும் என்கிற பாத்திரத்தில் சென்ற தலைமுறைக்கு அசோகன் இருந்தார். அந்த இடத்தை இப்போது நிரப்பிக் கொண்டிருப்பவர் ஆனந்தராஜ்.  அவரை எத்தனை மிரட்டலாகவும் காட்டலாம் அதே நேரத்தில் அவரைக்காட்டி சிரிக்கவும் வைக்கலாம். இந்த விஷயமே இயக்குனர் ஏ. எஸ்.முகுந்தனை அவரை நோக்கித் திருப்பி விட்டிருக்கிறது. சென்னையின் முக்கிய ரவுடியாக இருக்கும் ஆனந்தராஜ், ஏரியா ஏரியாவுக்கு ஆட்களைப் பிரித்து அவர்களுக்கு அசைன்மென்ட் கொடுத்து, அமௌன்ட்டும் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தாதாயிசத்தை ஒரு […]

Read More

காவேரி மருத்துவமனை தொடங்கிய ‘மெட்டபாலிக் வெல்னஸ்’ முன்னோடி மையம்..!

by on November 16, 2025 0

‘டிஷ்யூம் டிஷ்யூம் டயாபடீஸ் 2025’ – 7வது பதிப்பில், முன்னோடி ‘மெட்டபாலிக் வெல்னஸ் மையத்தை’ தொடங்கிய காவேரி மருத்துவமனை..! சென்னை, நவம்பர் 16, 2025: ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை, தனது அதிநவீன ‘காவேரி மெட்டபாலிக் வெல்நஸ் மையத்தை’ தொடங்கியுள்ளது. இது, உடல் பருமன், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான கோளாறுகளுக்கு ஒரு ஒருங்கிணைந்த, பல்துறை அணுகுமுறையுடன் தீர்வுகாண்பதற்கான அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முழுமையான மையமாகும். நீரிழிவு தடுப்பு மற்றும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஊக்குவிக்கும் […]

Read More

தாவுத் திரைப்பட விமர்சனம்

by on November 16, 2025 0

வடசென்னையின் சினிமா வழக்கப்படியே தாதாயிச செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் சாய் தீனா மற்றும் அபிஷேக். இவர்களின் உபரி தொழில்களை தாண்டி முக்கியமான தொழில் மும்பையில் இருக்கும் தாவுத் என்பவர் கைமாற்றச் சொல்லும் போதை மருந்தைக் கை மாற்றி விடுவது.  அப்படி தாவுதின் பொருள்களை தவறாக கையாடல் செய்தால் அவர்களுக்கு கிடைக்கும் பரிசு மரணம்தான். அத்தனை கொடூரமான தாவுத் யார் என்பதை அறிய ஒரு பக்கம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தாவுதின் கைமாற்றும் அசைன்மெண்டை […]

Read More

ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகள் எங்களுக்கு கிடைத்த ஆசீர்வாதம்..! – ரியோ ராஜ்

by on November 15, 2025 0

ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த ‘ஆண்பாவம் பொல்லாதது’ படக்குழு..! டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ் -மாளவிகா மனோஜ் -ஆர் ஜே விக்னேஷ் காந்த்- ஷீலா- ஜென்சன் திவாகர் -ஆகியோரின் நடிப்பில் தமிழகம் முழுவதும் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிட்ட ‘ஆண்பாவம் பொல்லாதது’ எனும் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தயாரிப்பாளர்கள் டி. கே. டி. நந்தகுமார் […]

Read More

அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையின் முன்முயற்சி – ‘ஹேப்பி ஹார்ட்ஸ்’ அறிமுகம்..!

by on November 14, 2025 0

அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையின் தனித்துவமிக்க முன்முயற்சியான ‘ஹேப்பி ஹார்ட்ஸ்’ அறிமுகம் – உற்சாகமூட்டும் மகிழ்ச்சி, அன்பைப் பொழியும் உறவு, அக்கறையுடனான பாசத்தை எல்லோரிடத்திலும் உருவாக்கும் மாபெரும் முன்முயற்சி..! சென்னை, நவம்பர் 13, 2025: அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை (Apollo Children’s Hospital) குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் வகையில், அப்போலோ ஷைன் அறக்கட்டளையுடன் (Apollo Shine Foundation) இணைந்து, ’ஹேப்பி ஹார்ட்ஸ்’ [Happy Hearts] என்னும் இதயங்களை அன்பினால் நெகிழ வைக்கும் ஒரு தனித்துவமிக்க முன்முயற்சி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. […]

Read More

‘தீயவர் குலை நடுங்க’ எனக்கு முக்கியமான படம்..! – ஆக்சன் கிங் அர்ஜுன்

by on November 14, 2025 0

‘ஆக்சன் கிங்’ அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும், ‘தீயவர் குலை நடுங்க’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ! ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரிப்பில், ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில்,  அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அதிரடி ஆக்சன்  திரில்லராக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தீயவர் குலை நடுங்க’.   இப்படம்  வரும் நவம்பர் 21  ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் […]

Read More

காந்தா திரைப்பட விமர்சனம்

by on November 13, 2025 0

சாந்தாவாக ஆரம்பித்து காந்தாவாக நகர்ந்து மீண்டும் சாந்தாவாகவே முடியும் கதை.  அதற்குள் சில பல ஈகோ மோதல்கள், பொறுப்புணர்வு மிஞ்சிப்போன கோபம், காதல் கண்ணை மறைத்த குரு பக்தி, பழி தீர்க்கும் உணர்வு இவை எல்லாம் கலந்து சொல்லப்பட்ட சுவாரஸ்யமான படம்தான் இது. டைட்டிலின் போது ஒரு துப்பாக்கி வெடித்து விட, சுடப் போவது யார், உயிர் விடப் போவது என்ன காரணம் என்று கதை நகர்கிறது. கதை நடப்பது இப்போதல்ல 50 களின் காலத்தில். சமுத்திரக்கனி […]

Read More