March 28, 2024
  • March 28, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • மாதவனின் நன்றிக்கு பதில் அன்பு செய்த துல்கர் சல்மான்
January 6, 2021

மாதவனின் நன்றிக்கு பதில் அன்பு செய்த துல்கர் சல்மான்

By 0 420 Views

மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் அமேசான் ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான மாறா வரும் ஜனவரி8, 2021 அன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

மேலும் இப்படம் 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் காணக்கிடைக்கும். திலிப் குமார் இயக்கத்தில், ப்ரமோத் பிலிம்ஸ் சார்பில் ப்ரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஷ்ருதி நல்லப்பா தயாரித்துள்ள இந்த தமிழ் காதல் இசைப்படம் எதிர்பார்க்கப்படுகிற ஒரு திரைப்படமாக உள்ளது.

துல்கர் சல்மான் நடித்த மலையாளத் திரைப்படமான சார்லி-யின் தழுவலே மாறா. அசல் படத்தின் கருவை அழகான முறையில் எடுத்து மாறா மற்றும் பாருவின் புதிய மற்றும் தனித்துவமான ஒரு மாயாஜால உலகை நமக்கு இப்படம் தருகிறது.

இதற்கான அன்பு மற்றும் பாராட்டை வழங்கும் வகையில் துல்கர் சல்மான் (எ) சார்லி நினைவுகளால் நெய்த மனமுருகச் செய்யும், உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களின் இதயத்தை உடனடியாக தொடும் ஒரு கவிதையை மாறாவுக்காக வாசித்திருந்தார்.

பதிலுக்கு மாதவன் தனது நண்பர் துல்கரின் விசேஷ கவிதைக்கு நன்றி செலுத்தும் விதமாக ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார். இயக்குநர் திலீப்பும் தனது மகிழ்ச்சியை சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார்.


https://mobile.twitter.com/dhilip2488/status/1346421292166041601

மாதவனின் இனிமையான வாழ்த்துக்கு பதிலளிக்கும் வகையில், துல்கர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “Thank you dearest Maddy-na. You’ve been a huge inspiration! I was really touched when you & the team wanted to include me/Charlie in some way in #Maara! All of us from team #Charlie wish team #Maara only the best. We cannot wait to watch your version! love & prayers!” என்று பதிவிட்டுள்ளார்.