September 27, 2026
  • September 27, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

கால்பந்தாட்ட நட்சத்திர வீரர் மாரடோனா மாரடைப்பால் காலமானார்

by on November 25, 2020 0

அர்ஜென்டினா நாட்டின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் டீகோ மாரடோனா. இவர் 1986 ஆம் ஆண்டில் உலகக்கோப்பையை அர்ஜென்டினா வெல்ல மிகவும் துணை புரிந்தார். அதன் மூலம் உலகப் புகழையும் பெற்றார். எல்லா காலங்களிலும் சிறந்த வீரராக மதிக்கப்படும் மாரடோனாவுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு மூளையில் அறுவை சிகிச்சை நடந்தது. அந்த சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார் அவர். இந்நிலையில் அவருக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் உயிரிழந்தார். மாரடோனாவுக்கு வயது 60. பல முக்கிய உயிர்களை […]

Read More

சென்னை மாநகராட்சியின் 24×7 கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ள…

by on November 24, 2020 0

பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் 24 x 7 இயங்கும் கட்டுப்பாட்டு அறை உள்ளது. இந்தக் கட்டுப்பாட்டு அறை 75 பணியாளர்களுடன் பொதுப்பணித்துறை, போக்குவரத்துக் காவல்துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியம் மற்றும் பிற துறைகளின் அலுவலர்களுடன் இயங்கி வருகிறது. இந்தக் கட்டுப்பாட்டு அறையின் 044-25384530, 044-25384540 என்ற தொலைபேசி எண்களும், 1913 புகார் மையத்தின் எண்ணும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் […]

Read More

நேரம் பிரேமம் படங்களின் இயக்குனர் பெயரில் பெண்களிடம் மோசடி

by on November 24, 2020 0

தமிழ் மற்றும் மலையாளத்தில் ஹிட்டான நேரம் படத்தை இயக்கியவர் அல்போன்ஸ் புத்திரன். இவர் பின்னர் மலையாளத்தில் ப்ரேமம் என்ற மெகா ஹிட் படத்தை இயக்கி பெரும் வரவேற்பை பெற்றிருந்தார். இந்நிலையில் தனது பெயரில், துணை நடிகைகளிடமும் பெண்களிடமும் போனில் பேசி சிலர் ஏமாற்றி வருவதாக இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் புகார் கூறியுள்ளார். ‘9746066514’, ‘9766876651 என்ற எண்களில் இருந்து என் பெயரை சொல்லி சிலர் பேசுகிறார்கள். நான் இந்த எண்களில் கூப்பிட்டு பார்த்தால் , என்னிடமே அல்போன்ஸ் […]

Read More

அட்லி தயாரிக்கும் அந்தகாரம் நாளை நெட்பிளிக்ஸில் வெளியாகிறது

by on November 23, 2020 0

அர்ஜுன் தாஸ், பூஜா, வினோத் நடித்துள்ள படம் ‘அந்தகாரம்’.  இயக்குநர் அட்லி முதல் முறையாக தயாரித்துள்ள இந்த அந்தகாரம் படத்தை விக்னராஜன் என்பவர் இயக்கி உள்ளார். கைதி, மாஸ்டர் படங்களில் மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தி உள்ள அர்ஜுன் தாஸ் மற்றும், நந்தா, நான் மகான் அல்ல படத்தில் காட்டுத்தனமான நடிப்பை வெளிக்காட்டிய வினோத் கிஷன் ஆகிய இருவரும் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளனர். அர்ஜுன் தாஸ், ‘பெருமான்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். அதன் பின்னர் […]

Read More

அதுல்யா ரவியின் அட்ராசிட்டியில் குமுறும் தயாரிப்பாளர் இயக்குனர்

by on November 22, 2020 0

நவ-27ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாக இருக்கும் படம் ‘என் பெயர் ஆனந்தன்’. ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாகவும் அதுல்யா ரவி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு நான்கு முறை சிறந்த படத்திற்கான விருதுகளை வென்றுள்ள இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில், நாயகி அதுல்யா ரவி பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்று ஒரு தகவல் வெளியானது. இதுகுறித்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தரப்பில் விசாரித்தபோது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தன. இந்தப்படத்தில் […]

Read More

தமிழகத்தில் கொரோனா குறைந்தது குடிநீர் தட்டுப்பாடு தீர்ந்தது – முதல்வர்

by on November 19, 2020 0

சேலம் மாவட்டம் வனவாசி அரசு பல்வகை தொழில் நுட்ப கல்லூரி வளாகத்தில் நடைபெறும் 100 வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டத்தில் பயன்பெறும் ஏரிகளை புனரமைத்து மேம்படுத்தும் பணிகள் மற்றும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, வனவாசி அரசு பலவகை தொழில் நுட்ப கல்லூரி விடுதி கட்டிடங்கள் மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். விழாவில் பல்வேறு […]

Read More