September 27, 2026
  • September 27, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

பா இரஞ்சித் இயக்கும் சார்பட்டா பரம்பரையும் வட சென்னை வாழ்வியல்தான்

by on December 2, 2020 0

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வந்த திரைப்படத்திற்கு “சார்பட்டா பரம்பரை” என்று பெயர் வைத்திருக்கிறார்கள். வடசென்னை பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வியலுக்குள் பிரிக்க முடியாத விளையாட்டாக இருக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து முழுக்க முழுக்க அனல் பறக்கும் ஆக்சன் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித். இந்த திரைப்படத்திற்காக நடிகர் ஆர்யா கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தனது உடலமைப்பை முற்றிலுமாக மாற்றிக்கொண்டு நடித்திருக்கிறார். அவர் மட்டுமல்லாமல், அவரோடு நடித்திருக்கும் நடிகர்கள் ஜான் கோகேன், கலையரசன், சந்தோஷ் பிரதாப், […]

Read More

பிரபல இந்தி நடிகர் 52 வயதில் திடீர் மரணம்

by on December 1, 2020 0

🎬கடந்த, 1990ல் வெளியான, ஆஷிக்கி ஹிந்தி திரைப்படத்தின் கதாநாயகன் ராகுல் ராய், 52, நேற்று காலமானார். ‘எல்.ஏ.சி., லிவ் தி பேட்டில் இன் கார்கில்’ திரைப்படத்தின், ‘ஷூட்டிங்’ நேற்று முன்தினம் நடந்தது.அப்போது, தளத்தில் இருந்த ராகுல் ராய்க்கு திடீர் பக்கவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐ.சி.யு.,வில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று பிற்பகல், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

Read More

வெற்றிமாறன் இயக்கும் ஜெயமோகன் கதையில் பாரதிராஜா சூரி

by on December 1, 2020 0

இயக்குனர் வெற்றிமாறன் நகைச்சுவை நடிகர் சூரி யை கதாநாயகன் ஆக்கி ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் என்று கடந்த ஒரு வருடமாகவே சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் இதுகுறித்த தகவல் ஒன்று வெளிவந்திருக்கிறது. இலக்கியத் தரம் வாய்ந்த கதைகளை படமாக்கும் வல்லமை பெற்ற வெற்றிமாறன் இந்த படத்துக்காக எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை அடியொற்றியே திரைக்கதை அமைத்திருக்கிறார் என்று தெரிகிறது. இந்தப் படத்தில் சூரி ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் வேடம் ஏற்கிறாராம். அவருடன் இயக்குனர் பாரதிராஜா ஒரு […]

Read More

பாபா ஆம்தே பேத்தி விஷ ஊசி போட்டுக்கொண்டு தற்கொலை

by on November 30, 2020 0

பாபா ஆம்தேவின் பேத்தியும், புகழ்பெற்ற சமூக ஆர்வலராக அறியப்படும் மருத்துவர் சீதள் ஆம்தே கராஜ்கி தற்கொலை செய்து கொண்டார். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சந்திரபூரில் அமைந்துள்ள ஆனந்தவன ஆசிரமத்தில் திங்கள்கிழமை காலை அவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த நிலையில் கிடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், அவர் இன்று காலை, தனக்குத் தானே விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்துகொண்டதாக வரோரா காவல்நிலைய அதிகாரி பி. பென்டார்கர் தெரிவித்துள்ளார். உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் […]

Read More

ரசிகர்களுக்காக விஜய் தொடங்க இருக்கும் யூ டியூப் சேனல்

by on November 29, 2020 0

விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் யூட்யூப் சேனல்துவங்க முடிவு செய்து விட்டாராம் விஜய். காரணம், தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வருகிறது. அந்த நேரத்தில் யாரும் தனது பெயர் மற்றும் படத்தை பயன்படுத்தக்கூடாது என தெளிவாக உள்ளார். இதற்காகவே, விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் யூடிப்சேனல் தொடங்க உள்ளார். தொடங்கி என்ன செய்யவிருக்கிறார் தெரியுமா? விஜய் அறிவிக்கும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்யும் சமூக பணிகள் குறித்தும் அதில் தெரிவிக்கப்படும் […]

Read More

தமிழில் அஜித்தின் மகள் இப்போது தெலுங்கில் நாயகி

by on November 28, 2020 0

குழந்தை நட்சத்திரமாக தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். தல அஜித்துடன் விஸ்வாசம் ,என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களில் மகளாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் . வழக்கமாக முன்னணி நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு போட்டோஷூட் நடத்திய ரசிகர்களை அதிர்ச்சியடைய வைப்பார் .அந்த போட்டோஷூட் எல்லாம் ஒரு ஹீரோயின் வாய்ப்புக்காக தான் . தற்போது அது நிறைவேறி விட்டதாம். இந்தாண்டு மார்ச் மாதத்தில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் “கப்பேல்ல”.இதில் அன்னா பென் , […]

Read More

கன்னி ராசி படத்தை வெளியிட தடை விதித்தது நீதிமன்றம்

by on November 27, 2020 0

நடிகர் விமல் நடிப்பில் உருவான திரைப்படம் ‘கன்னிராசி’. கிங் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தின் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரிக்கான விநியோக உரிமை ‘மீடியா டைம்ஸ்’ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இதற்காக படத்தயாரிப்பாளர் ஷமீன் இப்ராஹிமுக்கு 17 லட்சம் ரூபாயை மீடியா டைம்ஸ் நிறுவனர் அல்டாப் ஹமீது வழங்கியுள்ளார். ஆனால், ஒப்பந்தத்தின்போது உறுதி அளித்ததைப் போல 2018-ம் ஆண்டுக்குள் படத்தைத் தயாரிப்பாளர் ஷமீன் இப்ராஹிம் வெளியிடவில்லை. இந்நிலையில், ‘கன்னிராசி’ திரைப்படம் இன்று (27/11/2020) வெளியாகும் […]

Read More

முதல்வரிடம் பாராட்டு பெற்ற மூத்த அமைச்சர்

by on November 27, 2020 0

நிவர் புயலின் தாக்கம் சென்னைவாசிகளை பல முனைகளிலும் நின்று தாக்குகிறது. இந்த சூழலில் வீடுகளை இழந்தோர், உணவில்லாமல் தவிப்போர், தத்தளிக்கும் மீனவர்கள், ஆதரவில்லாத முதியவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் அரசின் உதவிகளை எதிர்பார்த்து நிற்க… அரசின் உதவிகளை எதிர் பார்த்துக் கொண்டிராமல் தன் சொந்த செலவிலேயே உதவிகளைச் செய்து களத்தில் நிற்கிறார் மூத்த அமைச்சர் ஒருவர். வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு ரெயின் கோட் அணிந்து தண்ணீர் சூழ்ந்த பல்வேறு பகுதிகளுக்கும் நேரடியாக சென்று குறைகளை கேட்பதும், […]

Read More

இந்திய அரசியலமைப்பு சட்டம் சமர்ப்பிக்கப்பட்ட நாள் இன்று

by on November 26, 2020 0

வரலாற்றில் இன்று ( 26.11. 1949) இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட தினம்.  அண்ணல் டாக்டர் அம்பேத்கர் தலைமையில் 300 நிபுணர்கள் கொண்ட அரசியல் அமைப்பு குழுவால் (Constitutional Assembly) உருவாக்காப்பட்ட இந்த அரசியல் அமைப்பு சட்டம் பின்னர் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு அமலுக்கு வந்த நாள்தான் 1950 ஜனவரி 26ம் நாள்! இது தான் இதுவரை உலக நாடுகளில் எழுதப்பட்டதில் மிக நீண்ட அரசியலமைப்பாகும். இதில் மொத்தம் 22 பிரிவுகள், 12 அட்டவணைகள், 94 திருத்தங்கள், […]

Read More