July 5, 2026
  • July 5, 2026
Breaking News

Articles Posted by G Tamil News

பொள்ளாச்சி ஜெயராமன் மீது தாக்குதல் – எடப்பாடி பழனி்சாமி அறிக்கை

by on December 21, 2021 0

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கிணத்துக்கடவு தாலுக்கா, கோதவாடி பஞ்சாயத்தில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் உள்ள கோதவாடி குளம் மற்றும் வரத்துக் கால்வாய், 2017-2018-ம் ஆண்டு குடிமராமத்துத் திட்டத்தின் கீழ், கிராம மக்களின் பங்களிப்புடன் தூர் வாரப்பட்டன.   இந்த குளம் நேற்று நிரம்பியதை அடுத்து வருண பகவானுக்கு […]

Read More

மாநாடு வெற்றி விழாவுக்கு வராத சிம்புவுக்கு எஸ் ஏ சி சூடு

by on December 21, 2021 0

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான மாநாடு திரைப்படம் கடந்த நவ-25ல் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக இந்த படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் இந்த படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என அனைவரும் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்வில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேசும்போது, “சமீபகாலமாக ஓடிடி வந்துவிட்டது, கொரோனா வந்துவிட்டது, […]

Read More

கலைஞர் கருணாநிதியின் தனி உதவியாளராக இருந்த சண்முகநாதன் காலமானார் 

by on December 21, 2021 0

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் (80) உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் அவர் உயிரிழந்தார்..சுமார் 48 ஆண்டுகள் கலைஞரின் பி.ஏ-வாக இருந்த சண்முகநாதன் கலைஞர் முதல்வராக இல்லாத போது அவரது உதவியாளராக பணியை தொடர தனது அரசு பதவியை துறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கலைஞரின் வாழ்க்கையில் நிழலாக இருந்தவர் விண்ணுலகிலும் அவ்ருக்கு உதவ சண்முகநாதன் காலமாகி விட்டார் என்றுதான் தோன்றுகிறது  

Read More

நான் தயாரிக்கும் படம் தவறான அரசியல் பேசக் கூடாது – பா.இரஞ்சித்

by on December 20, 2021 0

சமுத்திரக்கனி கதை நாயகனாக நடிந்திருக்கும் ரைட்டர் படத்தை பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக  பணியாற்றிய பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கியுள்ளார் .இந்த படம் வருகின்ற டிசம்பர் 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது . இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது .நிகழ்ச்சியில் இயக்குனர் பிராங்ளின்,  சமுத்திரகனி, இனியா, மகேஷ்வரி, லிசி ஆண்டனி, ஹரி, பாபு, சுப்பிரமணியம் சிவா, கவிதாபாரதி, ஜி எம் சுந்தர். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, ஒளிப்பதிவாளர் பிரதிப் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்வில் பா .ரஞ்சித் […]

Read More

அரசு ஊழியர்கள்தான் அரசாங்கம் – அரசு ஊழியர் மாநில மாநாட்டில் முக ஸ்டாலின்

by on December 19, 2021 0

அரசு ஊழியர்கள் சங்கத்தின் 14-வது மாநில மாநாடு சென்னை மாதவரத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதில் இருந்து… “அரசு ஊழியர்கள் தான் அரசாங்கம். இல்லை என்றால் அரசாங்கமே இல்லை. அரசு ஊழியர்களுக்காக திமுக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் அரசு ஊழியர்களுக்காக ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். அரசுக்கு கடும் நெருக்கடியான நிதிசூழல் இருப்பினும் அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலனை கருத்தில் கொண்டு 1.1.2022 முதல் அகவிலைப்படி […]

Read More

வரிசி படத்தின் திரை விமர்சனம்

by on December 19, 2021 0

காலம்தோறும் காமுகர்களுக்குக் குறைவில்லை. அதுவும் நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்ய நேரும் ஐடி துறை பெண்களுக்கு இருக்கும் சவால்கள் பெரிதானவை. அப்படி ஐடி துறையில் பணியாற்றும் பெண்கள் கடத்தி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட, அந்த வழக்கை சிபிஐ அதிகாரி கிருஷ்ணா விசாரித்துக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் நாயகன் கார்த்திக் தாஸ் நாயகி சப்னா தாஸ் உள்ளிட்ட ஐடி துறை இளைஞர்கள் அந்தத் துறையில்புது வகையிலான மென்பொருள்களை உருவாக்கி வருகிறார்கள். இந்நிலையில் காமுகனால் கதாநாயகியும் கடத்தப்பட, அவரை […]

Read More

உதவி இயக்குனர்களுக்கு உதவிக்கரமும் விருதும்

by on December 19, 2021 0

டைரக்டர்ஸ் கிளப் என்ற வாட்ஸப் செயலியில் உதவி இயக்குநர்களுக்காக இயங்கி வரும் குழு சார்பில் நடந்த ஆண்டு விழாவில் இந்தியாவிலேயே முதல் முறையாக உதவி இயக்குநர்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டது. கடந்த 5 வருடங்களுக்கு முன்னதாக உதவி இயக்குநர் சக்தி அவர்களால் வாட்ஸ் ஆப் செயலியில் இக்குழு ஆரம்பிக்கப்பட்டது. இக்குழுவில் தமிழ் சினிமாவின் உதவி இயக்குநர்கள் உறுப்பினர்களாக இணைந்தனர். இயக்குனர்கள மணிரத்னம், SS ராஜமௌலி, ஒளிப்பதிவாளர்கள் சந்தோஷ் சிவன், ரவிவர்மன், கதாநாயகர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் […]

Read More

மணிகண்டன் மூலம் மீண்டும் அமைந்த வாய்ப்பு – சரவண சுப்பையா நெகிழ்ச்சி

by on December 18, 2021 0

ஹீரோ சினிமாஸ். சி.மணிகண்டன் வழங்க கதிரவன் கதாநாயகனாக நடிக்கும் படம் மீண்டும். இப்படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி  சரவணன் சுப்பையா இயக்கி உள்ளார். இவர் அஜீத்குமார் நடிப்பில் பரபரப்பாக பேசப்பட்ட வெற்றிப்படமான  சிட்டிசன் படத்தை இயக்கியவர்.  மீண்டும் படத்தில் கதிரவன் ஜோடியாக அனகா நடித்திருக்கிறார். இவர் டிக்கிலோனா, நட்பே துணை படங்களில் நடித்தவர்.  பிரணவ் ராயன், அனுராதா, துரை சுதாகர், சுபா பாண்டியன்,  அபிதா செட்டி,  யார் கண்ணன், எஸ்.எஸ்.ஸ்டான்லி, சுப்ரமணியம் சிவா, தர்ஷினி, இந்துமதி, […]

Read More